கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: June 14, 2016

10 கதைகள் கிடைத்துள்ளன.

பேய்க்கதை

 

 இரவு 7 மணி. வானம் சிறு தூறலால் நிலத்தை நனைத்துக்கொண்டிருந்தது. மின்சாரம் வேறு நிறுத்தப்பட்டிருந்தது. கதவு சாத்தப்பட்டு நான் அப்பாவோடு பழையதும் புதியதும் பற்றி கதைத்துக்கொண்டிருந்தேன். பெரியவனா ஆனப்பிறகு அப்பாவுக்கு நேரம் ஒதுக்கி பேசுவதே தனி மகிழ்ச்சிதான். எங்கள் முன்னோர்களின் வாழ்க்கையைப் பற்றி என்னுடைய அப்பா சுவாரஸ்யமான நிகழ்வுகளை கூறிக்கொண்டிருந்தார். நானும் மனதை அலையவிடாமல் அப்படியே கேட்டுக்கொண்டிருந்தேன். அப்பா பேச ஆரம்மிச்சார்ன்னா பேசிக்கொண்டே இருப்பார். அவர் எதைச்சொன்னாலும் அப்படியே நம்புகிற பையன்தான் நான். அப்பாவும் உண்மையோடு தன்னோட


இதோ இன்னொரு மனிதன்

 

 அந்த மண்பாதை சட்டென தன்னை குறுக்கிக் கொண்டு ஒத்தையடி பாதையாக வளைந்து நெளிந்து நீண்டு கிடக்க, உயிர் வலிக்க வெளிவரும் அலறலோடு, கிழிந்த உடையுடன் அவள் காற்றோடு கலந்து காற்றை விட வேகமாக ஓடிக் கொண்டிருந்தாள்….நான்கு மனிதர்கள்… அவளை விரட்டிக் கொண்டிருந்தார்கள்… விரட்ட விரட்ட விரட்டுதல் எளிது என்பது போல……. இரைக்கும் மூச்சை கச்சிதமாக அளந்து கொண்டு ஓடுவதாகத் தெரிந்தது……. காதுக்கெட்டிய தூரம் வரை கண்ணாய் தெரிந்த பூமியில் குதிரையோட்ட தட… தட….. பட…பட…காற்றுப் புரவியோ…? என்று


பரம இரகசியம்

 

 “என்ன சிவம் கையுக்குள்ளை எதையோ மூடிவைத்திருக்கிறாய் எனக்கும் காட்டேன்.” “முடியாது.. அது பரமசிவத்தின் பரம இரகசியம்.” “உன் நண்பன் சந்திரனான எனக்குத் தெரியக் கூடாத பரம இரகசியமா?. உனக்குள் மட்டும் அந்த இரகசியம் இருந்துவிட்டால் அப்படி ஏதும் நடக்கக் கூடாதது ஒன்று உனக்கு நடந்து விட்டால் பிறகு அந்த இரகசியம் ஒருத்தருக்கும் பயன் இல்லாமல் மறைந்து போகும்” “உண்மைதான். ஆனால் நான் கண்டுபிடித்த விஷயத்தை வேறு யாரும் கொப்பியடித்தால் அல்லது பிழையாகப் பாவித்தால்…..” “ சந்திரா. அதுக்குத்


கிராக்கி

 

 “நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா? சொல்லுங்கள் உங்கள் ஆசை நெஞ்சை தொட்டு பார்த்து சொல்லுங்கள்” என்று டி.எம்.எஸ் பாடல் ஆட்டோவினுள் ஒலித்து கொண்டிருந்தது. வெளியே நின்று பாஸ்கரன் வைகை ஆற்றை வெறித்து பார்த்து கொண்டிருந்தான். மதுரைக்காரனுக்கு வைகையை பார்ப்பது சந்தோஷமான விஷயம். ஊரை இரண்டாக பிரித்து நடுவே இருக்கும் வைகை வறண்டு இருந்தாலும் சரி, தண்ணீரோடு இருந்தாலும் சரி, அதை பார்ப்பது மனதுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம். வறண்ட வைகை, மதுரைகாரனுக்கு குறுக்கு வழியை தரும். ஆத்துக்கு


வென்றது பொய் வீழ்ந்தது தமிழ்

 

 சாத்வீக தத்துவ குணங்களின் முப்பரிணாம நேர்கோடு உயிர்ச் சித்திரமாய்க் கண்களில் தெய்வீக ஒளி கொண்டு நிலைத்திருக்கிற அவரிடம் பாடம் கேட்க வரும் போதெல்லாம் பாரதிக்கு அன்றைய பொழுதே முழுவதும் கறைகள் நீங்கிய ஒரு தவப் பொழுதாக விடியும் அந்த விடியலைத் தேடியே அவள் இருப்பெல்லாம் நிமிஷத்தில் அழிந்து போகும் வாழ்க்கை என்று அறியாமல சகதி குளித்தே வாழ்ந்து பழகிய மனதுக்கு விட்டு விலகிய சுகம் அது அவரிடம் பாடம் கேட்க வரும் சாட்டில் அடிக்கடி அவரைத் தரிசனம்