கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: April 19, 2016

10 கதைகள் கிடைத்துள்ளன.

குருஜி

 

 “ராஜன்ஜி….?” வேகமாகப் போய்க் கொண்டிருந்தவரை யாரோ பின்னாலிருந்து உரத்த குரலில் அழைக்க தன் கழுத்தைத் திருப்பிப் பார்த்தார். யார் என்பதற்குள் நாம் ராஜன் ஜி அவர்களை முழுவதுமாகப் பார்த்துவிடுவோம்…. என்ன வயது என்று தீர்மானிக்க முடியாத தோற்றம்…. முகம் முழுதும் கரு கரு தாடியில் சில வெள்ளிக் கீற்றுக்கள் மின்னின.. தடித்த ஃப்ரேம் கண்ணாடிக்குள், நாவல் பழ நிற கருவிழிகள் பட படத்தன… அடர்த்தியான புருவங்கள்… மேலுக்கு ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தார்.. அந்த ஒத்தை அடிப் பாதையில்


தீர்ந்து போன “மை”

 

 இணையத் தரவிறக்க மையம் முழுவதும் கூட்டமாக மாணவர்கள் நின்றனர். கைபேசியில் முயன்று தோல்வியுற்றதால் அனைவரும் தங்கள் தேர்வு முடிவுகளைப் பார்க்க ஆவலோடு நின்றனர். டேய் என்னடா, அரியர்ஸ் எல்லாம் கிளியரா, கம்ப்யூட்டர் சைன்ஸ் பாசா என்று அனிதா ஒரு மாணவனைக் கேட்கிறாள். போங்கடி, நீங்கள்லாம் பாசாகிட்டீங்களாக்கும், ஒரே திமிருல அலைறீங்க என்று அவன் அதட்டிச் சென்றான். ஏய் எரும, சும்மா இருக்க மாட்டியாடி, அவனுங்க திமிருக்கு ஃபெயில் ஆவானுங்க, கேட்டா நம்ம அசிங்கமா பேசுவானுங்கடி என்று அஞ்சலி


உறவுகளின் நிலை

 

 வருஷம் 1980: ”பீரியட்ஸ் தள்ளிப்போயிருக்கிறது” “வேண்டாம் ராஜி! இப்போது வேண்டாம். கலைத்து விடுவோம்” ”இல்லைங்க. எனக்கு வேண்டும் என்றே தோண்றுகிறது” ”முட்டாள்தனமா பேசாத ராஜி! நாம தானே யோசித்து முடிவு செய்தோம் ? நம் சம்பளத்திற்க்கு ஒரு குழந்தையைத்தான் சமாளிக்க முடியும் என்று…… என்ன, கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்திருக்கணும்!” ”இல்ல…”. ”இன்னும் ஒன்று யோசி ராஜி! போன குழந்தையைப் பார்த்துக்கொள்ள உங்க அம்மா கூட இருந்தார். ஆனா, இப்போது? தனியாக உன்னால் வேலை, வீடு, பெரியவன், நான்,


புதிய பயணம்…

 

 “இப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்ததற்கு பதில் செத்து போயிருக்கலாம்?” என்று அவன் சோபாவில் உட்கார்ந்தபடியே யோசித்து யோசித்து உறங்கிப்போனான். “என்னங்க… ரூம்ல போய் படுக்குறீங்களா?” என்று அவன் மனைவி சரோஜா எழுப்பினாள். “இல்ல.. வேணாம்மா..” “ஜூஸ் ஏதாவது கலக்கி தரட்டுமா?” “சரி.. அப்படியே.. அந்த டிவி கன்ட்ரோலை எடுத்து கொடு..” “இந்தாங்க”.. கொடுத்துவிட்டு ஜூஸ் கரைக்க சென்றாள். அவன் டிவியை இயக்கி.. ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்டே இருந்தான். எதிலும் மனசு நிலைக்கவில்லை. கண்கள் டிவியை பார்த்தாலும் அவனது


திண்ணை

 

 ரங்கனை ஒரு மாதிரியாக ஏறஇறங்க பார்த்தார் டிராப்ட்ஸ்மேன் வாசு. ”என்ன ஸார் ஒரு மாதிரி பாக்குறீங்க? கேள்வி கேட்டான் ரங்கன். ”என்னப்பா, இந்த காலத்துல, வீடு கட்டுறதுக்கு, இப்படி ஒரு வரைப்படம் வரைஞ்சு கொடுக்க சொல்றீயே, இதெல்லாம் பழைய காலத்து ஆட்கள் கட்டுறது. நீ இந்த காலத்து ஆளு, பரபரப்பான நகர்புறத்துல, வீட்டை இப்படி கட்டுறதுக்கு பிளான் போடச் சொல்றே” என்றார் வாசு. ”நான் சொல்ற மாதிரி வரைஞ்சு கொடுங்கோ, இல்லேன்னா வேற ஆளைப் பாத்துக்கறேன் என்றான்”


வேள்வித் தீ குளிர் காய்வதற்கு அல்ல !

