Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: July 2016

50 கதைகள் கிடைத்துள்ளன.

எதிர்பாராதது

 

 ஈழத்தில் இருந்து புலம் பெயர்ந்து கனடாவில் வாழும் தமிழ் மக்களின் இளம் சந்ததிகளிடையே திருமணம் என்பதுஇருவர் மனங்கள் ஒத்துப்போகும் தேர்வாக இருக்கிறது. சிலர் அத்தேர்வை எவ்வளவு கவனமாக நடத்தினாலும் சிலசமயங்களில் தோல்வியடைந்து விடுகிறார்கள். அவர்கள் நினைப்பது ஒன்று சில சமயம் நடப்பது வேறொன்று. பல்லினங்கள் வாழும் கனடாவில் பெண்களையோ அல்லது ஆண்களையோ இல்லறவாழ்வுக்குத் தேர்ந்தெடுப்பதில் எமது இளம் சந்ததி எவ்வளவு கவனமாக செயல்படுகிறார்கள் தெரியுமா? தீர்மானங்கள் எடுப்பதற்கு பெரிதும் தயங்குகிறார்கள். வயது ஏறுகிறதே என்ற கவலை தாயகத்தில்


சண்முகவடிவு

 

 ‘கண்டதைச் சொல்லுகிறேன், உங்கள் கதையைச் சொல்லுகிறேன்.இதைக் காணவும், கண்டு நாணவும் உமக்குக் காரணம் உண்டென்றால் அவமானம் எனக்கு முண்டோ’? இந்தப் பாடல் வரிகள் பல நாட்கள் என்னை அவஸ்தைப் படுத்திய பல சம்பவங்கள் குறித்த வரிகளாக உள்ளத்தில் பதிந்தது. அந்த அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியர் இல்லை.மாற்றுப் பணியில் தொடர்ந்து ஓராண்டாக தலைமை ஆசிரியர் இருந்த நிலையில் பள்ளியின் மிக மூத்த ஆசிரியர் முருகன் பொறுப்புத்தலைமை ஆசிரியராக இருந்தார். அவர் ஒன்றும் மோசமான மனிதர் இல்லை. தவறு


சனியன் என்னைக் காதலிக்கிறதா…?

 

 அந்த சிறிய அறையில் அமைதி நிலவியிருக்க, தலைக்குமேல் சுற்றிய மின் விசிறியின் சத்தம் தெளிவாய்க் கேட்டுக்கொண்டிருந்தது. அதையும் மீறி வேர்த்துக்கொண்டிருந்தான்அவன். அவனுக்குப் பெண் பார்க்க வந்திருக்கிறார்கள். பெண்ணை கூப்பிட்டு விட்டிருந்த நொடிகளில் நாம் உள் நுழைந்துவிட்டோம். அதுதான் இந்த அமைதி.. கொலுசும் வளையலும் ஒன்றாய் ஆர்ப்பரிக்க பெண் கையில் காபித்தட்டுடன் வந்தாள். அந்த வளையல்களின் சினுங்கல்களிலேயே நித்யாவின் இதயம் படபடத்தது. தொடரும் முன் நான் யார்? என் பின்புலம் என்ன? என் பிரச்சினை என்ன? தெரிந்து கொள்ளுங்கள்


பெரியவர்

 

 “சிங்கப்பூரில் சின்ராசு” என்ற திரைப்படத்தின்இறுதிக்கட்ட படப்பிடிப்பை வெற்றிக்கரமாகமுடித்துவிட்டு, படக்குழுவினர் ஊருக்கு கிளம்பஆயத்தமானார்கள். உதவி இயக்குநர்கள் எல்லாவற்றையும் சரிபார்த்துவிட்டு, இயக்குநர் வாணிதாசனிடம்,” சார், எல்லோரும்தயாராயிருக்காங்க.. இப்ப விமான நிலையம் போனா.. நேரம் சரியா இருக்கும், நீங்க தயாரா..?” “நான் ரெடி… வாங்க…” என வாணிதாசன் காரில் ஏறிஅமர்ந்தார். கார் சாங்கி விமான நிலையம் நோக்கி விரைவு சாலையில்குலுங்காமல் விரைந்து சென்றது. தண்ணீரில் நீந்திசெல்லும் மீன் குஞ்சுப் போல தார் ரோட்டில் கார் வழுக்கிகொண்டு சென்றது. என்னை உங்களுக்கு முதலில்


உயர் பாதுகாப்பு வலயம்

 

 யோகேஸ்வரி அன்று அவசரமாகவே எழும்பி இருந்தாள். தன்னிடம் இருந்த ஒரே ஒரு புடவையையும் இன்றைக்கு உடுத்தவேன்டுமென்று நேற்றுதான் துவைத்துப்போட்டிருந்தாள்.வழமைக்குமாறாக இரண்டுதடவை சன் லைட் சவர்க்காரம் போட்டுத் துவைத்திருந்தாள். நல்லவேளை நேற்று மழை பெய்யாததால் அது காய்ந்து இன்றைக்கு உடுக்கத் தயராகி இருந்தது. `டக்கென உடுப்ப போட்டுத்து வா பிள்ள‌` என்று ஸ்டெல்லாவை நச்சரித்துக்கொண்டிருந்தாள் யோகேஸ்வரி. ஸ்டெல்லா , யோகேஸ்வரியின் மகள். ஸ்டெல்லா , வயிற்றில இருக்கும்போது முள்ளிவாய்க்காலில் கடைசி யுத்தம் நடந்துகொன்டிருந்தது. யோகேஸ்வரியின் சொந்த இடம் தெள்ளிப்பளை


