கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: June 2016

57 கதைகள் கிடைத்துள்ளன.

பருவம் வந்ததும்…

 

 நிலா குழந்தையிலேயே நல்ல அழகு. வீதியில் போவோர் வருவோர் எல்லாம் கொஞ்சிக் கொண்டு போவார்கள். பனிரண்டு வயசில் வயசுக்கு வந்து விட்டாள். பூத்துக் குலுங்கும் அந்த அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. நிலாவின் அம்மா அன்னத்திற்கொரு ஆசை! அதற்கு ஒரு விழா எடுத்து அதில் தன் அந்த அழகுப் பெட்டகத்தை மனையில் உட்கார வைத்து உறவுகள் நலங்கு வைப்பதை ஒரு வீடியோ எடுத்து அதை தன் ஆயுசு முழுவதும் வைத்து ரசிக்க வேண்டும் என்று! அன்னத்தின் கணவர்


பெண் பார்த்தல்

 

 “”பொண்ணு கெடைக்கறதே அருந்தலா இருக்கு. இதுல நாம நெனக்கிற மாதிரியெல்லா முடியாது முருகா” என்ற வீரம்மாள், “”நீ கொம்பு ஓவ்வார்த்த சுத்தமில்ல. தண்ணியடிச்சிருக்கியா?” என்று ஒரே மூச்சில் பேசினாள். வீரம்மாளின் வீட்டின் வெளித்திண்ணையில் குத்துக்காலிட்டு சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருந்த முருகன், “”கஞ்சி குடிக்கவே காசக்காணம். காலையிலருந்து சும்மா கெடக்கேன். நீ வேற சும்மாருக்கவன ஆவுகப்படுத்தி விடாத” என்றான். “”அந்த மாதிரிதான புரியாம பேசிட்ருக்க. சொன்னா, ஒரு வார்த்தைல அடங்க மாட்டேங்கிறியே” “”ம் ஒடனே என்னையச் சொல்லு. நேத்தக்கி


பொன் குஞ்சுகள்

 

 “வயசாயிருக்கே தவிர, விவேகமே இல்லையே? என்ன செய்வது?” உஷா கணவனிடம் புலம்பினாள். கையிலிருந்த ஆங்கிலப் பத்திரிகையிலிருந்து கண்களைத் திருப்பாமலே புருவத்தை மட்டும் உயர்த்தி விசாரிக்கிறான் சங்கர். “நீ யாரைப் பத்தி சொலறே? கொஞ்சம் புரியறாப் போலச் சொல்லேன்”. கையினால் அவனுடைய புத்தகத்தைக் கீழே இறக்கிக் கொண்டு சொல்கிறாள், “அதான், சொன்னேனே…! அடுத்த வீட்டுக்கு ஒரு பாட்டி வந்திருக்காங்கன்னு…” “ஓஹோ! அந்த ஸ்பான்ஞ் பொம்மை விஷயமா? சரியாப் போச்சு! நான் என்னமோ ஏதோன்னு பயந்தே போனேன்”. புத்தகத்தை விடுவித்துக்


தற்காலிகமாய் நிறுத்தப்படும் ஆட்டம்

 

 “ இனி உன்னோட ஆட முடியுமுன்னு தோணலே சுபா “ “ஏன் அப்பிடி சொல்றீங்க .” “முடியாதுன்னு தோணுது. மனசு பலவீனமாயிருச்சு.” அவரின் எதிரில் இருந்த குதிரைகளும் ராஜாக்களும் படைவீரர்களும் செயலிழந்தது போல் சதுரங்க அட்டையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.இது இனி அவசியமில்லாதது என்பதாய் பார்த்தார்.அவளும் சட்டென திகில் அடைந்தவள் போல் பார்த்தாள்.அவர் தீர்மானத்தைச் சாதாரணமாய் சொல்லி விட்டது போலிருந்தது. நிலை கொள்ளாதவர்கள் மாதிரி இருவரும் முகம் பார்ப்பதைத் தவிர்த்து சுவர்களின் வெண்மையைப் பார்த்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்கள்.


கிராக்கி

 

 “நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா? சொல்லுங்கள் உங்கள் ஆசை நெஞ்சை தொட்டு பார்த்து சொல்லுங்கள்” என்று டி.எம்.எஸ் பாடல் ஆட்டோவினுள் ஒலித்து கொண்டிருந்தது. வெளியே நின்று பாஸ்கரன் வைகை ஆற்றை வெறித்து பார்த்து கொண்டிருந்தான். மதுரைக்காரனுக்கு வைகையை பார்ப்பது சந்தோஷமான விஷயம். ஊரை இரண்டாக பிரித்து நடுவே இருக்கும் வைகை வறண்டு இருந்தாலும் சரி, தண்ணீரோடு இருந்தாலும் சரி, அதை பார்ப்பது மனதுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம். வறண்ட வைகை, மதுரைகாரனுக்கு குறுக்கு வழியை தரும். ஆத்துக்கு