கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 3, 2015

10 கதைகள் கிடைத்துள்ளன.

தொழிலாளியும்முதலாளியும்

 

 ராஜசேகர் இல்லம், விடியற்காலையில் அவர்கள் வீட்டிலிருந்து அவர் தங்கை,கணவர்,மற்றும் அவர்கள் குழந்தைகள் உடன் அவரின் இரு குழந்தைகள் அனைவரும் வால்பாறை செல்வதற்காக ஒரு ஆடம்பர வேனில் கிளம்பினர். அவரின் மனைவி மட்டும் இவருக்காக தான் வரவில்லை என்று சொல்லிவிட்டார், ராஜ சேகருக்கும் ஆசைதான் இவர்களுடன் செல்ல வேண்டும் என்று, ஆனால் இன்று கம்பெனி விசயமாக ஒரு பெரிய புள்ளியை பார்க்க வேண்டும், ஆதலால் அவர் செல்லவில்லை,அனைவரையும் அனுப்பிவிட்டு ஒரு சோபாவில் அமர்ந்து பேப்பர் படிக்க ஆரம்பித்தார். போன்


யீல்டு

 

 நான், உமா மகேஸ்வரன், பஞ்சு மூவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்கிறோம். பெங்களூரில் மல்லேஸ்வரத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு வாடகையை பகிர்ந்து கொள்கிறோம். நான் பெங்களூருக்குப் புதியவன். நான்கு மாதங்களுக்கு முன்புதான் வேலை கிடைத்து இவர்களுடன் ஒட்டிக் கொண்டவன். சீனியரான உமா மகேஸ்வரனுக்கு அடுத்த மாத இறுதியில் கல்யாணம். உமாதான் அட்வான்ஸ் கொடுத்து வீட்டைப் பிடித்தவன் என்பதால், அவன் திருமணத்திற்கு பிறகு அவனின் தனிக் குடித்தனத்திற்காக நானும் பஞ்சுவும் வீட்டைக் காலி செய்வதாக ஏற்பாடு.


நியந்தாவின் வண்ணங்கள்

 

 காடென்பது சிறகாகிறது. வெற்றிடங்களில் வீசும் காற்றின் கண்களில், கைகளில் பட்டு, பரவசமாகும் உயிர்களில் கோடி யுகம் சுகமாகிறது….காண காண விரியும் சிறகுகளில் காண்பதே கவிதையாகும். மாயங்கள், காடுகளில் சாத்தியம். காடு காணாமல் போகும் கண்களில் அவளும் அவனும், தீரவே முடியாத தேடலுடன், இனம் புரியாத திசைகளை வெறுத்து மனம் அறியாத திசை நோக்கி பயமா.. பரவசமா…. என்றறியாமல், அர்த்தம் வேண்டாத பாதங்களை சிறகுகளாக்கி பறப்பதாய் நடந்து கொண்டிருந்தார்கள். காடென்பது தனி உலகம். அங்கே, கனவுகளின் தேடல் மரங்களாகவும்,


காதல்

 

 அடுக்குமாடிகள் முளைத்து இருந்த திட்டிப் பகுதியைத் ‘திவைத்தா’ என்றார்கள். அது ஓஸ்லோவின் புறநகர்ப் பகுதியில் அமைந்திருந்தது ஒரு திட்டியாக, எண்ணைக்காசு வந்தபின்பு நோர்வேயில் எழுந்த மாடிவீடுகள் அங்கு வானை முட்டுகின்றன. இலங்கையிலிருந்து பயத்தைக் காட்டி வெளிநாட்டிற்கு வந்த நாங்கள் இங்கு இருந்த வளத்தைக் கண்டு பூரித்துப் போய்விட்டோம். இந்தா நாடுதிரும்புகிறோம் என்ற கதை மலையேறிப் போய்விட்டது. இப்போது இங்கே கல்லறை தேடுபவர்களின் தொகை அதிகரித்துவிட்டது. மனித சுபாவம் அப்படித்தான். மன்னித்துக் கொள்ள வேண்டும். வேலை செய்து வரி


வேதம் புதிது

 

 ” சம்பத்து இங்கே வா!” சீஃப் எடிட்டர் கூப்பிட்டார். ”என்ன சார் புது அசைன்மெண்ட்டா? நடிகையா, பண விவகாரமா, இல்ல பக்தியா?” இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸ்டாக ஆகப்போவதாய் மார் தட்டிக்கிளம்பின சம்பத் இப்போது கைகட்டி கொடுக்கிற வேலையச்செய்து கொண்டிருந்தான். நடிகையின் நாயைப்பேட்டி எடுத்தாலும் மனசுக்குள் என்னமோ கறுப்பு கண்ணாடி, தொப்பி வாயில் பைப் என்ற கெட்டப் வந்து போய்க்கொண்டிருந்ததென்னமோ உண்மை. ”சம்பத்து! அதான் தஞ்சைப்பக்கத்துல ஒரு பழைய கோவில் இருக்கதாமில்ல, அந்த கோவிலும் குளத்தைப்பத்தியும் அடிபடுதே அவ்வளவு! என்னபா


பார்றா…

 