அட்டைப்பட முகங்கள்

 

 அரவிந்தன் முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டழுதான்.’யாழ்ப்பாணத்தில் இன்னுமொருதரம் குண்டுவீச்சு. தேவாலயம் தரைமட்டம், இருபது முப்பது தமிழ் மக்கள் இறந்திருக்கலாம்’.இலங்கைப் பத்திரிகையை வாசித்ததும் அடக்க முடியாத சோகம் அழுகையாக மாற தான் ஒரு ஆண் என்பதையும் மறந்து அவன் அழுகிறான். தேவாலயத்துக்கு அருகிலிருந்த குடும்பத்தை அவனுக்குத் தெரியும். அங்கு குடிவாழ்ந்த ‘தேவசகாயம் மாஸ்டரும் அவரின் குடும்பமும்,இறந்த போன தமிழர்களில் சிலராக இருக்கக்கூடாது’. அவன் தனக்குள்ப் பிரார்த்தித்துக் கொள்கிறான்.அவனின் நினைவு தெரிந்த நாள் முதல் நெருங்கிப் பழகிய குடும்பம் அது. அந்தக்


ஓட்டுப் போடும் பொம்மைகள்

 

 மாரிமுத்துவுக்கு வயது அறுபது. அவருக்கு ஒரே சந்தோஷம். தேர்தல் வருகிறதாம்… தேர்தல் வந்தால் அவருக்கு குஷிதான். சுறுசுறுவென இருப்பார். எல்லா கட்சிக் கூட்டங்களுக்கும் பணம் பெற்றுக்கொண்டு சளைக்காமல் செல்வார். யார் நிறைய குடிக்க, சாப்பிட பிரியாணிபோட்டு அதிக பணம் தருகிறார்களோ அவர்களுக்கு தன் குடும்பத்தினருடன் சென்று மொத்தமாக ஓட்டுப் போட்டுவிட்டு, அடுத்த தேர்தலுக்கு ஆவலுடன் காத்திருப்பார். இது அவருடைய நாற்பது வருடப் பழக்கம். அதற்காக மாரிமுத்து மோசமானவர் என்று நினைக்க வேண்டாம். பொய், திருட்டு, ஏமாற்று என்பதெல்லாம்


நெருக்கம்!

 

 இடியோசை இன்ப சாகரன் அந்தக்கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட முதல் நிலைப் பேச்சாளர். கிளைக் கழகச் செயலாளர்களும், கட்சி நிர்வாகிகளும் அவர் ‘டேட்ஸ்’ வாங்க படாத பாடு படுவார்கள். காரணம் பிரியாணி கொடுத்து, காசு கொடுத்து, லாரி வாடகை கொடுத்து கூட்டத்திற்கு ஆட்கள் தேட வேண்டியதில்லை. இன்ப சாகரன் படத்தைப் போட்டு பத்து சுவரொட்டிகளை குப்பைத் தொட்டிகளில் ஒட்டினால் போதும்! அவர் பேசும் ஒவ்வொரு நகரத்திலும் அந்தக்கட்சி பிரமுகர்கள் அவரை நன்கு கவனித்து சிநேகிதம் பிடித்துக் கொள்வார்கள். இன்பசாகரன் ஒரு


சூடு

 

 “”இன்னும் பத்து நிமிடம் இருக்கு சார்” பரிமாறுபவர் சற்றே இளக்காரமாகச் சொன்னாரோ? எங்கள் கம்பெனியின் ஆண்டு விழா இந்தூரில் ஐந்து நட்சத்திர ஓட்டலொன்றில் ஏற்பாடு செய்திருந்தனர். எனது பிரிவின் கூட்டம் முடிந்ததும் பந்திக்கு முந்தும் பறக்காவெட்டியாய் முதல் ஆளாய் டின்னருக்கு வந்து நிற்கிறேன். நமது பிரிவின் ஆள் எவனாவது வரமாட்டானா? “”ஹலோ சார்” “”இது சோமசுந்தர் இல்லையோ… ஹைதராபாத் கிளை?” “”யெஸ் சார். நல்லா நினைவு வச்சிருக்கீங்க சார். எப்படி இருக்கீங்க சார்?” சோமசுந்தருக்கு வார்த்தைக்கு ஒரு


பத்மநாபா தியேட்டரும்… நான்கு ரூபாயும்…

 

 நாகர்கோயில் பேருந்து நிலையத்திற்குள் பஸ் வந்தது. நேற்று இரவில் சென்னையிலிருந்து புறப்பட்ட பஸ். இனியும் இதே பஸ்சில்தான் குலசேகரம் செல்ல வேண்டும். பயணக் களைப்பு உடலைச் சோர்வடைய வைத்திருக்கிறது. ஓட்டுநரும், நடத்துநரும் இறங்கி டீ குடிக்கச் சென்றனர். எனக்கு டீ குடிக்க வேண்டுமென்று தோன்றவில்லை. ஊருக்கு வந்து ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. குடும்பத்தில் நல்லது கெட்டது என எதிலும் பங்கேற்கவில்லை. சினிமாவில் உதவி இயக்குநராக காலங்கள் போனது தெரியவில்லை. இயக்குநராகாமல் திருமணம் செய்து கொள்ளமாட்டேன்