கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: April 5, 2016

9 கதைகள் கிடைத்துள்ளன.

பறக்காத பறவைகள்

 

 அலாரம் அடிக்கிறது. விடியற்புறம் நான்கு பதினைந்து. காலைக் கடன்களை அவசரமாக முடித்துக் கொண்டு, உடுப்புகளை அணிந்து கொள்கின்றேன். மனைவி தேநீரை நீட்டுகின்றாள். தேநீரை நின்றபடியே ஒரே இழுவையாக இழுத்துக் கொள்கின்றேன். “என்ன எழும்பியாச்சுப் போல!” “இரவு முழுக்கப் பிள்ளை நித்திரை கொள்ள விடேல்லை!” “சரி போட்டு வாறன்.” கதவைப் பூட்டி விட்டு, ஒரு கள்ளனைப் போல, படிகளிலிருந்து இறங்கி இருளிற்குள் நடந்து செல்கின்றேன். மெதுவாக நடக்காவிடில் நாய்கள் விடியலை ஆரவாரப் படுத்திவிடும். தரிப்பிடத்தில் நின்ற ‘ஹொண்டா சிவிக்’


உயிர்துளி

 

 ஏம்மா, மணி 9 ஆகப்போகுதே இன்னும் அப்பா வரலையா??. முதல் ரேங்க் வாங்கி இருந்த அருண் அப்பாவிடம் தனது ரேங்க்கார்டை காண்பித்து அவரிடமிருந்து எப்போதும் போலப் பரிசுத் தொகை பெற வேண்டும் என்று காத்திருந்தான். அருணுக்கு 9 வயது படிப்பில் சுட்டி. இதுவரை பல பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றிருக்கிறான். இன்று அரையாண்டு பரிட்சை முடிந்து ரேங் கார்டு கொடுத்து இருந்தார்கள். அருண் அப்பாவின் வருகைக்காக வாசலை நோக்க எழுந்து நிற்க


அம்மாவின் தாலிக் கொடி

 

 தமிழ் பெண்களைப் பொறுத்தவரை இந்தத் தாலி அணிதல் என்பது வாழ்க்கை நிழல்களையெல்லாம் தாண்டி நிற்கிற உயிரையே ஒளி வட்டத்தில் தூக்கி நிறுத்துகின்ற பெருமைக் கவசம் மாதிரி அது அவர்களுக்கு அதை அணிந்தால் முகத்திலே ஒரு தனிக் களையோடு பிரகாசமாக அப்படி வலம் வருகிற பெண்கள் குறித்து அதை ஒரு குறியீடாகக் கொண்டு அம்மா வாழ்ந்ததாக சாந்தன் என்றைக்குமே கண்டதில்லை தாலியையென்ன நகைகளைக் கூட அவள் பெரிசுபடுத்துவதிலை அப்படி அவள் நினைத்திருந்தால் அதன் மூலம் தனக்கு ஏற்பட்ட இழப்புகளின்


புன்னகை

 

 “காலையில் இருந்து சாயங்காலம் வரைக்கும் உழைச்சு ஓடா தேயறோம்” மினிஸ்டர்; காட்டன்ல சட்டை போட்டுக்கிட்டு, துளியும் கசங்காம கார்ல வந்துட்டு போற முதலாளிக்கு நம்ம கஷ்டம் இன்னா தெரியும்” ஒரு பணியாளர் இன்னொரு பணியாளாரிடம் பேசிக்கொண்டிருந்ததை….. தொழில் நிறுவனத்தைச் சுற்றி பார்த்துக் கொண்டிருந்த எம்.டி. கேட்டு…. கோபம் முக்கின் நுனியை தொட அதை அடக்கி விட்டு, உதட்டில் புன்னகைத்தார் “என்ன வார்த்தை இது, நாம சொகுசா இருக்கிறதா இவங்களே நெனச்சுகிட்டா, இப்படி பேசறவனை வேலையை விட்டு நிறுத்தி


ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் பெயர் தோன்றிய கதை

 

 ஒரு சிலந்திப் பூச்சி, தன் வாயிலிருந்து வந்த நூலால் சிவனுக்கு கோவில் எழுப்பியது. ஒவ்வொரு கணமும் அந்த ஆலயத்தை உன்னிப்புடன் கவனித்து, சரி செய்தபடி, சதா சிவ தியானத்திலேயே நேரத்தைச் செலவிட்டது. பூர்வ புண்ணிய பலனால் அந்தப் பூச்சிக்கு அப்பேற்பட்ட விவேகம் வந்து வாய்த்திருந்தது.. ‘சிலந்திக் கூட்டுக் கோவிலில் சிவன் வாசிப்பாரா?’ என்று ஆச்சர்யப்படத் தேவையில்லை. பரந்து விரிந்த விஸ்வமே சரீரமாகக் கொண்ட விஸ்வேஸ்வரன், நாம் கட்டிய கோவிலில் வசிக்கிறாரல்லவா? அணுவை விடச் சிறியவன், பெரியவற்றிற்கெல்லாம் பெரியவன்


