கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2016

59 கதைகள் கிடைத்துள்ளன.

நிறம் மாறும் மனசு!

 

 “”அய்யா உங்களைப் பார்க்க ஒரு அய்யா வந்திருக்காக… மேனேஜர் அய்யா உங்களை கையோட அழைச்சிட்டு வரச் சொன்னாங்க…” என்ற காமாட்சியின் பின்னாலேயே நடந்தார் அவர். “”அய்யா கிட்ட ஒண்ணு கேட்கலாமுங்களா” “”கேளேன் காமாட்சி” “”ஏன்யா, நீங்க இந்த இல்லத்தை விட்டுட்டுப் போறீங்களாமே… நிஜமா…” அவர் சிரித்துக் கொண்டே, “” நீ சொல்லு காமாட்சி இருக்கட்டுமா… போகட்டும்மா?” “”நீங்க தா முடிவு பண்ணனும். ஆனா, ஒண்ணு, நீங்க இல்லைன்னா… இந்த இல்லத்துலே… இந்த இல்லத்துலே…” என்று எதையோ சொல்ல


வெள்ளை யானை வெளியேறுகிறது

 

 ‘கடவுளே காப்பாத்து’னு ராதாரவி அலர்றாரு. உடனே பிசாசு ஜன்னல் வழியே வந்து ஹீரோவைக் காப்பாத்துது. கூப்பிட்டது கடவுளை… வந்தது பிசாசு!’ – இப்படித்தானா என சரியாக நினைவில்லை. இதுமாதிரி ஒரு கமென்ட்டைத் தட்டிவிட்டதாகவும் லைக்குகள் குவிந்ததாகவும் தாமரைக்கண்ணன் என்னிடம் சொன்னது நினைவில் இருந்தது. கூடவே, ”படிக்கிற காலத்துல புக்கும் கையுமா இருந்தாக்கூட, தலையெழுத்து வெளங்கியிருக்கும். இப்ப எப்பப் பார்த்தாலும் அதென்ன ஃபேஸ்புக்கு..?” என்ற தாமரையின் அம்மாவின் (எனக்கு பெரியம்மா முறை) புலம்பலும் இன்னும் நினைவில் இருந்தது. ”நீயாவது


பக்கத்து அறைகள்

 

 வழக்கமாக பின்னேரம் ஏழுமணிக்கு வீட்டுக்கு வருபவன், இன்று வழக்கத்திற்கு மாறாகக் கொஞ்சம் முந்தி வீட்டுக்கு வந்தான். மாசி மாதம் பிறந்துவிட்டது. வெளியில் நல்ல வெயிலடித்தாலும், குளிர் காற்றடிக்கும்போது ஊசி முனையாற் குத்துவதுபோல்; காற்று முகத்தில் பாய்கிறது. தெருவில் பல குழந்தைகள் சத்தம் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் குளிரையும் பொருட்படுத்தாமல் மிக ஆரவாரமாரமாச் சத்தம் போட்டு,ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தார்கள்.வாழக்கையில் மிகவும் சந்தோசமான பருவம் குழந்தைப் பருவம்தானே? அவன் பெருமூச்சுவிட்டான். இலங்கையில் அரச விமானங்கள் தமிழ்ப்பகுதிகளிற் குண்டுபோடுவதாகப் பத்திரிகைகளிற் படித்தான்.இங்கு


வேலாயுதம்

 

 நீங்கள் பார்த்தீர்கள் என்றால் நிச்சயம் உங்களுக்கு அவரை உடனே பிடிக்கும். (அவர் என்றே இருக்கட்டும், ஏனென்றால் இந்தக் கதையின் முக்கிய பாத்திரம் – முக்கிய என்ன, கிட்டத்தட்ட ஒரே கதா பாத்திரம் – அப்ப தலைப்புக்கும் அவர் பெயரையே வைத்து விடலாம்…. ‘வேலாயுதம்’ சரி தானே..! ) அந்தத் துரு துரு கண்கள்… சிரிக்கும் பொழுது தெரியும் தெற்றுப் பல்…. இடது புருவத்திற்கு அருகில் ஒரு சின்ன மச்சம்.. தன் தலையை ஆட்டி ஆட்டிப் பேசும் ஆவல்….


ஒரு குழந்தையின் மனம்

 

 எப்போதும் பரபரப்பாக இருக்கும் ‘தாமு பேன்சி’ கடையில் பம்பரமாய் சுழலும், கார்த்திக்கை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பிடிக்கும். காரணம் அவன் சிறுவன் என்றாலும், அனைவரிடமும் சிரித்து பேசி, வேகமாக செயல்பட்டு, அனைவரையும் கவர்ந்து வைத்திருந்தான். அவனின் முதலாளி தாமோதரன் உட்பட. கடையில் வேலை செய்யும் அனைவரும் வெளியில் தான் சாப்பிடுவார்கள். ஆனால் கார்த்திக் மட்டும் தினமும் காலை எட்டு மணிக்கு தாமோதரன் வீட்டுக்கு சென்று விடுவான். அங்கேயே சாப்பிட்டு விட்டு தன் முதலாளி மகன் விஜயை, பள்ளிக்கூடத்தில் கொண்டு