கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2016

47 கதைகள் கிடைத்துள்ளன.

விலை

 

 பசிக்கு விலை.. அறிவுக்கு விலை.. அன்புக்கு விலை… ஆசைக்கு விலை… உடைக்கு விலை… உணர்வுக்கு விலை…உண்மைக்கு விலை.. உறவுக்கு விலை… என எல்லாத்துக்கும் விலை கொடுத்து அல்லது விலைக்கு வாங்கி, கடைசியில் நம்மையே நாம் விலையாக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்படுகிறோமா..?? அல்லது அந்த கட்டாயத்திற்குள் நாமே நுழைந்து கொள்கிறோமா…???.. வாழ்வின் விடை தெரியாத வினாக்கள் எண்ணற்றவை. அம்மா…!! நான் போயிட்டு வரேன்…..” – துளசி. “ இருடாமா..!! சாப்டுட்டுப் போ…!! “ என்றவாறே, இட்லியை பிட்டு


அன்புதான் இன்ப ஊற்று !

 

 அசோகச் சக்கரவர்த்தி நாடு பிடிக்கும் போர் வெறியில் கலிங்க நாட்டின் மீது படையெடுத்து விட்டான். அவனிடம் ஆன்றோர் பலர், அறிவுசார்ந்த அமைச்சர் பெருமக்கள், அவன் கொண்ட போர் வெறியை போக்குமாறு, எடுத்துக் கூறியபோதும், அவன் செவிமடுக்கவில்லை. புத்தசாமியார்களும் அவனுக்கு உயிர்க்கொலைபுரியும் போர் வேண்டாம், உயிர்களிடத்தில் அன்பு கொள்ள வேண்டும். அன்பு வடிவான புத்த பகவானும் அன்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கூறியதையும், அதனைக் கடைபிடித்தால், நாட்டில் அமைதிநிலை ஏற்படும் என்றும் கூறினார்கள். அவர் கூறியதெல்லாம் அசோக


சிறுகதைகள் புனைய சில உத்திகள்

 

 சிறுகதைச் செம்மல் நிர்மலா ராகவன் உங்களுக்கு எழுத்தாளராக ஆசையா? ஸோமாஸ்கந்தன் நிமிர்ந்து உட்கார்ந்தான். இதுவரை உருப்படியாக எதுவும் செய்யவில்லை. பேசாமல் எழுத்தாளனாக ஆகிவிட்டால் என்ன? அந்தக் கட்டுரையைப் படிக்க ஆரம்பித்தான். தினந்தோறும் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் ஏதாவது எழுதிவரவும். ஒரே பத்திகூட போதும். இன்ன தலைப்புதான் என்பதும் முக்கியமல்ல. எழுத வேண்டும். அவ்வளவுதான். அவ்வளவுதானே! எந்தப் பெண்ணையாவது நினைத்துக்கொண்டு தினம் ஒரு காதல் கடிதம் எழுதினால் போயிற்று! உதாரணம்: `வெள்ளை’ என்ற தலைப்பில் நான் எழுதியது:


இதயத்தைப் பிழிந்த இடியப்ப உரல்

 

 விஜயாவின் எடுபடாத தோற்றுப் போன கறைபட்டகல்யாண வாழ்க்கை காரண,மாக வீழுந்த அடிகளில் இதுவும் ஒன்று முதன் முதாலாகக் கல்யாணமான கனவு இன்பப் பெருக்குடன் அவள் புகுந்த வீட்டில் அதாவது அவளுக்கு மாலை சூடி மனம் குளிர்வித்த கணவன் ராகவன் வீட்டோடு வந்து வாழத் தொடங்கிய நேரம் முன்பு தாய் தகப்பன் சகோதரங்களோடு வாழ்ந்து மகிழ்ச்சி கொண்டாடிய நாட்கள் போலில்லாமல் அவளை முற்றிலும் கருவறுத்துக் கழுவிலேற்றித் தண்டிக்கவே ராகவனோடு நேர்ந்த அந்த உறவுச் சங்கிலி அவன் சார்ந்த ஒவ்வொரு


கைமாத்து

 

 வாசலில் ராமசுப்பு போய்க் கொண்டிருந்தார். ஜன்னல் வழியாகத் தெரிந்தது. அதே சோர்வான நடை. தலை குனிந்தமேனிக்கு. எடுத்து வைக்கும் அடிகள் கூட அத்தனை பதவாகம். எங்கே பூமி அதிர்ந்து விடுமோ என்று பயந்தாற்போல. செருப்புச் சத்தம் கூடக் கேட்டுடக் கூடாதுன்னு உங்க ஃப்ரென்டு எத்தனை ஜாக்கிரதையாப் போறார் பாருங்கோ…. – வத்சலாவின் வார்த்தைகள் என்னை நெருங்கி வந்தன. நிச்சயம் வந்து நிற்பாள் என்று எனக்குத் தெரியும். அதற்காகவேதான் திண்ணையில் பிரசன்னமாகிறாள். அந்த நேரத்தைத் தவறவிட்டு விடக் கூடாது