 

 விநாயகர் படத்தின் முன்பாக வழக்கம்போல் மாவட்ட ஆட்சியர் விக்னேஷ் என்பவர் நின்று, வணங்கி விட்டு, தன இருக்கையில் அமர்ந்து கொண்டு அலுவலகக் கோப்புகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். “ அய்யா! வணக்கம். என் பெயர் தூங்கத் தேவர். என தன்னை அறிமுகப்படுத்தி விட்டு, “என்னை அய்யா நேரில் பார்த்து பேசணுமுன்னு சொன்னேங்கலாம்” என்ற தூங்கத் தேவரின் பணிவான குரல் கேட்டு மாவட்ட ஆட்சியர் நிமிர்ந்து அவரைப் பார்த்தார். தும்பைப்பூ போன்று வெண்மையான வேஷ்டி, இடுப்பில் கட்டிய வெண்மையான


கிறீஸ் தூக்கியவன் கையில் ஓர் அன்பு நதி

 

 அடுப்படி நெருப்பின் புகை தின்று வாழ்க்கையைக் கழித்து வருகின்ற சாரதாவுக்கு அப்போதைய அன்றைய காலகட்டத்தின் ஒவ்வொரு நிகழ்வும் சவால் களம் தான் நித்ய வறுமையைச் சமாளிப்பதே மிகப் பெரிய சவால் அன்பு விட்டுப் போய் மறை பொருளாகவே இருக்கிற கணவனை நம்பி நடுக்கடலில் வீழ்ந்து கரையேறவே முடியாமல் தத்தளிக்கின்ற மிகவும் பரிதாபகரமான சோக நிலைமை அவளுக்கு புருஷன் கோபி பெயரளவில் தான் அவளுக்குக் கணவன் எந்த வழியாலும் அவனால் அவள் சகப்பட்டதில்லை உடற் சுகம் ஒன்றைத் தவிர


வாடகைத் தாய்

 

 அன்று காலை செய்தித்தாளின் முதல் பக்கத்தில், ‘காதம்பரி இன்டஸ்ட்றீஸ் சேர்மேன் அன்ட் மானேஜிங் டைரக்டர் சுகுமார் மாரடைப்பால் மரணம்’ என்ற செய்தியைப் படித்த டாக்டர் வத்சலா அதிர்ந்து போனாள். உடம்பு பதறியது. சுகன்யாவின் நிலமையை எண்ணி கலக்கமுற்றாள். சுகன்யா… டாக்டர் வத்சலாவின் க்ளினிக் பெங்களூரில் மிகவும் புகழ் பெற்றது. பெண்கள் சம்பந்தப்பட்ட தாய்மைக் குறைகள் அனைத்தையும் அலசி களைந்து தீர்வு காண்பதில் மிகப் பிரபலம். கடந்த பதினைந்து வருடங்களில் டாக்டர் வத்சலாவின் திறமையினால் மருத்துவப் பிரச்னைகளைத் தாண்டி


கொஞ்சம் அதிகம் இனிப்பு

 

 அருள்செல்வத்தின் போன் நம்பரை ஸ்டீபன் அனுப்பியிருந்தான். கன்னையா அதைத் தனது செல்போனில் பதிவுபண்ணி வைத்துக்கொண்டான். காலையில் மீன் மார்க்கெட் அருகில் ஸ்டீபனைப் பார்த்தபோது, அருள்செல்வத்தைப் பற்றி அவன்தான் சொன்னான். பூந்தண்டலத்தில் மூன்றரை வருடங்களாக விற்க முடியாமல் கிடந்த நிலம். எப்படியாவது ஒரு பார்ட்டியைப் பிடித்து விற்றுக்கொடுத்தால், கமிஷன் மட்டும் இரண்டரை லட்சம் தருவதாக ஷெட்டி சொல்லியிருக்கிறான். அருள்செல்வத்தை எப்படியாவது பேசி மடக்கிவிட வேண்டும். இந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனையோ நபர்களை அழைத்துக்கொண்டு போய் இடத்தைக் காட்டிவிட்டான் கன்னையா.


மொழி

 

 நேற்றிலிருந்தே வினிதாவின் மனதில் கலக்கம் குடி கொண்டு விட்டது. அவளின் கணவருக்கு வங்கியில் புரமோஷன் கிடைத்துள்ளது. ஒரு மாதத்திற்குள் டிரான்ஸ்பர் என்று கூறியிருந்ததுதான் அவளின் கவலைக்குக் காரணம். நல்ல விஷயம் தானே? கணவர் உற்சாகத்தில்தான் உள்ளார். என்றாலும், அந்த உற்சாகத்தில் துளி கூட வினிதாவிற்கு டிரான்ஸ்பர் ஆகவில்லை. கல்யாணம் ஆனதிலிருந்து பத்து வருடங்கள் இந்த ஊரிலேயே இருந்து விட்டார்கள். உத்தியோகஸ்தர்களின் வருடாந்திர பிரச்னைகளான புது வீடு பார்ப்பு, வாடகை ஒப்பந்தம், பள்ளி சேர்க்கை, புது மனித சிநேகம்,