கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2016

47 கதைகள் கிடைத்துள்ளன.

சென்னையில் ஒரு சின்ன வீடு

 

 “இந்த தாய் சொல்வதில் எத்தனை உண்மை இருக்கிறது”? காயத்திரி சிவராமன் தனக்குள் இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்கிறாள். திருமதி சங்கரலிங்கம் காயத்திரியை மிகவும் கடினபார்வையுடன் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். “சில மனிதர்கள் தங்களின் சுயநலத்திற்கும் தங்களின் பாதுகாப்புக்கும் எந்தப் பொய்களையும் சொல்வார்கள். வறுமையான நாடுகளில் இது சகஜம். நாகரீகமான ஆங்கில நாட்டிலும் இப்படிப் பொய் சொல்கிறாளே………….இவள் இந்தப் பொய்களை ஏன் சொல்கிறாள்?” காயத்திரியின் மனதில் பல கேள்விகள் தொடர்ந்த வண்ணமிருக்கின்றன. திருமதி சங்கரலிங்கம் காயத்திரியின் மன ஒட்டத்தைப் புரிந்து


நீதிக்கு ஒருவன்

 

 வாசுகி தொலைபேசியைக் கீழே வைத்த விதம், அது பல கிலோகிராம் எடை கொண்டது என்று எண்ணத் தோன்றியது. மனைவியை அதிசயமாகப் பார்த்தார் விவேகன். எதற்கும் கலங்காத நெஞ்சுரத்தால், பல ஆண்களும் எட்ட முடியாததொரு உயரத்தை எட்டி இருந்தாள் வாசுகி. நாற்பது ஐந்து வயதுக்குள் வக்கீல், அரசியல் கட்சி ஒன்றின் பெண் பகுதி தலைவி, செனட்டர் என்று படிப்படியாக ஏறியிருந்தாள். இப்படிப்பட்டவளே அதிரும்படி அப்படி என்ன செய்தி வந்திருக்கும்? ஆரம்பத்தில் தான் அளித்த ஊக்கத்தையும் பக்கபலத்தையும் மறந்து, இப்போதெல்லாம்


கதை கதையாம் காரணமாம்…

 

 கண்ணுக்கெட்டும் தூரம் வரை மணல்வெளிகள்…மணல்வெளிகள் சொல்லும் தத்துவத்தில் ஒட்டாத பாதங்களைக் காண முடியும்….சூரியன் காணாத மணல்வெளிகளில் காற்றின் கண்கள், நற நறத்தே கிடக்கின்றன….மணல்களின் படிமங்களாய் வழுக்கிக் கொண்டே செல்லும்,இரவுகளின் வீரியத்தில் நிழல்கள் தன்னிறம் மாறுவதை ஹைக்கூவாக உணர்ந்த பின் கிடைக்கும் புதுக் கவிதையாக, ஒரு மரபு மாந்திரீகம் விதைக்கிறது…….. எப்போதும்.. இரவென்றால் எப்படி இருக்கும் பாலைவனம்….. !!!….. வனங்களில்…கணிக்க முடியாத வானம் கொண்ட பாலைவனம் குளிர்களின் கம்பிளியை போர்த்திக் கொண்டே இருக்கிறது…. கடுங்குளிர்…. தேகம் நடுக்க….. நடுவினில்


துவேஷம்

 

 “எக்காரணத்தை கொண்டும் துரியோதன்னுக்கு நான் கொடுத்த வாக்குறுதியை மீற மாட்டேன். போரில் அர்ச்சுன்னனை கொல்ல வேண்டும் என்பது என் சபதம். அவன் எனது சகோதரன் என்று அறிந்தாலும் அவனை கொல்லும் எண்ணத்தில் இருந்து பின் வாங்க போவதில்லை. ஆனால் தாயே. உனக்கு கொடுத்த வாக்குறுதியின்படி உனக்கு ஐந்து மகன்கள் இருப்பார்கள். அர்ச்சுனன் அல்லது நான்” என்று கர்ணன் குந்தியிடம் சொல்லும் வசனத்தை படித்தவுடன், புத்தகத்தை மூடி கண்ணாடியை கழற்றி மேசையில் வைத்தார் குமரப்பன். அவருக்கு மனதில் மிக


பெளர்ணமி நிலவில்

 

 பாஸ்கருக்கு தன் இளம் மனைவி பவானியுடன் ஐந்தாவது மாடியில் அமைந்திருக்கும் அவர்கள் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டு அரட்டையடிப்பது மிகவும் பிடித்திருந்தது. புதிதாகத் திருமணமான இந்த ஐந்து மாதங்களாக இரவு உணவு முடிந்ததும் இருவரும் மொட்டை மாடிக்கு வந்து விட்டால் நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருப்பார்கள். அந்த பிளாக்கில் குடியிருக்கும் அனைவருக்குமே டெரஸ் சொந்தமானது என்றாலும், மற்ற குடித்தனக்காரர்கள் எவருமே இரவில் அங்கு வருவதில்லை. பகலில் ஏதேனும் துணிகள் காயப்போடுவதோடு சரி. இவர்கள் ஐந்தாவது மாடியில்