கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 9, 2016

9 கதைகள் கிடைத்துள்ளன.

விடிஞ்சா கல்யாணம்

 

 ஊரே புது வருசத்தை எதிர் நோக்கி என்ன செய்வதென்று தெரியாமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தது, எப்போதும் போல…. ஆனால்… மனமெங்கும் அந்த திகிலின் தவிப்புகளோடு…. இளசுகள் கோவில் திடலில் அரட்டை அடித்துக் கொண்டும்.. திகில் விஷயத்தைப் பற்றி விவாதிக் கொண்டும் இருக்க.. பெருசுகள்.. மிரண்டு போய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்…கிட்டத்தட்ட ஊரின் மத்தியில் பெரிய வீதியில், மக்கள் கூட்டம் காலியாகவே இருக்க… சந்திரன் பெரிய வீதியின் நடுவிலிருக்கும் போர் பைப்பில் தண்ணீர் எடுக்க குடத்தை எடுத்துக்


பனிச்சிறை

 

 “கார் பாலத்தின் இடது எல்லையில் போட்டிருந்த அலுமனிய தடுப்பை இடித்தும் நிற்காமல் தலைகீழாக கவிழ்ந்து, காற்றை விலக்கி, ஏரியின் மேல் படர்ந்து இறுகி இருந்த பனித் தகட்டை உடைத்துக் கொண்டு நீரில் மூழ்கிக் கொண்டிருந்தது.” கார், தடுப்பை இடிக்கும் என்று தெரிந்தவுடனே ஸ்டீரிங்கை விட்டுவிட்டேன். கார் கட்டுப்பாடு இல்லாமல் மெதுவாக குலுங்கி வழுக்கி கொண்டிருந்தது. மிக விரைவாக சீட் பெல்டை விடுவித்துக்கொண்டு, பக்கத்திலிருந்த சீட்டை இறுக்கமாக பிடித்தபடி தலை, முகம், தோள்பட்டை என்று கணக்கில்லாமல் இடிவாங்கிக் கொண்டு,


கண்ணீரில் புன்னகை

 

 எனது சூழல், மனதில் இறுக்கம், இறுக்கத்தை மீறிய ஒரு நோக்கம். தன்னம்பிக்கை தான் எனது குறிக்கோள். மனதில் குறிக்கோளை சுமப்பது போல், என் உடம்பிலும் சுமக்கிறேன். ஆனால் நான் சுமக்கும் சுமைகள் எனக்காக அல்ல. என் குறிக்கோளை அடைவதற்காக உயிரை எடுக்கவும், என் உயிரையும் கொடுக்கவும் தயங்க மாட்டேன். எப்போது எங்கு செல்வேன், எப்பொழுது திரும்ப வருவேன் என்று தெரியாது. என் பாதை கரடுமுரடான பாதை. எதுவானாலும் பயணித்தாக தான் வேண்டும். காயங்கள் வலிக்கும் ஆனாலும் சொல்ல


இனிமே இப்படித்தான்…

 

 ஊர் பேரைச் சொன்னவுடன் எனக்குத் தலைசுற்றியது மாதிரி இருந்தது. இந்த மாதிரி ஒரு ஊரை நான் கேள்விப்பட்டதே இல்லை. எனக்கு போஸ்டிங் கொடுக்கும் போதுதான் தெரிந்தது அது திருவண்னாமலை பக்கத்தில் இருக்கிற ஒரு கிராமம். என்னைப் பற்றி சொல்லனும்னா என் பெயர் வசந்த் சென்னை சிட்டிசன், கட்டாயமான முறையில் பி.இ படிக்கவச்சாங்க. படிச்சிட்டு சும்மா இருந்தேன் அப்புறம் பேங்க் ஆபிஸர் எக்ஸாம் எழுதி பாஸ் ஆனேன். முதல் போஸ்டிங் தான் நான் மேற்சொன்ன கிராமம், அந்த ப்ரான்ச்


ஆத்மாநாமிற்கும் குமாரசாமிக்குமான இடைவெளி

 

 ஆத்மாநாமிற்கும் எனக்குமான இடைவெளி நான்கு அடி தூரம். எவ்வளவு தான் நான் நெருங்கி நெருங்கிப்போனாலும் அந்த இடைவெளி அப்படியே தான் இருக்கிறது என்ற குரல் ஒலித்த போது டோக்கியோ செல்லும் விமானத்தில் பறந்து கொண்டிருந்தான் ஜோதிராம். அந்தக் குரல் குமாரசாமியுடையது, இருபத்திரெண்டு வருஷங்களுக்கு முன்பு ஒன்றாகக் கல்லூரியில் படித்தவன். ஒரு வருஷம் ஜுனியர், பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டு பேசியது போல அத்தனை துல்லியமாக மனக்குரல் கேட்டது. பாதிசொருகியிருந்த கண்களைக் கசக்கிவிட்டபடியே மணி பார்த்தபோது இரவு இரண்டரையாகியிருந்தது.