கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: June 2016

57 கதைகள் கிடைத்துள்ளன.

பிரிவு

 

  “அப்பா நீங்களும் அம்மாவும் நீண்டகாலம் அக்காவோடை இருந்திட்டியள். இனி எங்களோடை வந்திருங்கோவன். உங்களுக்கு நானும் மகள் தானே” என்று தனது இரண்டாவது மகள் வனிதா டெலிபோனில் கேட்ட போது நாகலிங்கம் என்ன பதில் சொல்வதென்று யோசித்தார். தானும் மனைவியும் மூத்த மகள் புனிதாவின் டவுன் ஹவுஸ்; பேஸ்மண்டில் குடும்பம் நடத்துவது வனிதாவுக்கு ஏன் பிரச்சனையைக் கொடுத்தது என்று அவருக்கு விளங்க அதிக நேரமெடுக்கவில்லை. தாங்கள் கனடா வந்ததால் தான் பிள்ளைகளுக்குள் சண்டை வந்தது. நிம்மதியாக கொழும்பிலேயே


கல்விக்காக…

 

 காலையில் எழுந்ததிலிருந்தே ரகுராமனுக்கு மனசே சரியில்லை. இனம் தெரியாத ஒரு பயமும், அமைதியின்மையும், பதற்றமும் அவரிடம் காணப்பட்டது. அவருக்கு தற்போது வயது 59. நாளை மறுநாள் திங்கட்கிழமை அவருக்கு பைபாஸ் சர்ஜரி. சர்ஜரியின் முன்னேற்பாடுகளுக்காக நாளை காலை அப்பலோ ஹாஸ்பிடலில் அட்மிட் ஆக வேண்டும். போனவாரம்தான் ஆஞ்சியோ செய்யப்பட்டு எழுபது சதவீதம் அடைப்பு என்றார்கள். கடந்த ஐந்து வருடங்களாக டயாபடீஸ் வேறு இருப்பதால் சர்ஜரியின்போது இறந்து விடுவோமோ என்கிற மரணபயம் அவரை ஆட்கொண்டது. ரகுராமன் சென்ற வருடம்


பெரிய தண்டனை

 

 சேது ஆட்டோவிலிருந்து இறங்கிய போது பார்த்தான். அந்த வீட்டு வாசலில் ஏகப்பட்ட கூட்டம். ஏன்,என்னவாயிற்று? “”என்ன ஆச்சு ஸார்?” அங்கே நின்று கொண்டு யாருடனோ பேசிக் கொண்டிருந்தவரிடம் கேட்டான். “”வேதநாயகம் ஸார் இறந்து போயிட்டார்” சேது ஸ்தம்பித்துப் போனான். கைப் பையிலிருந்த கல்யாண அழைப்பிதழ் அவனைப் பார்த்துச் சிரித்தது. தன் திருமணத்திற்குப் பத்திரிகை கொடுத்து அழைக்க வந்தவன் இவன். ஆனால் அதற்குள் வேதநாயகத்திற்கு வேறொரு இடத்திலிருந்து அழைப்பு வந்துவிட்டதா? இனி? கூடிக் கூடி பேசியபடி ஜனங்கள் நின்றிருந்தனர்.


உயிர்வெளி

 

 சுந்தரமூர்த்தி, டேய் “”சுந்தரமூர்த்தி”… திரும்பத் திரும்ப யாரோ கூப்பிடுவது காதில் விழுவது போலிருக்கிறது. எங்கோ தூரத்தில் கிணற்றுக்குள்ளிருந்து வருவது போல குரல். எனக்கு நான் படுத்திருக்கிறேனா, உட்கார்ந்திருக்கிறேனா என்று எதுவும் புரியாத ஒரு நிலை. மொத்த உடம்பும் இல்லாததுபோல் இருக்கிறது. இலேசாக அவ்வப்போது ஏதோ பேச்சு சத்தம் கேட்பதும் அது என்ன என்று யோசிக்கக் கூட முடியாமல் மெல்ல அது கனவுபோல களைந்து போவதும்… எத்தனை நாள்களாக என்று நினைவில் இல்லை. மீண்டும் சுந்தர், சுந்தர் என்ற


பேய்க்கதை

 

 இரவு 7 மணி. வானம் சிறு தூறலால் நிலத்தை நனைத்துக்கொண்டிருந்தது. மின்சாரம் வேறு நிறுத்தப்பட்டிருந்தது. கதவு சாத்தப்பட்டு நான் அப்பாவோடு பழையதும் புதியதும் பற்றி கதைத்துக்கொண்டிருந்தேன். பெரியவனா ஆனப்பிறகு அப்பாவுக்கு நேரம் ஒதுக்கி பேசுவதே தனி மகிழ்ச்சிதான். எங்கள் முன்னோர்களின் வாழ்க்கையைப் பற்றி என்னுடைய அப்பா சுவாரஸ்யமான நிகழ்வுகளை கூறிக்கொண்டிருந்தார். நானும் மனதை அலையவிடாமல் அப்படியே கேட்டுக்கொண்டிருந்தேன். அப்பா பேச ஆரம்மிச்சார்ன்னா பேசிக்கொண்டே இருப்பார். அவர் எதைச்சொன்னாலும் அப்படியே நம்புகிற பையன்தான் நான். அப்பாவும் உண்மையோடு தன்னோட