கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: June 11, 2016

10 கதைகள் கிடைத்துள்ளன.

ராஜாராமனும் பதிமூனு நெய் தோசையும்…

 

 ஒரு நோய்வாய்ப்பட்ட கரப்பான்பூச்சி மாதிரி பரகாலன் எட்டிப்பார்க்க அத்தை முணுமுணுத்தாள். “வந்தாச்சிம்மா கலகம்…வாடா பந்தம் தாங்கி….. வந்து ஏதாவது கொளுத்திப்போடு…வாடாப்பா வா…உன்னைத்தான் காணமேன்னு கேட்டா..வந்துட்டே..” ‘என்னத்தே…முன்னாடி வேற என்னமோ பேசினமாதிரி தெரிஞ்சதே..அக்கா.. அமர்களமா……. ப்ரகாசமா இருக்கேக்கா……என்னாச்சு உனக்கு….முகம் ஜொலிக்கறதே.ஹை…அட..புதுத்தோடா…சூப்பரா இருக்குக்கா…அக்கா… மாமா வந்தாச்சா…சூப்பர்க்கா…என்று பக்கத்தில் வந்து காதைத்தொட்டுப்பார்த்தான் பரகாலன்’…வைரமாக்கா….ஆஹா…லட்ச ரூபா இருக்குமா..’ ‘கொரங்கே…வெல தெரிஞ்சு என்னடா செய்யப்போற..உன் கண்ணிலே கொள்ளிவைக்க ஜாக்கிறதம்மா ..ராத்ததிரிவந்து காத அறுத்துட்டுப்போயிடுவான்…’ என்றாள் அத்தை.. ‘சும்மாயிருங்கத்தே..ஆசைக்குத்தானே பேசறான்…இது அத்தைக்கு வாங்கினதுடா.. அழகா இருந்ததா


அன்பே சிவம்…

 

 இருண்ட வானம் சிறிது வெளுக்கத்தொடங்கியிருந்தது. என்ன சனியன் பிடிச்ச மழை விடுறமாதிரிதெரியல என்று சினந்தபடி எழுந்தார் சைவப்பழமும் சிவதொண்டனுமாகிய சிவநேசன். சிவநேசனின் கோட்பாடு இது சிவபூமி. இங்கு வேறு மதங்கள் இருக்கக்கூடாது என்பதாகும். வேறு மதம் என்ன? சிவனின் பிள்ளைகளைத் தவிர அதுதானுங்கோ உவையள் பிள்ளையார், முருகன் அவையைத்தவிர வேற ஒருத்தரையும் கும்பிடக்கூடாது. அவரின் தாரக மந்திரம் “அன்பே சிவம் அதுவே சத்தியம்”. இது அவரின் வாயில் மட்டும்தான். காலைக்கடன்களை முடித்துச் சிவனை இறுகப்பற்றியபின், வந்து பேப்பரை


அறிவின் கண்டுபிடிப்பு

 

 என் மகன் மிருகசீரீட நட்சத்திரத்தில் பிறந்தபடியால் அவனுக்கு வே, வோ, கா, கீ என்ற முதல் எழுத்தில் ஆரம்பிக்கும்பெயர் வைக்கும்படி குடும்ப சாத்திரியார் சொன்ன படியால் யோசித்து; என்ன பெயர் வைப்பது என்று யோசித்துமூளையை உடைத்துக் கொண்டேன். நான் காஞ்சியில் பிறந்த அறிஞர் அண்ணாவின் அபிமானி. அதனால் காஞ்சி, அறிவுஎன்ற இருவார்த்தைகளையும் இணைத்து “காஞ்சியறிவு” என்று புதுமையாக வைத்தால் என்ன என்று என் மனைவிகயல்விழியைக் கேட்டேன். “நீண்ட பெயராக இல்லையா அத்தான். வீட்டில் சுருக்கமாக என்ன வென்று


கமலியும் ப்ரியாவும்

 

 கமலி கோவிலில் விளக்குக்கு விட எண்ணெயை ஒரு பாட்டிலில் எடுத்து அதனோடு தொடுத்த பூவையும் ஒரு கூடையில் வைத்துவிட்டு சாரியை மாற்றிக் கொண்டே மணியைப் பார்த்தாள். ஐந்து நாற்பது. ஆச்சு!. ப்ரியா வந்துடுவள் என்று எண்ணுமுன்பே ஹாலில் வந்து பொத்தென்று சோபாவில் விழுந்தாள் ப்ரியா. அவளை காலேஜ் பஸ் தினமும் சரியாகக் வீட்டில் கொண்டு சேர்த்துவிடும். “ப்ரியா! கோவிலுக்கு வரியா. இன்னிக்கு ஸ்ரீராம நவமி. ராமரை தரிசித்து ரொமப நாளாச்சே. வாயேன் போய்ட்டு வருவோம்” என்றாள் கமலி.


சேலை

 

 பிரபல புடவைக் கடையின் மேனேஐர்தான் கேசவன். ஆனால் அவன் மனைவி சித்ராவே சேலைக் கட்டுவதில்லை. என்ன செய்வது? சித்ரா தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கிறாள். பெரும்பாலும், அவள் நடிப்பது மாடர்ன் பெண் கதாபாத்திரங்களில்தான். அதற்காக மாடர்ன் டிரஸ் போட்டுப் போட்டு அப்படியே அதற்கு பழகிவிட்டாள். கேசவன் பலமுறை அவளைப் புடவைக் கட்டச் சொல்லி கேட்டிருக்கிறான். ”போங்க, அதெல்லாம் எனக்கு செட் ஆகாது” என சொல்லி விடுவாள். அப்படிப்பட்டவள், ஒருநாள் தானே முன்வந்து, கேசவனிடம் கேட்டாள், ”என்னங்க, ஐவுளிக்கடையில ஷோகேஸ்