Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2016

68 கதைகள் கிடைத்துள்ளன.

இலவு காத்தக் கிளி !

 

 விநாயகனே வேழமுகத்தோனே. . . . . .! எங்கோ சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பக்திப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது . அப்போது “குட்மார்னிங் பாபு ! “ என்று லதாவும் , மைதிலியும் கோரஸாக காலை வணக்கம் பாபுவுக்கு கூறினார்கள். “வெரிகுட்மார்னிங் என்ன ஜோடிப்புறாக்களே, காலேஜ்க்கு புறப்பட்டு விட்டீங்கபோல் தெரியுதே“ என்றான் பாபு சிரித்துக் கொண்டே. . “ஆமாம் பாபு ! நீங்க உங்க ஆபீஸ்க்கு கெளம்ப நேரமாகல்லே “ என்றாள், லதா . “


ஒருவன் விலைப்படுகிறான்

 

 எனக்குத் தெரிந்த முகங்களை விடத் தெரியாத முகங்கள்தான் அந்த இடத்தில் கூடிய அளவிற் தெரிந்தார்கள். அவர்களிற் பெருப்பாலானர்வர்கள் பெண்பகுதி விருந்தினர்கள். எனது -அதாவது மாப்பிள்ளை தரப்பில் நானும் எனது சில நண்பர்கள் மட்டும்தான வந்திருந்தோம்;. ஏதோ ஒரு பகிரங்கக் கூட்டத்தில் முன்பின் தெரியாதவர்களுடன் அகப்பட்ட பிரமை எனக்கு. எனது ‘மாமனார்’ அரைகுறை வெறியில் அங்குமிங்கும் திரிந்து வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருக்கிறார். மாமியார், சில வாரங்களுக்கு முன் நான் அவர்களிள் மகளைப் ‘பொண்பார்க்கப்’போனபோது என்னைப் பார்த்து அரையும் குறையுமாய்ச்


பூஜையறை

 

 சுவாமிநாதன் கடந்த இருபது வருடங்களாக சர்க்கரை நோயினால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறார்.. மருந்து மாத்திரைகள், தினசா¢ காலையில் நடைப் பயிற்சி என எதுவும் அவரது சர்க்கரையின் அளவைக் குறைக்கவில்லை. திடீரென சுவாமிநாதனுக்கு இன்று காலை ஐந்து மணிக்கு சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்து லோ சுகர் ஏற்பட்டு உடம்பு வெல வெலத்துவிட்டது, தொப்பலாக வியர்த்தது. கண்கள் இருட்டிக் கொண்டு உடம்பு படபடத்தது. அவசர அவசரமாக சுகர் அளவு பார்த்தபோது 59 என்று காண்பித்தது. எப்பவுமே 150க்கும் மேல்


காத்திருந்தவன்

 

 “சங்கர் முந்திமாதிரி இல்லேம்மா. சிடுசிடுங்கிறாரு!” சங்கரை அனுபமா தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்து அறிமுகப்படுத்தியபோது, தான் உண்மையை மறைக்காது சொன்னது எவ்வளவு நல்லதாகப் போய்விட்டது! ‘இவங்கப்பா காண்ட்ராக்டில வீடு கட்டற தொழிலாளியா இருந்தவரு. வேலை பாக்கிறப்போ ஒரு விபத்திலே போயிட்டாரு,’ என்று ஆரம்பித்து, வயிற்றுப் பிழைப்புக்காகத் தான் வேலை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதைத் தெரிவித்தாள். அனுபமாவின் அழகில் கிறங்கிப் போயிருந்தவனுக்கு அந்தஸ்து வித்தியாசம் ஒரு பொருட்டாகப்படாது என்று தான் எண்ணியது பொய்த்துவிட்டதே! “விடுடி. ஏதோ, காதல்,


தலை எழுத்து

 

 ஊறுகாய் பாட்டில்களை, வாய் அகன்ற பையில் வரிசையாக வைத்துக் கொண்டிருந்தாள் புனிதா. வாசலில் டாட்டா சுமோ ஓசைப்படாமல் வந்து நின்றது. தன்னுடைய பையில் ஊறுகாய் பாட்டில்களை வைத்துக் கொண்டிருந்த ராமலிங்கம் “”அம்மா… பெரியம்மா வீட்டுக் கார்” என்று சொன்னான். புனிதா எழுந்து பார்த்தாள். டிரைவர் முத்து வந்தான். “”வா முத்து… எதாவது விசேஷமா?” சற்று கலவரப்பட்டவளாகக் கேட்டாள். “”உங்க அக்கா, உங்களை வரச் சொன்னாங்க” “”சரி வர்றேன் போ” “”டிரைவர் போய்விட்டான். “”அம்மா எதுக்கு பெரியம்மா வரச்


என்னைப் பிடிச்சிருக்கா?

