கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2016

47 கதைகள் கிடைத்துள்ளன.

பாசத்தின் முகவரி அப்பா

 

 “”நம்ம அப்பா இன்னொரு மேரேஜ் பண்ணிட்டு நம்மை விட்டுட்டுப் போயிருவாரா பாபுண்ணா?” என்று ஏக்கப் பெருமூச்சுடன் தன் கேள்வியைத் தொடுத்தாள் மீனு. “”இல்லைம்மா… நம்ம அப்பா நம்மை விட்டுட்டு எங்கேயுமே போகமாட்டார். இனிமே நாம மூணு பேர் மட்டுமே இந்த வீட்டுல இருக்கப் போறோம். சித்தின்னு உறவுமுறை சொல்லிட்டு யாரும் வீட்டுக்கு வரப் போறதில்லை. நீ கவலைப்படாம ஸ்கூலுக்குக் கிளம்பு. ஆட்டோ வந்தாச்சு பாரு” என்றான் பாபு. மீனுவை சமாதானப்படுத்துவதற்காக மட்டுமே அவ்வாறு சொன்னானே தவிர அவனுக்கும்கூட


கடை

 

 பையன் கடையைத் திறந்து வைத்திருந்தான். வாசலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு சேரை எடுத்துப்போட்டு, அன்றைய தினசரியை விரித்துப் படிக்கத் தொடங்கினார் கடைக்காரர். செய்திகள், மனதில் பதியவில்லை; வட்டெழுத்துக்கள் போலவும் பிராமி எழுத்துக்கள் போலவும் கண்களில் பூச்சி காட்டின. பையன் சாமி படத்துக்குப் பத்தி பொருத்துவதற்காக வத்திப்பெட்டியுடன் தயாரானான். கடைக்காரர் எப்போது கடைக்கு வந்தாலும் பத்தி பொருத்தி, சாமி படத்துக்குக் காட்டிவிட்டுத்தான் உட்காருவார். இன்று ஏனோ மனநிலை கெட்டிருந்தது. நான்கு நாட்களில் தீபாவளி. கடைக்கு வரும் சமையல்காரர் களுக்கு போனஸ்