கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2016

47 கதைகள் கிடைத்துள்ளன.

நாம் கடவுள்!

 

 எல்லாருமே தெரிந்த முகங்கள் தான்.வந்திருந்த அவர்களில் 2 பேர் வீதியில் துப்பாக்கிகளுடன் நிலை எடுத்து நிற்க,செந்தில், 2 பேருடன் சந்திரனின் வீட்டு படலையை திறந்து கொண்டு உள்ளே வந்தான். அவன், பலம் வாய்ந்த இயக்கமொன்றின் பிரதேசப் பொறுப்பாளன். கட்டைத் தோற்றம்,சிறிய பளிச்சிடும் கண்களை உடைய சிரிச்ச முகம்.சாதாரண தன்மைக் கொண்ட அவன் அவ்வியக்கத்திற்கு பொருத்தமற்றவனாக இருந்தான். அமைதியான வாழ்வையும்,அகிம்சையான போக்குகளையும் கொண்ட தமிழினத்தை விடுதலைப் போராட்டம், ஆயுதங்களை தூக்க வைத்திருக்கிறது, பல்வேறுப்பட்ட கலவைகளிலும்… பெடியள்களை அடியோடு மாற்றியும்


ஐந்து முத்தங்கள்

 

 நண்பகலுக்கு நேர் எதிரான நேரம் அது. எங்கும் அமைதி மொழி மட்டுமே பேசியது. அக்கம் பக்கத்தில் ஒரு சின்ன சிறிய அளவில் கூட சப்தம் கிடையாது. நிசப்தம் மட்டுமே நிலவியது. திடீரென்று, “”அம்மா… தாங்க முடியல… வலிக்குதே” என்று ஒரு பெண்ணின் சப்தம் ஒரு வீட்டிலிருந்து அலறி ஒலித்தது. நிலா வெளிச்சம் ஜன்னலைப் பொத்துக் கொண்டு வருவதுபோல, அந்த வீட்டில் மட்டும் கொஞ்சம் விசேஷமாக ஊடுருவி வெளிச்சம் தந்தது. வயிற்று வலியால் அவள் கதறிய சப்தம், நிலா


இது அழகிகளின் கதையல்ல..!

 

 ‘ஒரு உறைக்குள்ள ரெண்டு கத்தி இருக்க முடியாதே. ஒரு எடத்தில ரெண்டு அழகிக இருக்க முடியாதே!’ -மணிகண்டன் சிரித்துக்கொண்டே சொன்னான். பேருந்தில் ஜன்னல் ஓர இருக்கையில் லலிதாவும் சுகன்யாவும் உட்கார்ந்திருந்தனர். சுகன்யா இறுகிய முகத்தில் இருந்து புன்னகையை உதிர்த்தாள். லலிதா, தூரத்தில் எங்கோ வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். மணிகண்டன், சுகன்யாவைப் பார்க்கிறபோதெல்லாம், ‘அழகி எப்படியிருக்கிங்க?’ என்று கேட்பான். ‘அழகி’ படம் பார்த்துவிட்டு அழுத கண்களோடு திரையரங்கில் இருந்து வந்த அவளைப் பார்த்துக் கிண்டலடித்தான். அதன் பின் அவளைப் பார்க்கிறபோதெல்லாம்


விடிஞ்சா கல்யாணம்

 

 ஊரே புது வருசத்தை எதிர் நோக்கி என்ன செய்வதென்று தெரியாமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தது, எப்போதும் போல…. ஆனால்… மனமெங்கும் அந்த திகிலின் தவிப்புகளோடு…. இளசுகள் கோவில் திடலில் அரட்டை அடித்துக் கொண்டும்.. திகில் விஷயத்தைப் பற்றி விவாதிக் கொண்டும் இருக்க.. பெருசுகள்.. மிரண்டு போய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்…கிட்டத்தட்ட ஊரின் மத்தியில் பெரிய வீதியில், மக்கள் கூட்டம் காலியாகவே இருக்க… சந்திரன் பெரிய வீதியின் நடுவிலிருக்கும் போர் பைப்பில் தண்ணீர் எடுக்க குடத்தை எடுத்துக்


பனிச்சிறை

 

 “கார் பாலத்தின் இடது எல்லையில் போட்டிருந்த அலுமனிய தடுப்பை இடித்தும் நிற்காமல் தலைகீழாக கவிழ்ந்து, காற்றை விலக்கி, ஏரியின் மேல் படர்ந்து இறுகி இருந்த பனித் தகட்டை உடைத்துக் கொண்டு நீரில் மூழ்கிக் கொண்டிருந்தது.” கார், தடுப்பை இடிக்கும் என்று தெரிந்தவுடனே ஸ்டீரிங்கை விட்டுவிட்டேன். கார் கட்டுப்பாடு இல்லாமல் மெதுவாக குலுங்கி வழுக்கி கொண்டிருந்தது. மிக விரைவாக சீட் பெல்டை விடுவித்துக்கொண்டு, பக்கத்திலிருந்த சீட்டை இறுக்கமாக பிடித்தபடி தலை, முகம், தோள்பட்டை என்று கணக்கில்லாமல் இடிவாங்கிக் கொண்டு,