 நான் சிறுவனாக இருக்கும் போது பார்த்த உலகம் வேறு. இப்போது குழந்தைகளுக்கு நாம் காட்டும் உலகம் வேறு. தொழில்நுட்பத்தில், பலவித வசதிகளில் உலகம் மேம்பட்டிருந்தாலும் உறவுகளைப் பேணுவதில் நாம் மிகமிக பின் தங்கிய நிலைக்கு சென்று கொண்டிருப்பதாக தோன்றுகிறது. சுருங்கச் சொன்னால் சகிப்புத்தன்மை குறைந்து விட்டதே எல்லா பிரச்சனைக்கும் முழு முதல் காரணம். சகிப்புத்தன்மை என்பது பிறர் மீது அன்பு செலுத்துவதால் வருவது. ஆனால் மற்றவர்தான் என்னிடம் அன்பு செலுத்த வேண்டும், என்னை சகித்துக் கொள்ள வேண்டும்


பழைய பாடல்

 

 ரவியின்,காம்பிலிருந்து ‘இதயக்கோயின்..சோகப்பாடல் ஓடியோ கசட்டிலிருந்து காற்றில் தவழ்ந்து வந்து கொண்டிருந்தது.ரவிக்கு,சிறிது அடர்த்தியான தலை மயிர்,கூடைபோல சிறிது வாரிவிட்டிருந்தான். ரவுசரும்,சேர்ட்டுமாக… பல்கலைக்கழகப் பெடியன் போல.. இருந்தான். காம்பில்,’பிரீட்டீஸ்’என்று அழைக்கப்படுற-கதிர், இளங்கோ, பரமேஸ் ஆகியோரும் இருந்தார்கள். 1983ம் ஆண்டு நடந்த கலவரம் தான் அவர்களை தோழர்களாக்கி.. விட்டிருந்தன. அதற்கு,முதல் நண்பர்களாகவே இருந்தார்கள்.கலவரம் முடிந்து பத்து நாட்களாகியும்.. இளங்கோவின்,அண்ணன் -செந்தில் திரும்பி வரவே இல்லை. ஏற்கனவே,ஊருக்கு வந்தவர்கள்’சொல்லிய கதைகளும்,வராதவர்களின் சோகங்களும் அவர்களின் மனங்களை கனன்றுகொண்டிருக்கச் செய்திருந்தன.”நான் இயக்கத்தில் சேரப் போறேன்ரா”என்று இளங்கோ


தாயாகி வந்ததொரு தனிக் கருணை!

 

 “”என்ன பானு சொல்றே? உன்னாலே சென்னை வர முடியாதா?” அசோக் கோபம் பாதி, வேதனை பாதியாகக் கேட்டான். நகப் பூச்சு போட்டுக் கொண்டிருந்த பானு நிதானமாகச் சொன்னாள். “”ஆமா உங்கம்மாவுக்கு சிஷ்ரூசை செய்ய நான் வேலையை மாத்திக்க முடியாது” கோபத்தை அடக்கிக் கொண்டு அசோக் சொன்னான். “”சேர்ந்து இருந்தா சிஷ்ரூஷையா?” “”இதோ பாருங்க அசோக் வீணான ஆர்க்யூமெண்ட் வேண்டாம். என்னால என் வேலையை சென்னைக்கு மாத்திக்க முடியாது” “”கல்யாணத்துக்கு முன்னாடி பாக்கலாம்னு சொன்னியே?” “”நீங்க கூடத் தான்


சோமப்பனின் மரம்

 

 “”சோமப்பா இந்த வண்டியச் சித்த தள்ளிட்டுபோய், செட்டியார் வீட்டு முக்குல விட்டுட்டு வந்துருடா” தயங்கியபடியே சொன்னாள் தில்லைக்காளி. இரண்டாம் வகுப்பில் படிக்கிற சோமப்பனை விடவும், தள்ளு வண்டியின் உயரம் அதிகம். எனினும் சிரமப்பட்டுக் கொண்டே போய் செட்டியார் வீட்டுக் காம்பவுண்ட் சுவர் ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு வந்துவிடுவான். அவசியம், நிர்பந்தம் என்று வந்துவிட்டால், வயதுக்கும், வலுவுக்கும் மீறிய செயல்களைக் கூடச் செய்துவிட முடியும். அவனோ, தூணோடு தூணாய் அசையாமல் இருந்தான். “”ஏன்டா இப்படிச் சம்பிக் கிடக்கிறே? நேத்திக்கு


புதிய கோணங்கி

 

 ராமானுஜம் அலுவலகம் கிளம்ப சைக்கிளை சாய்த்து வலதுகாலால் பெடலைத் திருப்பி வசதியாக ஏறி அமர்ந்தபோது அவர் மனம் ’ஆட்டுக்குட்டி முட்டையிட்டு…’ என்றது. இது மட்டுந்தானா இன்னும் இருக்குது சாமி… கமலா, டேப் ரிகார்டரை சின்னதா வெச்சுக்கச் சொல்லு ரமாவை! தெரு முழுக்க அலர்றது.” “சரின்னா. நீங்க சகுனம் பார்த்து ஜாக்ரதையா கிளம்புங்கோ. அமாவாசை. மத்யானம் சாப்பாட்டுக்கு வழக்கம்போல வந்துருவேள்ல? இல்ல ஏதாவது லோன் இன்ஸ்பெக்*ஷன் அதுஇதுன்னு–” “இன்னிக்கு அதெல்லாம் ஒரு எழவும் கிடையாது. ரெண்டு மணிக்கு பாங்க்