கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: July 21, 2016

10 கதைகள் கிடைத்துள்ளன.

என்னதான் உங்க பிரச்சினை?

 

 இன்று திங்கட்கிழமை ஆதலால் காலையில் இருந்தே நோயாளர்கள் வந்தவண்ணமிருந்தனர். பலரும் பலவித உபாதைகளைப் பலவிதமாகச் சொல்லிக்கொண்டிருந்தனர். என்னிடம் மருந்து எடுப்பதைவிட தங்களின் சுகதுக்கங்களை பகிர்வதிலேயே குறியாக இருந்தனர். நானும் எவ்வளவு நேரந்தான் ஆச்சரியக்குறிகளையும் கேள்விக் குறிகளையும், சந்தோசரேகைகளையும், துக்கக்கோடுகளையும் முகத்தில் காட்டிய வண்ணமிருப்பது? மனம் சோர்வடையத்தொடங்கியது. இருந்தும் கடமையைச் செய்தவண்ணம் இருந்தேன். வெளியில் நோயாளியொருவர் வடிவேலு பாணியில் சொல்லிக்கொண்டிருந்தார், “எவ்வளவு சொன்னாலும் அந்தப்பெடி தலையாட்டித் தலையாட்டி கேட்குதப்பா” குரலைக்கொண்டே அந்த நபரை அடையாளம் காண முடடியும். அவர்


ஜெகனின் வீடு!

 

 அது ஒரு ரயில்வண்டி அமைப்பு கொண்ட குடியிருப்பு காலனி. மாரிமுத்துப்பிள்ளை ஸ்டோர் என்றால் ஊரில் பலருக்கும் தெரியும். அதுவும் அந்த விபத்துக்கு பின்னால் ஊரில் ஏறக்குறைய எல்லாருக்குமே தெரிந்துவிட்டது. மாரிமுத்துபிள்ளை ஸ்டோரின் மூன்றாவது எண் வீடுதான் ஜெகனுடையது. நீண்ட நாட்களுக்கு பிறகு.. அதாவது சில மாதங்கள் ஆகியிருக்கும். இப்போதுதான் வீட்டுக்கு போகிறான். திருப்பஞ்சலி முடக்கில் பஸ் இறங்கி, வானத்தையே சதா பார்த்துக்கொண்டிருக்கும் அந்த சாக்கடையை குதித்துத் தாண்டி, தண்டபாணி தாத்தா கடையை கடக்கும்போதுதான், அவனுக்கு நியாபகமே வந்தது…


தண்ணீரும் சொல்லும் ஒரு கண்ணீர்க் கதை

 

 முதன் முதலாக வீட்டிற்கு வந்திருந்த அந்தக் கல்யாணப் புரோக்கரைப் பார்த்த போது ஞானத்திற்கு இனிமை கொழிக்கும் கல்யாண சங்கதிகளையும் திரை போட்டு மறைத்தவாறு உள்ளுணர்வாய்ப் பார்க்கும் அவள் கண்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஏனோ கலகம் செய்யவென்றே ஒரு புராண கால காரண புருஷனாய்க் களம் இறங்கும் நாரதரின் முகம் தான் நீண்டு வளர்ந்த வெண்ணிறத் தாடியுடன் பார்ப்பதற்கு அவர் அப்படித் தான் இருந்தார் ஆனால் அவர் வந்திருப்பது அதற்கல்ல அவளை மேலும் மங்களாக்கும் ஒரு தெய்வீகச் சடங்கை நிறைவேற்றவே


ஒரு சிறுவனின் அழுகை

 

 காற்றைப் பிளந்து வந்து கொண்டிருந்தது அந்தப் பேருந்து. மேடு பள்ளங்களைத் தாண்டி குதிரையாய் பறந்தது. அந்தப் பேருந்தில் இரண்டு பக்கங்களிலும் குதிரையின் படம் வரையப்பட்டிருந்தது. அதனாலோ என்னவோ இப்படி வேகமாக புழுதிப் பரப்பியது. “என்னங்க பையன் ராத்திரி வரும்போது புரோட்டா கேட்டான்” என்றாள் சந்திரா. கையில் கோத்த பூவை மடக்கி மடக்கி இன்னும் வேகமாகக் கட்டிக்கொண்டிருந்தான் விநாயகம். பெருமாள் கோயிலு வாசல்ல பூ கட்டி விக்கிற தொழில்தான் விநாயகத்துக்கு. அப்பா அம்மா வயசானவங்க. படிப்பும் ஏறல விநாயகத்துக்கு.


சக்ர வியூகம்

 

 கிட்டத்தட்ட ஒரு பத்து வருடத்துக்கு முன்னால் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். கங்கை ,மற்றும் அதன்கரை ஓரப் பகுதிகளின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவலர்களைப் பற்றின ஆவணப் படம் என்று ஞாபகம். கங்கையில் பயணம் செய்து கொண்டிருந்த போது தற்கொலை செய்து கொள்ள முயன்ற ஒரு பெண்ணைக் காப்பாற்றி அவளிடம் விசாரணை செய்து கொண்டிருந்த தருணத்தில்தான் பார்க்க ஆரம்பித்தேன்.அதற்குள்நல்ல உலர்ந்த ஆடைகளைக் கொடுத்து, உணவையும் கொடுத்து ஆசுவாசப்படுத்தி அவளிடம் கனிவாக கேள்வி கேட்டு கொண்டிருந்தார்,ஒரு வயதான காவலர்.உருண்டை