கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2016

60 கதைகள் கிடைத்துள்ளன.

ராஜாராமன் செலவில்லாமல் சூனியம் வைத்த கதை (பாகம் 2)

 

 பட்டாளமாய் எட்டுப் பெண்கள் சூழ்ந்திருக்க ராஜா அட்டகாசமாய் ஆரம்பித்தான்.. ‘ இப்ப எப்படி சத்தியம் பண்றதுன்னு சொல்றேன் …இப்பிடி ஒரு கையை நடு வயத்திலே வச்சுக்கனும்…இன்னொரு கையை அவங்கவங்க தலை மேலே வச்சி ….இரு ஷீலா நீ வச்சிருக்கறது நடு வயிறு இல்லே…’ ‘சனியனே …அது நடு வயிறு இல்லடி…நடு வயிறுன்னா தொப்புள்…தொ..ப்..பு..ள்… தொப்புள் இல்லேனண்ணா…’ என்றது வசுமதி..’ ‘கரெக்ட்…’ ‘டேய்… நீ ரொம்பத்தான் ஜாஸ்தியா….அளவில்லாம எல்லாத்தையம் பன்றே….. …வேண்டாம்…அடிபடுவே…’என்றாள் மலர்.. ‘பாரு மலரு …சத்தியம்னா சரியா


என்பும் உரியர் பிறர்க்கு

 

 என் அம்மா ரொம்ப நன்றாக சமைப்பாள் . அம்மா செய்த ரவா தோசை , அடை மாதிரி நான் எங்கேயும் எப்போதும் சாப்பிட்டது இல்லை என்று சொன்னால் பொய்யோ என்று கூட உங்களுக்குத் தோன்றும். ஆனால் அது எங்களின்அபிப்ராயம் மட்டும் இல்லை, எங்கள் வீட்டுக்கு அநேகமாக தினந்தோறும் வந்து போகிற என் அண்ணாவின் சிநேகிதர்கள், என் சிநேகிதிகள் எல்லாருடைய ஏகோபித்த அபிப்ராயமாகவும் இருந்தது.அடர்ந்த பொன் நிறத்தில் முறுவலாக கையில் எடுத்தால் படக்கென்று உடையும் ரவா தோசையையும்,கார சாரமான


பொமரேனியன்

 

 சுந்தரேசன்-காமாட்சி தம்பதியினருக்கு அன்றைய தினசரியில் வந்திருந்த விளம்பரம் அதிர்ச்சியளித்தது. அந்த விளம்பரத்தினால் பாதிக்கப் படப்போவது தாங்கள்தான் என்கிற உண்மை அவர்களை உறுத்தியது. ஊஞ்சலில் அமர்ந்து அந்த விளம்பரத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த சுந்தரேசன், “காமாட்சி” என்று தன் மனைவியை அழைத்தார். கையில் காபியுடன் அவரை நெருங்கிய காமாட்சி “இதுக்காக ஏன்னா இப்படி இடிஞ்சு போயிட்டேள், இந்த விளம்பரம் வந்ததே நமக்குத் தெரியாது என்பது போல் மெத்தனமாக இருந்து விட்டால் என்ன?” என்று வினவினாள். சுந்தரேசனுக்கு அது நியாயமாகப் படவில்லை.


கிழிக்கப்படாத கடிதங்கள்

 

 மனைவி நம்பற அளவுக்கு நேர்மையானவனா, நம்பிக்கையானவனா இருக்க முடியலையேங்கற மன உளைச்சல் எனக்குள் இருந்து கொண்டிருக்கிறது. எனக்கும், மனைவி, பிள்ளைகளோடு பேசி சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கவேண்டும் என்கிற ஆசையெல்லாம் இருக்கிறது. ஆனால் ஆழமாக மனசுக்குள் நின்றுப் போன அலமேலுவின் நினைவுகள் எல்லாவற்றையும் தவிடுபொடியாக்கி விடுகிறது. கணவனிடம், மனைவி எதிர்பார்க்கின்ற அத்தனை அம்சங்களையும் என் மனைவி என்னிடம் எதிர்பார்த்தாள். என்னுடைய நினைவுகளெல்லாம் அலமேலு மேலேயே இருப்பதினால் ஒரு சராசரிக் கணவனா, அவள் எதிர்பார்க்கிற கணவனா இருக்க முடிவதில்லை.


ஸ்வப்னத்தை ஸ்வீகரிச்ச சுந்தரிக்குட்டியே…

 

 ‘ம்’ என்ற ஒற்றை எழுத்தில் இருந்தே புதிய நட்பு ஒன்று பிறக்கிறது. அவன் என்னிடம் ”நீ தண்ணியடிப்பியா?” என்று கேட்டான். நான் ”ம்…” என்றேன். ‘ம்’ என்றால், மனைவிகள் பேசும்போது கணவர்கள் டி.வி பார்த்துக்கொண்டே கடனே என்று ஒரு ‘ம்’ கொட்டுவார்களே… அந்த ‘ம்’ அல்ல. இன்றைய இளைஞர்களிடம், ”நீ நடிகை …….ஐ (கோடிட்ட இடத்தில் உங்களுக்குப் பிடித்த நடிகையின் பெயரை நிரப்பிக்கொள்ளவும்) திருமணம் செய்துகொள்கிறாயா?’ என்று கேட்டால், அவர்கள் எவ்வளவு வேகமாக, அழுத்தமாக, சத்தமாக, சந்தோஷமாக