கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: June 2016

58 கதைகள் கிடைத்துள்ளன.

சிவ பரிவாரம் கூறும் தலைவனின் இலக்கணம்

 

 சிவ​பெருமா​னுடைய குடும்பத்தை எடுத்துக் கொண்டால் ஒரு பூரணமான ஒற்றுமையைக் காண முடிகிறது.​ ​ அனைத்து தேவதைகளிலும் குடும்பமுள்ள தெய்வம் சிவன் மட்டும் தான் போலும். கைலாச குடும்பத்தில் ஒரு பரிவார பாவனை தெளிவாக தெரிகிறது. பரம சிவன் ஒரு நல்ல யோகி. ஆதி​ ​சக்தியான அன்ன பூரணி தேவி அவர் மனைவி. வயிறு நிறைய அன்னமிடும் அன்பு நிறைந்தவள். அதோடு மகா சக்தி நிரம்பியவள். அன்பான கணவன் மனைவி​.​ அதோடு அவரவர் சுதந்திரம் அவரவருக்கு. ஆனாலும் ஒருவரையொருவர்


அக்காவின் காதலன்

 

 அதிகாலை ஐந்து மணி. வீட்டுக் கதவைத் கதவை யாரோ படபடவென்று தட்டிய சப்தம் பவானியைப் படுக்கையிலிருந்து துள்ளியெழப் பண்ணியது. பக்கத்திலிருந்த அலாம்குளொக்கில் மஞ்சள் நிறத்தில் நேரம் ஐந்து மணியென்று காட்டியது. அவளுக்கு ஆத்திரம் வந்தது. யாராயிருக்கும் இந்த நேரத்தில் இப்படிக் காட்டுமிராண்டித்தனமாகக் கதவைத் தட்டுவது (இடிப்பது)?. பக்கத்தில் படுத்திருந்த கணவர் உலகம் தலைகீழானாலும் அது தெரியாமல் குறட்டைவிடுபவர்;, அவரும் பட படவென கதவு தட்டுப்படும் ஆரவாரத்தில்.பவானி சட்டென்று துடித்தெழுந்ததின் அதிர்ச்சியில் கண்விழித்து,’ என்ன.. என்ன நடக்கிறது?’ என்று


காதல் வீரியம்

 

 வீட்டிலிருந்து பாக்டரிக்குப் போகும் வழியில் அந்த இளநீர் கடையின் முன் என் பென்ஸ் காரை டிரைவர் மாணிக்கம் நிறுத்தினான். கடந்த இரண்டு மாதங்களாக இது தினமும் நடக்கும் ஒரு செயல். நான் இறங்கிச் சென்று இரண்டு இளநீர் வெட்டச் சொன்னேன். மாணிக்கம் இளநீருடன் சற்றுத் தள்ளி இருந்த காரினருகே சென்று நின்று கொண்டான். இளநீர் உடம்புக்கு நல்லது என்றாலும் அதை சீவிக் கொடுக்கும் மல்லிகாவின் அழகில், சிரிப்பில், வளப்பமான தேகத்தில் நான் சொக்கிப் போனேன். அதுதான் உண்மை.


யதார்த்தம்

 

 அப்பா, லெட்ரீன் குழாய் ஒழுகுது” சொல்லிக் கொண்டே வேகமாய் வெளியே வந்தான் சதீஷ். கதவைப் படாரென்று சாத்தும் சத்தம். அதனைத் தொடர்ந்து டொக், டொக்கென்று விளக்குகளை சத்தமெழ அணைக்கும் சத்தம். ஒரே ஆர்ப்பாட்டம்தான். போவது கழிப்பறைக்கு. அதற்கு குளியலறை லைட்டையும் சேர்த்து ஏன் போட்டுக் கொள்ள வேண்டும். அதுவும் பட்டப் பகலில். போதுமான வெளிச்சம் உள்ள இடம்தான். ஆனாலும் லைட்டை எரிய விடுவது என்பது வழக்கமாகிவிட்டது. இவனுக்கும் சரி, இவன் அம்மாவுக்கும் சரி. ரெண்டு பேரும் சொன்னால்


கங்கைக் கரைத் தோட்டம்

 

 இந்த முறை எப்படியும் ஒரு பத்து அல்லது பதினைந்து நாள்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு தன் கணவர் சுப்பிரமணியனோடு அலகாபாத் சென்று திரிவேணி சங்கமத்தில் நீராடியே தீர வேண்டும் என்ற தீர்க்கமான முடிவோடு புறப்பட்டு விட்டாள் சப் இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி. நினைத்தபடியே திரிவேணி சங்கமத்தில் நீராடிவிட்டு லோகேஷ்வர் ஆலயத்தையும் தரிசித்துவிட்டு அலகாபாத் கடை வீதி வழியே தன் கணவரோடு சென்று கொண்டிருந்தபோதுதான் அந்த உருவம் விஜயலெட்சுமியின் கண்களில் தென்பட்டது. காவி வேட்டியுடனும், காவி மேல் துண்டுடனும் வெற்று