Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2015

80 கதைகள் கிடைத்துள்ளன.

சங்கீத சௌபாக்யமே!

 

 கூட்டம் நெரிந்தது. கோலாகலமான டிசம்பர் சங்கீத சீஸன்! எல்லா சபாக்களிலும் மத்யான நேர கச்சேரி மேடைகள் வளரும் இசைக் கலைஞ்ர்களுக்கென்றே பிரத்யேகமாக. முதல் கச்சேரிக்கு வந்த கும்பல் அப்படியே அடுத்த கச்சேரிக்கும் அமர்ந்து விட்டது. அடுத்த கச்சேரிக்கு, அந்த பிரபலமாகி வரும் இளம் பாடகியின் பாட்டைக் கேட்க என்றே பிரத்யேகமாக வந்தவர்கள் அப்படியே வரிசையாக நிற்க வேண்டியதாயிற்று. சங்கீத விமர்சகர்கள் தங்களுக்கென்று ஒதுக்கப் பட்டிருந்த முன் வரிசையில் நோட்டுப் புத்தகமும் பேனாவுமாக அமர, உட்கார இடம் கிடைக்காத


மேகங்கள் கலைந்தபோது…

 

 கேண்டினிலிருந்து வெளியே வந்தபோதுதான் நரசிம்மன் கணேசனை பார்த்தான். வழக்கத்திற்கு விரோதமான அவன் வேகமும் தன்னைக் கண்டுபிடிப்பதில் காட்டிய அவசரமும் அவன் சாதாரணமாக வரவில்லை என்பதை உணர்த்த நரசிம்மன் குழம்பினான். ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்த அப்பாவின் நினைவு வந்தது. காலையில் பார்த்தபோதுகூட நன்றாகத்தானே பேசினார். இன்னும் இரண்டு நாளில் வீட்டிற்கு அழைத்து போகவில்லையென்றால் தானாகப் புறப்பட்டு வந்துவிடுவேன் என்றாரே… ஒருவேளை இரண்டு நாட்கள் கூட பொறுக்க முடியாத அவசரத்தில் புறப்பட்டு வந்து ஏதாவது ஆகி இருக்குமோ? என்ன? ஏது? என்பது


எனக்கொரு காதலி இருந்தாள்(ல்) !!??

 

 என்ன சுத்தி இருக்குறவங்க எல்லாருமே லவ் பண்றாங்க. அதெப்படி நான் மட்டும் சிங்கிளா இருக்கேன். நம்மக்குன்னு யாராவது இருந்தா நல்லாத்தான இருக்கும். இதுக்காக விளம்பரமா கொடுக்க முடியும்? இரவு வீட்டுக்கு போக பேருந்தில் உட்காந்திருக்கும் போது தான் இப்படி யோசனை. எனக்கும் ஒரு காதலி இருந்தால் இப்படி இருக்கும். சும்மா ஒரு கற்பனை செய்து பார்க்கலாமே, இன்னும் வீடு போய் சேரத்தான் ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகுமே என்று பேருந்தின் ஜன்னலில் சாய்ந்தபடி கனவுகளின் அடுக்குகளில்


அந்த பல்லி என்னையே பார்க்கிறது!

 

 “இங்க பாருங்க முகில், பல்லிய பார்த்து பயப்படறதெல்லாம் ஒரு ப்ராப்ளம் இல்ல… எனக்கும் கூட பல்லினாபயம்தான் ” இப்படிக் சொன்ன சைக்காலஜிஸ்ட் பரிமளாவிற்கு, இருபத்தி சொச்சம் வயதிருக்கும். காலை நேர வெயில் ஜன்னல்வழி ஊடுருவி அவளை வெண்ணிற காட்டன் சேலையில் தேவதை போல் ஜொலிக்க வைத்திருந்தது.. எதிரில் உட்கார்ந்திருந்த முகில், எதிலும் கவனமற்று தன் பிரச்சினைக்கு தீர்வு இல்லாமல் பரிதவிப்பது அவன்கண்களில் தெரிந்தது… ” அதில்ல மேடம், எனக்கு என் வீட்டுல இருக்கற ஒரே ஒரு பல்லிய


ஓவர் ப்ரிஜ்ஜில் இன்னொரு ஆக்ஸிடென்ட்

 

 ஸ்டேஷன் இன்சார்ஜ் சோமசேகருக்கு அந்தக் கார் டிரைவரைப் பார்த்ததுமே பிடிக்காமல் போயிற்று. காரணம் கேட்டால் இன்ட்யூஷன் என்று சொல்வார். இருக்கலாம். அது ஒரு வெள்ளை ஸ்கார்பியோ. முன்னால் கொடி கட்டுவதற்கான ஹோல்டர் இருந்தாலும் கொடி எதுவும் கட்டப்படவில்லை. ஆனால் அதன் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் அந்த வண்டியின் உரிமையாளர் ஒரு முக்கியப்புள்ளி என்று மௌனமாகப் பறைசாற்றியது. சோமசேகர் கண்கள் எதையும் விடவில்லை. சிக்னலில் நிற்காமல் ஜம்ப் செய்ய முயன்றதால் தான் அதை மடக்கி நிறுத்தி வைத்தார். சாதாரண நாட்களில்