 

 ”எனக்குப் பிடிக்கலை, ரசிகா…’ ‘எதும்மா… என் டிரெஸ்ஸா?’ ‘ஒரு எடத்துல உக்காந்து பேச வேண்டியதுதான..? அது என்ன, கார்ல ரவுண்டு அடிச்சுக்கிட்டே பேட்டி எடுக்கிறது?’ ‘ஏம்மா, செங்குட்டுவன் என்னை அப்படியே அவரோட கெஸ்ட் ஹவுஸுக்கு நைஸா கூட்டிட்டுப் போயிடுவார்னு பயப்படுறியா? அப்படியே போனாலும், ஐ டோன்ட் மைண்ட். எத்தனை பொண்ணுங்க ஏங்கிக்கிட்டு இருக்காங்க தெரியுமா?’ ‘ச்சீ… அம்மாகிட்ட பேசுற பேச்சாடி இது?’ அப்போது ஹார்ன் சத்தம் கேட்டது. ரசிகா பால்கனிக்கு ஓடிவந்து வெளியே எட்டிப் பார்த்தாள். ‘வந்தாச்சு!’


கல்லுக்குழி!

 

 “ சித்ரா!….சித்ரா!…ஏண்டி அலாரம் அடிப்பது கூடத் தெரியாமே அப்படி என்னடி தூக்கம்?…எழுந்து வாடி!….”என்ற அம்மா கண்மணியின் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தாள் சித்ரா. காலை ஐந்து மணி. அதற்குள் அம்மா ஆரம்பித்து விட்டாள் ‘படி!..படி!.’ என்ற ராமாயணத்தை!. முகத்தைக் கழுவிக் கொண்டு, வேறு வழியில்லாமல், பாடப் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தாள் சித்ரா. இந்த வருடம் தான் பத்தாவது வகுப்பிற்கு போயிருந்தாள் சித்ரா. கண்மணிக்கு சித்ரா எப்படியாவது எம்.காம். முடித்து சி.ஏ. பாஸ் செய்து,


பொறுப்பு

 

 கதை கேட்க: https://www.youtube.com/watch?v=oAEZ3qdx3kc சரியாய் ஆறுமணிக்கு வந்தவிடுவதாக பொறுப்பாய் சொன்ன ஜோஸ்வா, இன்னமும் வரவில்லை! இன்று அவனது காதலுக்கு பச்சைக்கொடி காட்டுவதாக ஜாடையாய்க் கூறியும் அவன் வராத்து, அவன்மீது நம்பிக்கை இழக்கச் செய்ததுடன், பொறப்பில்லாதவன் எனவும் நினைக்க வேண்டியதாயிற்று ஜானுவிற்கு. மணி ஏழாகிவிட்டிருந்த்து. ஒரு மணி நேரமாய், தனியாக மெரினாவில் காத்திருந்த ஜானுவின் மீது பார்வைகள் தினுசு தினுசாய் படர்ந்த்தில், அவள் மனம் கொந்தளித்தது. கொஞ்சம் அக்கறையும் பொறுப்பும் இருந்தால், இந்நேரம் வந்திருக்க வேண்டும். ”இவனை நம்பி


ஆவணப் படம்

 

 மெல்லிய வெளிச்சத்தில் சிவப்பாய் தெரிந்தாள்…அவள்… “பேர் என்ன…” சாளரத்தைத் திறந்து கொண்டே கேட்டான் அர்ஜுன்…. “இப்போ எதுக்கு ஜன்னல திறக்கற… பேர் எல்லாம் எதுக்கு.. வந்தமா வேலைய பார்த்தமான்னு இல்லாம…..?” என்றபடியே சிவப்பழகி கட்டிலில் அகல விரிந்த கால்களோடு கிடந்தாள்… செவிக்குள் நுழைந்த அவளின் வார்த்தைகளில் கடும் விரக்தி இருப்பதை உள் வாங்கிக் கொண்டே பின்னால் திரும்பி அவளை அர்த்தத்தோடு பார்த்தான்… “ம்ம்…….. நீ கொஞ்ஞ்ஞ்ஞ்சம் அழகா இருக்க…”என்று சொல்லி கண்ணடித்து சிரித்தான் அர்ஜுன்… “எல்லாரும் சொல்றதுதான்…”


உணர்ந்து விட்டாயா தேவனை?

 

 சேவல் கூவுகின்ற அதிகாலைப் பொழுது. மின் மோட்டாருக்கென அமைக்கப்பட்ட அந்த அறையினுள் இரவுப் பொழுதில் மறைந்து கொண்டிருந்த ஜேம்ஸ் மனதிற்குள் பெரும் கவலை ஏற்பட்டது. தூக்கமே வரல, சாப்புடுற சாப்பாடு கூட நிம்மதியா சாப்புட முடீல, இப்புடி தெனந் தெனம் அடுத்தவென் ஒழச்ச காச அமுக்கி வாழற வாழ்க்க நமக்குத் தேவதானா, தூரத்துல ஏதோ வெளுச்சம் தெரீது, மொதல்ல இங்க இருந்து கிளம்பனும்…. இவ்வாறு புலம்பிக் கொண்டே அவ்விடத்திலிருந்து தப்பிக்க வெகு விரைவாகக் கிளம்பினான் ஜேம்ஸ். ஜேம்ஸ்