கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: August 4, 2016

9 கதைகள் கிடைத்துள்ளன.

ஆண் மரம்

 

 அம்மா என்று வலியால் மோகன் அலறியபோது போலீஸ்காரரின் குண்டாந்தடி மோகனின் உடம்பில் எங்கே பட்டது என்பது சுசிக்குத் தெரியாமலிருந்தது. அநேகமாக முதுகில் எங்கோ பட்டிருக்க வேண்டும் என்று நினைத்தாள். அவன் உடம்பைக் கயிற்றைச் சுருட்டிக் கொள்வது போல் சுருட்டிக்கொண்டு தரையில் விழுந்தான். போலீஸ்காரர் குண்டாந்தடியை மறுபடியும் ஓங்கியபோது ” வேண்டாங்க .. வுட்டுடங்க “ என்றாள் சுசி. சற்றே வியர்த்திருந்த போலீஸ்காரர் வலது கையை ஒரு வித வலியைத் தாங்குவது போல் கீழே கொண்டு வந்தார். கிரேனிலிருந்து


விநோதன்

 

 லஷ்மி அமெரிக்காவில் கலிபோனியாவில் உள்ள பல்கலைக் கழகம் ஒன்றின் பௌதிக வியல் துறையின் விண்வெளி ஆராய்ச்சிப் பகுதியில், கணனித்துறையில் , கொம்பியூட்டர் புரொகிராமராக வேலை செய்து கொண்டிருந்தாள். லஷ்மியின் பெற்றோர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த பழமையில் ஊறிய ஐயர் சாதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் குடும்பத்தில் அவள் தனிக் குழந்தை.. எவனோ ஒரு சாஸ்திரி லஷ்மி; பிறந்தவுடன் அவளின் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு இவள் திருமணத்துக்குப் பி;ன் பெரும் பணக்காரி ஆவாள் எனக் கணித்துச் சொன்னாhன் என்பதற்காக லஷ்மி என்ற பெயரை


கற்றுக் கொள்வதற்கு!

 

 மூன்றுவார விடுமுறை கிடைத்தது. வியட்நாம் போவதற்கு விரும்பினேன். அவுஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்ந்த பின்பு புறப்படும் முதல் பயணம். வியட்நாம் – வல்லரசான அமெரிக்காவை நடுங்க வைத்து நிமிர்ந்த தேசம். ஆனால் நண்பன் ‘வான் மான் நூஜ்ஜின்’ அப்படியல்ல; எப்போதுமே எங்களைச் சிரிக்க வைப்பான். ஒவ்வொரு ஈஸ்டர் விடுமுறையின் போதும் அவனது அம்மாவிற்குச் சுகமில்லாமல் வந்துவிடும். “அம்மாவுக்குச் சுகமில்லை!” அவனும் லீவைப் போட்டுவிட்டு அவுஸ்திரேலியாவிலிருந்து புறப்பட்டு தனது தாய்நாடான வியட்நாமிற்குப் போய்விடுவான். இந்தமுறை நானும் அவனுடன் கூடச் சென்றேன். போனவிடத்தில்


அந்தராத்மாவின் ஆட்டம்

 

 “டக்கரடக்கரடக்கர” அந்தரத்தில் அந்தக் குழந்தை கயிற்றில் மிதந்தபடி வித்தையாடிக் கொண்டிருக்க கீழே குழந்தையின் தாயார் – அப்படித்தான் இருக்க வேண்டும் – ஒடிசலான உடல் அமைப்போடு சர்க்கஸ் பெண்ணின் உடையுடன். பம்பைக் கொட்டு ஒன்றை கழுத்தில் தொங்கவிட்டு தாளம் தப்பாமல் அடித்துக் கொண்டிருந்தாள். “இப்படி ஒரு காலை நேரத்தில், நட்டநடு வீதியில் அதுவும் பஸ் ஸ்டாண்டில் இந்த கூத்தை நடத்தவிடலாமா? பச்சை மண்ணை அந்தரத்தில் ஆடவிட்டு எப்படி ரசிக்க முடிகிறது?’ தலையை குலுக்கிக் குலுக்கி பதிவான காட்சிப்


திருவிழாவில் தொலைந்தவள்

 

 ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், மிகப் பிரமாண்டமாகத் தொடங்கவிருந்த புத்தகத் திருவிழாவில்… பிரபாகரன் என்கிற பிரபா வேலைபார்க்கும் ‘எழுதுகோல்’ பதிப்பகமும் ஒரு ஸ்டால் பிடித்தது. அத்தனை பதிப்பகத்தினரும் குட்டி யானைகளில் வந்து குவிந்த புத்தக பண்டல்களைப் பிரித்து மேய்ந்து அடுக்கி அலங்கரிக்கத் தயாராகினர். ‘எழுதுகோல்’ பதிப்பகத்தில் பணியாள் எனப் பார்த்தால், பிரபா மட்டுமே. ஒவ்வொரு பிரின்டிங் பிரஸ்ஸுக்கும் சென்று புத்தகப் பார்சல்களை அள்ளிக் கொண்டுவந்து ரகவாரியாகப் பிரித்து இரும்பு ரேக்குகளில் அடுக்க வேண்டும். அச்சக மை வாசனையோடு அரசியல், ஆன்மிகம்,