கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: July 2016

50 கதைகள் கிடைத்துள்ளன.

அட்டைப்பட முகங்கள்

 

 அரவிந்தன் முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டழுதான்.’யாழ்ப்பாணத்தில் இன்னுமொருதரம் குண்டுவீச்சு. தேவாலயம் தரைமட்டம், இருபது முப்பது தமிழ் மக்கள் இறந்திருக்கலாம்’.இலங்கைப் பத்திரிகையை வாசித்ததும் அடக்க முடியாத சோகம் அழுகையாக மாற தான் ஒரு ஆண் என்பதையும் மறந்து அவன் அழுகிறான். தேவாலயத்துக்கு அருகிலிருந்த குடும்பத்தை அவனுக்குத் தெரியும். அங்கு குடிவாழ்ந்த ‘தேவசகாயம் மாஸ்டரும் அவரின் குடும்பமும்,இறந்த போன தமிழர்களில் சிலராக இருக்கக்கூடாது’. அவன் தனக்குள்ப் பிரார்த்தித்துக் கொள்கிறான்.அவனின் நினைவு தெரிந்த நாள் முதல் நெருங்கிப் பழகிய குடும்பம் அது. அந்தக்


ஓட்டுப் போடும் பொம்மைகள்

 

 மாரிமுத்துவுக்கு வயது அறுபது. அவருக்கு ஒரே சந்தோஷம். தேர்தல் வருகிறதாம்… தேர்தல் வந்தால் அவருக்கு குஷிதான். சுறுசுறுவென இருப்பார். எல்லா கட்சிக் கூட்டங்களுக்கும் பணம் பெற்றுக்கொண்டு சளைக்காமல் செல்வார். யார் நிறைய குடிக்க, சாப்பிட பிரியாணிபோட்டு அதிக பணம் தருகிறார்களோ அவர்களுக்கு தன் குடும்பத்தினருடன் சென்று மொத்தமாக ஓட்டுப் போட்டுவிட்டு, அடுத்த தேர்தலுக்கு ஆவலுடன் காத்திருப்பார். இது அவருடைய நாற்பது வருடப் பழக்கம். அதற்காக மாரிமுத்து மோசமானவர் என்று நினைக்க வேண்டாம். பொய், திருட்டு, ஏமாற்று என்பதெல்லாம்


நெருக்கம்!

 

 இடியோசை இன்ப சாகரன் அந்தக்கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட முதல் நிலைப் பேச்சாளர். கிளைக் கழகச் செயலாளர்களும், கட்சி நிர்வாகிகளும் அவர் ‘டேட்ஸ்’ வாங்க படாத பாடு படுவார்கள். காரணம் பிரியாணி கொடுத்து, காசு கொடுத்து, லாரி வாடகை கொடுத்து கூட்டத்திற்கு ஆட்கள் தேட வேண்டியதில்லை. இன்ப சாகரன் படத்தைப் போட்டு பத்து சுவரொட்டிகளை குப்பைத் தொட்டிகளில் ஒட்டினால் போதும்! அவர் பேசும் ஒவ்வொரு நகரத்திலும் அந்தக்கட்சி பிரமுகர்கள் அவரை நன்கு கவனித்து சிநேகிதம் பிடித்துக் கொள்வார்கள். இன்பசாகரன் ஒரு


சூடு

 

 “”இன்னும் பத்து நிமிடம் இருக்கு சார்” பரிமாறுபவர் சற்றே இளக்காரமாகச் சொன்னாரோ? எங்கள் கம்பெனியின் ஆண்டு விழா இந்தூரில் ஐந்து நட்சத்திர ஓட்டலொன்றில் ஏற்பாடு செய்திருந்தனர். எனது பிரிவின் கூட்டம் முடிந்ததும் பந்திக்கு முந்தும் பறக்காவெட்டியாய் முதல் ஆளாய் டின்னருக்கு வந்து நிற்கிறேன். நமது பிரிவின் ஆள் எவனாவது வரமாட்டானா? “”ஹலோ சார்” “”இது சோமசுந்தர் இல்லையோ… ஹைதராபாத் கிளை?” “”யெஸ் சார். நல்லா நினைவு வச்சிருக்கீங்க சார். எப்படி இருக்கீங்க சார்?” சோமசுந்தருக்கு வார்த்தைக்கு ஒரு


பத்மநாபா தியேட்டரும்… நான்கு ரூபாயும்…

 

 நாகர்கோயில் பேருந்து நிலையத்திற்குள் பஸ் வந்தது. நேற்று இரவில் சென்னையிலிருந்து புறப்பட்ட பஸ். இனியும் இதே பஸ்சில்தான் குலசேகரம் செல்ல வேண்டும். பயணக் களைப்பு உடலைச் சோர்வடைய வைத்திருக்கிறது. ஓட்டுநரும், நடத்துநரும் இறங்கி டீ குடிக்கச் சென்றனர். எனக்கு டீ குடிக்க வேண்டுமென்று தோன்றவில்லை. ஊருக்கு வந்து ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. குடும்பத்தில் நல்லது கெட்டது என எதிலும் பங்கேற்கவில்லை. சினிமாவில் உதவி இயக்குநராக காலங்கள் போனது தெரியவில்லை. இயக்குநராகாமல் திருமணம் செய்து கொள்ளமாட்டேன்