கரிச்சான் குருவி

 

 தொடர்ந்து மூன்று நாட்களாக அடை மழை கொட்டியது வெளியில் தலைகாட்டவே முடியாமலிருந்தது. நான் எனது எழுத்து மேசையில் அமர்ந்து கொண்டு இன்றைக்கு வேலைக்குப் போவதா வேண்டாமா என்று இரண்டுங்கெட்டான் மன நிலையில் யோசித்துக் கொண்டிருந்தேன். இன்றைக்கு ஏதாவது அவசரமாக முடிக்க வேண்டிய வேலை உள்ளதா என்று மனக்கணக்குப் போட்டுப் பார்த்தேன். சில வேலைகள் இன்னும் முடியவில்லையே என சில வாடிக்கையாளர்கள் நச்சரித்துக் கொண்டிருந்தாலும் அவையெல்லாம் உடனடியாக முடிக்கக்கூடிய காரியங்கள் அல்ல. என்னைப் பொறுத்தவரையில் எனக்கு எஜமான் நான்தான்.


வானம் எங்களுக்கும் வசப்படும்

 

 ஒச்சாயி கண்களை சுருக்கி கண்களுக்கு மேல் கை வைத்துக்கொண்டு தெருவையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கணவன் சடையாண்டியை இன்னும் காணவில்லை. காலையில் ஒரு வாய் கஞ்சித்தண்ணியை வாயில் ஊற்றிக்கொண்டு போசியில் கொஞ்சம் பழையதயும் போட்டுக்கொண்டு தன்னுடைய ஆடுகளை மேய்ச்சலுக்கு விட கிளம்பியவந்தான் பசுமைகள் மறைந்து காண்கிரீட் மரங்களால் வளர்ந்து கொண்டிருக்கும் இந்த பிரதேசத்தில் புல் பூண்டுகளுக்கு வழியில்லாமல் தூர..தூர இடத்துக்கு நடக்க ஆரம்பித்துவிடுவான். மதியம் கொண்டு போன பழையதை சாப்பிட்டுவிட்டு ஏதாவது ஒரு மர நிழலில் படுத்து தூக்கம்


நல்ல பிள்ளை எப்பவும்

 

 “மாயா!” டி.வியில் தொடர் நாடகம் ஆரம்பிக்கும் நேரம். அவசரமாக, பழைய சோற்றை வாயில் அடைத்துக்கொண்டு, பக்கத்து வீட்டுக்குப் புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்த மாயா காதில் விழாததுபோல இருந்தாள். “ஏ மாயா! கூப்பிட்டா, ஒடனே பதில் கொரல் குடுக்கறதில்ல? செத்தா தொலைஞ்சுட்டே?” அந்த வேளையில் தந்தையின் குரலை எதிர்பார்த்திருந்தாலும், மாயாவுக்கு எரிச்சலாக எரிந்தாது. “என்னப்பா?” என்றாள் அலுத்தபடி. “சீனன் கடைக்குப் போய், நான் அனுப்பினதாச் சொல்லி வாங்கிட்டு வா. மசமசன்னு வேடிக்கை பாக்காம, போனமா, வந்தமான்னு..!” ஒருநாளைப்போல் இதே


விபத்து

 

 காலை ஒன்பது மணி. அந்தத் தனியார் அலுவலகம் அப்போதுதான் மெல்ல இயங்க ஆரம்பித்திருந்தது. அரக்கப் பரக்க உள்ளே நுழைந்த பிரேமா, மாலதியிடம் சென்று, “ஏய் மாலா…உன்னோட சங்கருக்கு ஜி.எச். முன்னால ஆக்ஸிடெண்ட் ஆயிருச்சு. லாரிக்கு அடியில சங்கர்னு தெரிஞ்சதும் எனக்கு தூக்கி வாரிப் போட்டிருச்சு.. அவரை ஜி.எச்-லதான் அட்மிட் பண்ணியிருப்பாங்க” என்றாள். மாலதி பரபரப்பானாள். உடம்பு வியர்த்து மனம் கலக்கமுற மானேஜர் அறைக்குச் சென்று விடுப்பு எடுத்தாள். வெளியே ஓடி வந்து கிடைத்த ஆட்டோவில் நுழைந்து அவசரமாக


சுண்டெலிகள்

 

 “…இந்தப் பிரபஞ்சத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிருமே தனது வாழ்நாளில் இயலுமானமட்டும் முயன்றுதான் பார்க்கின்றது சுண்டெலியைப் போல் ஏன் என்னைப் போல் என்றும் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். நாட்டில் பிரச்சினை மூண்டுவிட்டதென்று சொந்த மண்ணைவிட்டு வந்ததிலிருந்து இன்றுவரை எத்தனை வழிகளில் எத்தனை முயற்சிகள். ஒன்று சரி வந்தால் இன்னுமொரு முயற்சி. ஒன்று பிழைத்து விட்டாலும் இன்னுமொரு முயற்சி. எத்தனை அதிசயமான பிரமாண்டமான பிரபஞ்சம். புதிர்கள் நிறைந்த பிரபஞ்சம்…” கரப்பான் தொல்லையைத் தாங்க முடியவில்லை. எல்லா வழிகளிலும் முயன்று பார்த்தாகி