Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2016

68 கதைகள் கிடைத்துள்ளன.

மழை வெள்ளம்

 

 மெக்கானிக் சுதனுக்கு ஞாயிறு தோறும் ஷிப்ட் மாறும். அந்த வாரம் அவனுக்கு இரவு ஷிப்ட் கடந்த இரண்டு நாட்களாகவே கனத்த மழை பெய்வதால் சைக்கிளில் செல்லாமல் நடந்தே தொழிற்சாலைக்குச் சென்று கொண்டிருந்தான். அன்று மழையும் மிக அதிகமாக இருந்தது, மின்சாரமும் போய்விட்டிருந்தது. பணிக்குக் கிளம்பிக் கொண்டிருந்த சுதனிடம் அவன் மனைவி டார்ச் லைட்டை கையில் தந்தாள். உங்களுக்கு? என்று சுதன் கேட்க “நாங்கள் மெழுகுவர்த்தியை வைத்து சமாளித்துக் கொள்வோம். ரோடெல்லாம் ஒரே கும்மிருட்டு. வெள்ளக் காடாக வேறு


தாய் மண்ணே! வணக்கம்!

 

 அவர்கள் இப்படிப் பேசுவார்கள் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. மனம் வலித்தது. மனிதர்கள் தூரத்தில் இருந்தால் மனதுகள் அருகில் இருக்கும் என்று கூறுவார்களே! இங்கு ஏன் இப்படி? மகிழ்ச்சியாகத் துவங்கப் பட்ட இந்த என் பயணம் இப்படிப் பட்ட துன்பச் சுமையைச் சுமக்கத்தான் ஏற்பட்டதா? எனக்கு ஆறவில்லை. எல்லாம் இப்படித்தான் ஆரம்பித்தது… ….. ஜன்னல் சீட் கேட்டுப் பெற்றது நல்லதாகி விட்டது. பஞ்சுப் பொதிகளாக மேகக் கூட்டங்கள் நான் கற்பனை செய்ததை விட ஆச்சர்யத்தை அளித்தன. மேகத்திற்கும்


தேகசுகம்

 

 வத்தலகுண்டு ஊருக்கு மாற்றலானதும் முதலில் வேண்டா வெறுப்பாக அங்கு சென்றாலும், பின்பு அவ்வூரின் அழகும், அமைதியும், கொடைக்கானல் மலையடிவாரமும், மக்களின் பழகும் தன்மையும், அவனுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. அவனுக்கு இருபத்தியெட்டு வயது. இன்னமும் திருமணமாகவில்லை. தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ஐந்து இலக்க சம்பளத்தில் நல்ல வேலை. அவனுடைய பலஹீனம் பெண்கள். அவனின் வாட்ட சாட்டமான அழகும், நேர்த்தியான உடையும், கம்பீரமும், பழகும் தன்மையும், நல்ல வேலையும் பல பெண்களை அவன் தன் பால் ஈர்த்ததில்


றோஸா லஷ்சம்போர்க் வீதி

 

 குழந்தைக்கு நல்ல நித்திரைபோலும்,சரியாகப் பால்குடிக்காமலே தூங்கிவிட்டாள.; குழந்தையை இன்னொருதரம் எழுப்பிப் பால் கொடுக்கத் தொடங்கினால் வேலைக்குப்போக நேரமாகிவிடும். நேரத்துக்கு வேலைக்குப் போகாவிட்டால் இவளுடைய ஜேர்மன் முதலாளிக்குப் பிடிக்காது. வேலையால் நிறுத்தப்பட்டால்,இவளின் ஊதியத்தில் தங்கியிருக்கும் குடும்பம் தாங்காது. சுமதி,மெல்லமாகக் குழந்தையைத் தனது முலையிலிருந்து விலக்கினாள். குழந்தை,நித்திரைத் தூக்கத்தில், முலையைச் சப்புவதுபோல் சப்பிவிட்டுத்தூங்கிவிட்டது. இன்னும் இரண்டு மூன்று மணித்தியாலங்களுக்குக் குழந்தை எழும்பாமற் தூங்குவாள். மூன்று மாதக்குழந்தை உலகில் எந்தத் துன்பத்தையும் அறியாமற் தூங்குகிறாள். ‘நானும் இப்படி;தான் இருந்திருப்பேனா’? சுமதி தனக்குள்த்தானே


வருடம் 23

 

 1986 -ஆம் ஆண்டு கோடையில் பியா என்ற பதினோரு வயது சிறுமி கோதுமை வயல்வெளியில் வைத்து, ரோஷன் என்பவனால் கற்பழித்து கொல்லப்படுகிறாள். அவனது சிவப்புநிற காரில், அவனது நண்பனும், கணிதம் படிக்கும் மாணவனுமான அனீஷ் உடனிருக்கிறான். பியாவின் மிதிவண்டியை கோதுமை வயல்வெளியில் எறிந்துவிட்டு, அவளது உடலை ஏரி ஒன்றில் எறிந்துவிடுகிறான் ரோஷன்.. சரியாக 23 வருடங்கள் கழித்து, பியா கொல்லப்பட்ட அதேநாளில் சினிக்கா என்ற 13 வயது சிறுமி காணாமல் போகிறாள். அவளது மிதிவண்டி பியாவின் மிதிவண்டி


