Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: June 2016

57 கதைகள் கிடைத்துள்ளன.

ஆசை யாரை விட்டது?

 

 பெரிய மல்டிநேஷனல் நிறுவனத்திலிருந்து சீனியர் வைஸ்-பிரசிடெண்ட்டாக ரிடையர்ட் ஆனவுடன் நான் பாட்டுக்கு தேமேன்னு பெங்களூரில் என் வீட்டில் உட்கார்ந்துகொண்டு சிறுகதைகள் எழுதிக்கொண்டு இருந்தேன். அவைகள் பிரசுரமாவதில்லை என்பது வேறு விஷயம். ஒருநாள் திடீர்ன்னு என் மனைவியின் அண்ணா மாப்பிள்ளை ஜெயக்குமார் சென்னையிலிருந்து போன் போட்டு “நீங்க சீரியல்ல நடிக்கிறீங்களா? என் நண்பர்தான் அந்த சீரியல் தயாரிப்பாளர்…நீங்க சரின்னு சொன்னா நான் அவர்கிட்ட பேசுகிறேன்” என்றார். ஜெயக்குமார் என் உறவினர் என்பதைவிட எனக்கு நல்ல நண்பர். நான் ரொம்ப


இரட்டைத் தத்துவங்கள்

 

 லண்டன் 1991 “எனக்காக இவ்வளவு சிரமம் எடுத்ததற்கு நன்றி” டொக்டர் ரமேஷ் பட்டேலின் குரலில் நன்றிபடர்ந்தது. “இந்த நாட்டில் கறுப்பு டொக்டர்களாக வேலை செய்கிறோம். எங்களில் எப்போது என்ன பிழை பிடிப்போம் என்று பார்த்திருக்கிறார்கள் இந்த வெள்ளையர்கள். அவர்களை எதிர்நோக்க நாங்கள் ஒற்றுமையாய் இருக்க வேண்டும் என்பது என் கருத்து” டொக்டர் கார்த்திகேயன், டொக்டர் ரமேஷ் பட்டேலுக்கு மறுமொழி சொன்னான். இருவரும் அவர்களின் தலைமை டொக்டரின் அறையிலிருந்து போய்க்கொண்டிருந்தார்கள். கார்த்திகேயன் இலங்கையைச் சேர்ந்த தமிழ் டொக்டர். ரமேஷ்


தடுமாற்றம்

 

 பொழுது இருட்டிக் கொண்டு வந்தது. தெரு விளக்குகள் வழக்கம் போல் இருட்டுக்குத் துணையாக எரியாமல் நின்றிருந்தன. கோயிலுக்குப் போன அம்மா இன்னும் வரவில்லையே என்று வீட்டை விட்டு வெளியே வந்தேன். குளிர் காற்று முகத்தில் அறைந்தது. டிசம்பரில் போனால் போகிறது என்று எப்போதாவது தலை காட்டும் ஈரப் பசை கலந்த காற்று. “”உங்க மதுரைல வருஷத்துக்கு மூணு ஸீசன் தான். ஹாட், ஹாட்டர், ஹாட்டஸ்ட்” என்று என் நண்பன் மூர்த்தி சொல்லிச் சிரிப்பான். மூர்த்திக்கு அப்படி ஒன்றும்


ஏழாவது ஆள்

 

 “”ஒரு பெரிய அலை என்னை கிட்டத்தட்ட இழுத்துக்கிட்டே போயிடுச்சு”, ஏழாவது ஆள் சொன்னார். முணுமுணுப்பாகத்தான் இருந்தது. “”எனக்கு பத்து வயது இருந்தபோது ஒரு செப்டம்பர் மாதம் அது நடந்தது”. அந்த இரவில் கதை சொல்ல வேண்டியவர்களில் அவர்தான் கடைசி ஆள். கைக்கடிகாரத்தில் மணி பத்தைக் கடந்திருந்தது. வட்டமாக உட்கார்ந்திருந்த சிறிய குழுவினரால், வெளிஇருட்டிலிருந்து கிழித்துக்கொண்டு வரும் காற்று மேற்கு பாய்வதைக் கேட்க முடிந்தது. காற்று மரங்களை உலுக்கி, ஜன்னல்களைத் தடதடக்க வைத்து, இறுதியில் ஒரு சீட்டியொலியுடன் வீட்டைக்


மலரின் இலக்கியம்!

 

 மலர் தான் இப்படியான தர்மசங்கடமான வாழ்வுக்குள் தள்ளப்படுவேன் என்பதை தன்பாடசாலை வாழ்நாள்களில் அறிந்திருக்கவில்லை. என்று ஏ.எல் சோதனை மறுமொழி வந்ததோ அன்றே அவளின் பட்டாம்பூச்சி சிறகுகளை இழந்து தனிமரமானாள். பாடசாலையில் அவள் ஒரு அழகிய தேவதை. விளையாட்டென்ன? கலைநிகழ்வுகள் என்ன? எல்லாவற்றிலும் அவள்தான் முதல். இதனால் பல பதக்கங்களைப் பெற்றவளாக இருந்தாள்.அவளைச்சுற்றி ஒரு வட்டம் எப்போதும் இருக்கும். இந்தவட்டத்தில் அவள் தனித்து தெரிவாள் அவளின் உயரம் காரணமாகவும். மலர் கதை, கவிதை எழுதுவதில் இலக்கியங்களை விமர்சிப்பதில் ஆர்வம்