விடியாத இரவுகள்

 

 சோமசுந்தரம் விரைந்து நடந்தார். வானம் பொத்துக்கொண்டு அழுது வடிந்தது.தலையில் கொட்டும் மழையைவிட எத்தனையோ மடங்கு கண்ணீர் அவர் மனதில் கொட்டிக்கொண்டிருந்தது.’குடைகொண்டு வந்திருக்கலாம்’ இரைந்து பெய்யும் அந்த மழையில் அவர் வாய்விட்டுச்சொன்னது அவரின் காதுகளில் கேட்காமல் தூரத்தில் விழுந்து தெறிக்கிறது. ‘என்ன மழை,என்ன குளிர்,என்ன வாழ்க்கை?’ அவர் மனதில் பல கேள்விகள் தொடர்கின்றன. ‘வெண்ணீறணிந்ததென்ன,வேலைப்பிடித்ததென்ன?’ என்று பக்தியுடன் முருகனிடம் கேள்வி கேட்ட பாடகி சுந்தராம்பாள் மாதிரி,அவரும் கைகூப்பி பரமாத்மாவை வணங்கும் வயதில், தனது மருமகனிடம் கைநீட்டிக் கடன்வாங்கச் சென்றார்.


சூஸன்

 

 தன் மகன் ஜேம்ஸின் முடிவைக் கேட்டு அதிர்ந்து போனாள் சூஸன். “டேய் ஜேம்ஸ், பாரதி பிராமண வகுப்பைச் சேர்ந்தவள்… நாமளோ கிறிஸ்டியன், நமக்கு இந்தச் சம்பந்தம் ஒத்து வராதுடா, என்னோட கதைதான் உனக்குத் தெரியுமே, நான் பட்ட அவமானங்கள், கஷ்டங்கள் எத்தனை… அது மாதிரி பாரதியும் கஷ்டப்படக் கூடாது ஜேம்ஸ்.” அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்த ஜேம்ஸ், :அம்மா, உன்னோட கஷ்டங்கள் வேற மாதிரி… மேலும் உனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் நாற்பது வருடங்களுக்கு முன்னால். இப்ப நாம


குதிரைக்காரன் குறிப்புகள்

 

 ‘வீழாதே என் தெய்வமே வீழ்ந்துவிடாதே வீழ்ந்தவர் எவரும் எழுந்ததில்லையே! ’ – song of giant of the first age. ”ப்ளூ மவுன்டெய்னை விக்கப்போறேன் அசோக்… திஸ் வில் பி ஹெர் லாஸ்ட் ரேஸ்…’ முதலாளியிடம் இருந்து இந்த வார்த்தைகளை அசோக் கேட்டபோது, அந்த நாளுக்கான சூரிய வெளிச்சம் அடிவானத்தில் இருந்து எழத் தொடங்கியது. இன்னும் பனி விலகாத புல்வெளி. பந்தயச் சாலையை ஒருமுறை பார்த்தவன், அந்தக் குதிரையின் மீது முதல்முறையாக ஏறிய நாளை நினைத்துக்கொண்டான்.


பதியைத் தேடி!

 

 “”என்ன மாமா திடீர்னு வந்திருக்கீங்க? எதுனாச்சும் முக்கியமான விஷயமா?” “”ஆமாங்க போன தபா வந்தப்ப நீங்க எழுதுன மண்மேடுங்குற புஸ்தகத்த கொடுத்தீங்கள்ள… அத நேத்துத்துத்தான் படிச்சேன். அந்த புக்குல மண்மேடு கதையில அத்திப்பட்டுங்குற ஊரைப் பத்தி எழுதியிருக்கீங்கள்ள அது சம்பந்தமா தான் பேச வந்திருக்கேன். அந்த ஊர்ல இருந்தவங்க யாராச்சும் இருந்தா அவங்கள பாத்துப் பேசணும்” “”அந்த ஊர்தான் நெய்வேலி சுரங்கமாயிடுச்சே… என்ன விஷயம்னு தெளிவா சொல்லுங்களேன்” “”உங்களுக்கே தெரியும் எங்க குலதெய்வத்தோட பதி எங்க இருக்குன்னு.