ஆவி வரும் நேரம்

 

 நேரம் 4.20 ஆனது. பள்ளிக்கூடத்தில் மணி ஒலித்தது. அது பணக்கார வீட்டு பசங்க படிக்கிற ஸ்கூல். அதுனால ஸ்கூலுக்கு வெளிய பெத்தவங்க எல்லாம் கார வச்சுக்கிட்டு தங்களோட பிள்ளைகளுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க. நம்ம கதையோட ஹீரோ சந்துரு தன்னோட முதுகுப்பைய போட்டும் போடாமலும் கால் தரையில படுதானு கூட தெரியாம அவ்ளோ வேகமா ஓடி வந்தாரு. இத்தனை கார்களுக்கு மத்தியிலே ஒரே ஒரு ஆட்டோ. ப்பாம் பூ. . .பூ (ஆட்டோ ஒலிபெருக்கி). ஆரவாரமாக ஆட்டோவில்


மறுபக்கம்

 

 வீட்டுக்கு வந்த பின்னரும் இன்று செயலாளர் கூட்டத்தில் எழுப்பிய ஒரு பிரச்னையைப் பற்றிய சிந்தனையில்தான் என் மனம் உழன்று கொண்டிருந்தது. இருபது வீடுகள் அடங்கிய எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் செயலாளர் நான்தான். அதனால் இந்தப் பிரச்னையை நான்தான் பேசிக் கையாள வேண்டும் என மற்ற உறுப்பினர்கள் ஒரு மனதாக முடிவெடுத்து விட்டனர். அதனால் தப்பிக்க முடியாது. அதை எப்படிச் செயல்படுத்தப் போகிறேன் என்று மலைப்பாக இருந்தது. என் தியான நிலையைப் பார்த்த என் மனைவி, “”எந்த கோட்டையைப்


ராயல் டாக்கீஸ்

 

 காசிதான் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போயிருந்தான். தம்பி வரப்போவது பற்றி அவன் வீட்டுக்கே அரசல்புரசலாகத்தான் தெரியும். ஆனால், காசிக்கு மட்டும்தான் உறுதியாக இன்ன தேதியில், இந்த ரயிலில் வருகிறேன் என்பதை தம்பி சொல்லியிருந்தான். தம்பியின் உண்மையான பெயரான ‘கணபதி சுப்பிரமணியம்’ என்பது, அவனது சர்ட்டிஃபிகேட்டில் மட்டும்தான் உள்ளது. சுந்தரம் சார்வாள் சொல்வார்… ‘ஒண்ணு ‘கணவதி’னு வெச்சிருக்கணும்; இல்லன்னா ‘சுப்ரமணி’னு வெச்சிருக்கணும். அதென்னடே ஒருத்தனுக்கு ரெண்டு பேரு?’ வீட்டிலும் சரி, நண்பர்கள் மத்தியிலும் சரி… கணபதி சுப்பிரமணியம் எப்போதும் தம்பிதான்.


அம்மா

 

 அம்மா! அம்மாவுக்கு இன்னொரு பெயர் ‘உழைப்பு’. எப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டே இருப்பாள். சும்மா இருப்பது என்பது ரொம்ப கம்மி. இப்பவும் நான் அந்த கல்யாண மண்டபத்தின் மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருக்க கீழே கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். தன் தங்கையின் இரண்டாவது பெண்ணின் கல்யாணம். இன்னும் கல்யாண வேலைகளை முழுமையாக கான்ட்ராக்டில் விட ஆரம்பிக்காத காலம். இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன். எல்லா வேலைகளையும் தானே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வாள். கொஞ்ச நாட்களாக தம்பி


புரிந்துவிட்ட புதிர்

 

 இத மனுசன் சாப்பிடுவானா? அடுத்த கரண்டி சாதம் போடுவதற்கு முன் காந்திநாதன் தன் மனைவி சாந்தியை பார்த்து கேட்ட கேள்விக்கு ஏன் இதைத்தான் இரண்டு குழந்தைகளும் சாப்பிட்டுட்டு போச்சு, அவங்க மனுசங்களா தெரியலயா? இல்ல இதுவரைக்கும் வக்கணையா சாப்பிட்டிட்டு கடைசி சாப்பாட்டுல எழுந்து இந்த கேள்விய கேட்ட நீங்க எந்த வகையில சேர்த்தி! உடனே பதில் வந்ததை பொறுக்கமுடியாமல் உனக்கு வாய் ஜாஸ்தியாயிடுச்சு என்று எழுந்து சென்று கையை கழுவினான். சாப்பாட்டை பத்தி பேசுன வாய் இப்ப