Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: July 2016

50 கதைகள் கிடைத்துள்ளன.

என்ன சொல்கிறாய் சுடரே

 

 ஒவ்வொரு இரவும் அந்த மனிதன் வீடு திரும்ப நடக்கும் போது அவனது முன்னால் சின்னஞ்சிறிய மெழுகுவர்த்தி ஒன்று தனியே எரிந்து கொண்டு போனது. உண்மையில் நான் சரியாகச் சொல்கிறேனா எனச் சந்தேகமாக உள்ளது, அந்த மனிதன் மெழுகுவர்த்தியை கையில் பிடித்திருக்கவில்லை, உடன் யாரும் வரவுமில்லை, ஆனால் ஒற்றை மெழுகுவர்த்திக் காற்றில் மிதந்தபடியே அவன் முன்னால் நகர்ந்து போய்க் கொண்டிருந்தது, விசித்திரமாகயிருக்கிறதில்லை, ஆனால் அது தான் நிஜம். பிறந்தநாள் கேக்குகளில் கொளுத்திவைக்கபடும விரல் நீளமுள்ள ரோஸ் வண்ண மெழுகுவர்த்தியது,


‘ஓரியன்’ ஆக்கம்

 

 அவன்….? ஜீவன். இடையில் மட்டும் ஒரு உள்ளாடையுடன் வெட்டவெளியில் உட்கார்ந்து சூரியனின் வெப்பக் கதிர் வீச்சை உள்வாங்கிக் கொண்டிருக்கின்றான். உடலுக்கான வைட்டமின் D3 தயாரிப்பு. ஈரக் காற்று சிலுசிலுவென்று வீசுகிறது. சென்ற நூற்றாண்டில் மோதிய ஒரு வால் நட்சத்திரத்தின் தாக்குதலால் பூமியின் சுழற்சி அச்சியினுடைய கோணம் லேசாக மாறியது.. தாக்குதலின் விளைவாய் உலகில் கோடிக்கணக்கில் மக்கள் சில மணி நேரங்களில் மடிந்து போனார்கள். பேரழிவு. இந்த இயற்கை வலிமையானதும், கொடைத்தன்மை கொண்டதுவும் மட்டுமில்லை, கொடூரமானவையும் ஈவு இரக்கமற்றவையும்


அம்மா என்றொரு பெண்

 

 அன்றைக்கெல்லாம் அவனுக்கு மனமே சரியில்லை. அதற்குக் காரணம் லண்டன் வெயில் மட்டுமல்ல, வெப்பம் தொண்ணுறு டிகிரிக்கு மேற்போய் உடலிலுள்ள நீரெல்லாம் வியர்வையாகக் கசிகிறது. அவன் மனம் ஏதோ நிம்மதியில்லாமலிருந்தது. உடம்பு துடித்தது. உள்ளத்தில் ஏதோ பாறாங்கல்லைத் தூக்கிவைத்த பாரம். அழவேண்டும் போல் ஒரு உணர்வு. அவன் தான் ஒரு ஆண்மகன் என்பதை மறந்து எத்தனையோ தரம் அழுதியிருக்கிறான். அவனையழப் பழக்கியது அவனின் அம்மாதான். ~~உப்பு வைத்த பாத்திரம் மாதிரி கசிந்துதொலையாமல் மனதில் உள்ளதைச் சொல்லியழேன்” என்று இவன்


பய முகங்கள்

 

 கர்நாடகம் ஒரு மிகச் சிறந்த மாநிலம். தண்ணீர் பஞ்சமோ வறட்சியோ இல்லாத அமைதியான மாநிலம். கன்னட மக்கள் தெய்வ பக்தியும் நேர்மையுமானவர்கள். அடாவடித்தனம் அறியாதவர்கள். தமிழர்களும் கன்னடத்து மக்களும் குடும்பம் குடும்பமாக மிகவும் பாசத்துடன் பின்னிப்பிணைந்து உறவாடுவார்கள். இவர்களிடையே காதல் கல்யாணங்களும், வர்த்தக ரீதியான உறவுகளும் அதிகம். ஆனால் அம்மாநிலத்தில் உற்பத்தியாகி பல நிலைகளைக் கடந்து, தமிழகத்தை ஊடுருவி கடலில் கலக்கும் காவிரித்தாயின் மீது உள்ள பாசத்தினால் அவ்வப்போது தமிழர்களும் கன்னட மக்களும் புரிதலின்றி சண்டையிட்டுக்கொண்டு சுப்ரீம்


மந்திரச் சொல்

 

 “”நான் பாட்டுக்கு செவனேன்னு வீட்லயிருந்தேன். முந்திரி பழம் பறிச்சு சாப்பிடலாம்ன்னு சொல்லி கூப்பிட்டுவந்து, என்னை மட்டும் சிக்கல்ல மாட்டிவுட்டுட்டு ஊர்க்காரப்பசங்க ஓடிட்டானுங்க. இதுக்குத்தான் அப்பவே துணைக்கு வரல்லன்னு சொன்னேன்” என்று முனகினான் மச்சராசு. பொறியில் சிக்கிக் கொண்ட எலி போல, குத்தகைக்காரர்களிடம் வசமாக மாட்டிக் கொண்டான். தப்பி ஓட முடியாதபடி தேங்காய் நார் கயிற்றில் இறுக்கி பிடித்து மரத்தில் கட்டியிருந்தனர். வெயில் உச்சிக்கு ஏற ஏற எரிச்சல் தாங்க முடியவில்லை. அடுத்து என்ன செய்வார்களோ? ஏது செய்வார்களோ?