Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: December 5, 2015

10 கதைகள் கிடைத்துள்ளன.

ராஜாராமன் ஜட்டியில் ஊறுகாய்…

 

 மாப்பிள்ளே….இந்த ஊறுகாய ருசி பார்த்து சொல்லுங்க. நீங்க தொட்டா ராசியா செலவாகும்…என்று சுந்தரவல்லி நாச்சயார் என்கிற தாயாரு சொன்னன்னபோது மேற்படி ஊறுகாய் பிரபல்யம் டென்மார்க் வரை போகும் என்று யாரும் நம்பியிருக்கப்போவதில்லை… கொஞ்சம் கூட உனக்கு மரியாத தெரில்லைம்மா….நீ வளத்த பிள்ளைன்னாலும் அவரு உன் மாப்பிள்ளை…..போயும் போயும் ஊறுகாயா தருவே….என்றாள் பிரியா….நீ செய்யறது எனக்குப் பிடிக்கலை……. சும்மாயிரு பிரியா நமக்குள்ளே என்ன சம்பிரதாயம்…என்றது அத்தை… அட எனக்கும் கொஞ்சம் குடுடீ….இவ தொக்குன்னா ஸ்ரீவல்லிபுத்ததூர் சாகும்… நம்ம ஜட்ஜ்


முக்கோண கதை

 

 எல்லாருக்கும் பிடித்த அதே போல எல்லாருக்கும் பிடிக்காத ஒரு படைப்பாளியை இப்போதும் பின் தொடருகிறேன்……… இப்போது அவன் குடியிருக்கும் 6வது மாடியின் பால்கனியில் நின்று கொண்டும் அவ்வப்போது உள்ளே போவதும்.. வெளியே வருவதுமாக ஒரு சிறுகதையின் தொடர்ச்சி போல ஒரு பக்க கதையின் முடிவாகத் தெரிகிறான்…. நானும் பக்கத்துக்கு மாடி குடியிருப்பில் அதே 6வது மாடியில் அவனுக்கு எதிரே இருக்கும் வீட்டில் பால்கனியில் நின்றுதான் கவனித்துக் கொண்டிருக்கிறேன்… நான் தொடர்ந்து கொண்டேயிருக்கிறேன்…. அவனும் கூட…. நான் சைதன்யா….


அவஸ்தை

 

 இட்லி இவ்வளவு சூடா வைச்சா எப்படிம்மா சாப்பிடறது, எனக்கு நேரமாச்சு காலேஜ் பஸ் வந்திடும் நான் கிளம்பறேன். ஏன் ஸ்ரீ, இட்லி ஆற ஒரு ரெண்டு நிமிஷம் ஆகுமா? ஒரு மணி நேரம் குளிச்சப்ப தெரியலையா கல்லூரிக்கு நேரமாகும்னு… சாப்பிடறதே ரெண்டு இட்லி, அதை ஒழுங்கா சாப்பிட்டு போ. நான் ஒன்னும் ஒரு மணிநேரம் குளிக்கலை….. நீங்க முன்னாடியே சுட்டு வைக்க வேண்டியதுதானே. போதும் வாயாடினது, ‘இந்தா….. வாயை திற, நீ கடிகாரம் கட்டிட்டு, பேக்கை எடுத்திட்டு


எப்படியோ போங்க!

 

 தாம் பெற்ற செல்வங்களுக்கு இவ்வுலகில் இடம்பெற உயிர் கொடுத்ததே பெரிய காரியம் என்ற இறுமாப்பில், `எப்படியோ போங்க!’ என்று `தண்ணி தெளித்து’ விட்டிருந்தார் முத்துசாமி. மூத்தவன் வீடு வீடாக பைக்கில் பீட்சா கொண்டு கொடுக்கும் உத்தியோகத்தில் அமர்ந்திருந்தான். இதுவரைக்கும் நம்மிடம் பணங்காசு கேட்காது, சிகரெட் உள்பட அவன்பாட்டைப் பார்த்துக் கொள்கிறானே என்ற திருப்தி அவருக்கு. நிறையப் படித்திருக்கக்கூடாதோ என்று தாய்தான் ஆதங்கப்பட்டாள். அதனாலேயே அவருக்கு தன்னைப்போல் இல்லாது, பிள்ளைகளைப்பற்றிய கனவுகளையும், கவலைகளையும் சுமந்திருந்த அன்னத்தைக் கண்டால் ஏளனம்.


ரிஸ்ட் வாட்ச்

 

 அறுவை சிகிச்சை முடிந்து பதினைந்து நாள் நர்ஸிங்ஹோம் வாசத்திற்குப் பிறகு சரஸ்வதி இன்று டிஸ்சார்ஜ் ஆகிறாள். மிகவும் மெலிந்து, கன்னங்கள் ஒட்டி, உதடுகள் உலர்ந்து தளர்வாகக் காணப்பட்டாள். மெல்லிய குரலில் கணவனிடம், “எல்லாம் எடுத்துக் கொண்டீர்களா? பில் செட்டில் பண்ணியாச்சா?” என்றாள். “செட்டில் பண்ணியாச்சு, எல்லாத்தையும் எடுத்துண்டாச்சு. டாக்ஸி ரெடியா இருக்கு நீ கிளம்ப வேண்டியதுதான் பாக்கி.” “ஆயாக்களுக்குப் பணம் கொடுத்தீர்களா?” “அதான் முப்பதாயிரத்துக்கு பில் செட்டில் பண்ணியாச்சே. ஆயாக்களுக்கும் சேர்த்துதானே பணம் கட்டினோம், பின்ன எதுக்கு