கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2016

47 கதைகள் கிடைத்துள்ளன.

உயிர்ப்பு

 

 பெங்களூரிலிருந்து காரில் திருக்கடையூர் வந்து சேர்வதற்கு மாலை நான்கு மணியாகி விட்டது. ஸ்ரீராம், அவர்கள் தங்க வேண்டிய வாடகை வீட்டைக் கண்டு பிடித்து, வீட்டின் முன் தன் காரை நிறுத்தினான். ஏ.சி. காரின் கதவுகளைத் திறந்ததும் உள்ளே அனலடித்தது. உக்கிரமான வெய்யில். அவனுடைய அப்பாவும், மனைவி கமலாவும், மூன்று வயது மகன் ஹரனும் காரை விட்டு இறங்கிக் கொண்டார்கள். திருக்கடையூர் கோவிலில் நாளை காலை பதினோரு மணிக்கு ஸ்ரீராமின் அப்பாவுக்கு ஹோமங்கள் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அப்பாவுக்கு


தி லாஸ்ட் செல்பி

 

 intro இந்தப் பயணத்தின் முடிவு எப்படி இருக்குமோ எனக்கு தெரியாது…. இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடோ ஆசையோ இல்லை… போகி…………………….றே………………………..ன்… என் சொந்த ஊருக்கு, நான் பிறந்த மண்ணுக்கு… நீண்ட நாட்களுக்கு பின்.. இல்லையில்லை நீண்ட வருடங்களுக்கு பின்…போகிறேன்.. மனதுக்குள் ஏதேதோ மாற்றங்கள்.. நொடிக்கொரு தரம் மாறும் மனநிலைக்குள் நான் எந்த நொடி என்பதுதான் எனது பதிலாக இருக்கிறது, மாறாக கேள்வியும் கூட…கேள்விகளினூடாக நினைவுகளும் பயணிக்கத்தான் செய்கிறது….பயணங்களின் ஊடாக நினைவுகளும் நிலைக்கண்ணாடி சுமக்கத்தான் செய்கிறது….


‘ஈஸ்வரா நீ எங்கே?

 

 பார்வதியாம் அவள் பெயர். மெலிந்து,சுருங்கிய தனது கறுத்த உடலை, சிவப்புப் பொட்டுக்கள் நிறைந்த சேலையால் மூடிக்கொண்டிருந்தாள்.அவளுக்கு ஐம்பது வயதுக்கு மேலிருக்கலாம். அல்லது அதற்கும் கூடவாகவிருக்கலாம். ‘இந்தப் பெண்தான் நான் சொன்னவள்…அவளுக்கு விளங்கப் படுத்திச் சொல் கோர்ட்டில் என்ன கேட்பார்கள் என்று. பயமில்லாமல் எல்லாவற்றையும் சொல்லச் சொல்.’ எனது சினேகிதி சகிலா அந்தப் பெண்ணிடம் அழைத்துக் கொண்டுபோய் எனக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறாள். சகிலா ஒரு அழகான சினேகிதி. துன்பப்படும் மனிதர்களுக்காக இரங்குபவள். எங்கள் சினேகிதம்,நாங்கள் இருவரும் ஒருகாலத்தில் திரைப்படத்துறைப்


நேற்றைய நிழல்

 

 “ஏதாவது கடுதாசி வந்திருக்கா?” சாதாரண குமாஸ்தாவாக இருந்த குஞ்சிதபாதத்திற்கு தினமும் அதிமுக்கியமான கடிதங்கள் வந்து குவியும் என்பதில்லை. இருந்தாலும், தான் வீடு திரும்பியாயிற்று என்பதைத் தொ¢விப்பதுபோல், அதே கேள்வியைத் தினமும் கேட்கத் தவறமாட்டார். “ஆமாம்! நமக்கு யார் இருக்காங்க, அன்னாடம் எழுத!” என்றபடி, கோப்பையில் தேத்தண்ணீரை எடுத்து வருவாள் திலகம். அன்று அவளுடைய பதிலில் சிறிது மாற்றம். “இந்தாங்க. ஒங்க மகன் பள்ளிக்கூடத்திலிருந்து!” “என்னாவாம்?” “யாருக்குப் புரியுது! ” அசுவாரசியமாக நோட்டம் விட்டவருக்கு கோபம் வந்தது. அதற்குப்


பொய்மையும் வெல்லும்

 

 “மாதேஷ் ஸார்! இப்படி அநியாயமா பொய் சொல்லி, என் சொத்தை அபகரிச்சவனை விடுதலை பண்ண விட்டுட்டீங்களே” “நீ மொதல்ல என்கிட்ட இந்த வழக்கைக் கொண்டு வந்திருந்தா நிலைமையே தலைகீழ் ஆயிருக்கும். உன்னை யாருய்யா என் தொழில் எதிரி ஈஸ்வரன் கிட்ட போகச் சொன்னா?” “உன் வாதத் திறமையை வெச்சு எங்கள மாதிரி அப்பாவிங்க வயித்துல அடிக்கறியே! நீயெல்லாம் நல்லாவே இருக்கமாட்ட” “ஒருத்தன் நம்மகிட்ட சரணடைஞ்சிட்டா, நம்ம உயிரை மட்டும் கொடுக்காம மத்தது கொடுத்து காப்பாத்திடணும் – இதான்