Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2015

80 கதைகள் கிடைத்துள்ளன.

அநித்தியம்

 

 அந்தப் பிண்டம் அதன் விருப்பின்றி அதன் மூலத்தின் தேவையில், விருப்பில், இயற்கையின் உந்தலில் வயப்பட்ட காமக் கிளற்சியில், கண்மூடித்தனமான வேகத்தில், அவசர அவசரமாகப் பூமியில் வந்து பிறந்தது. பிறந்த அந்தப் பிண்டத்தின் மூளையில் கேட்காமலே சில கேள்விகள், இரசாயனத்திற்கும் மின்சாரத்திற்கும் ஏற்படும் தாக்கத்தில், இயற்கை கொடுத்த வரத்தால் அல்லது சாபத்தால் அல்லது மனிதர் இன்னும் கண்டுபிடிக்காத வியாதியால், பொறுக்க முடியாத அவதியோடு, மூளையென்னும் திண்மம் போன்ற கூழில், பொங்கிப் பொங்கி எழுந்தது. காதல் ஆனாலும், காமம் ஆனாலும்,


இது கூட அரசியல்தான்

 

 குமார் தலை கவிழ்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தான். அவன் மனைவி அவனை கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். எல்லாம் போச்சு என்ற வார்த்தைகள் மட்டும் அவன் வாயில் இருந்து வந்ததை கேட்டாள். “ப்ளீஸ்” போனது போகட்டும் சும்மா கவலைப்பட்டு உட்கார்ந்திருக்காதீர்கள், ம்..என்று நிமிர்ந்தவன் கண்களில் நீர்த்திவலைகள் திரண்டிருந்தன. “குமாருக்கு தற்போது நேரம் சரியில்லை என தெரிகிறது. அவன் தனியாக தொழில் தொடங்க தந்தையிடம் சண்டையிட்டு பங்கை பிரித்து வந்தவன், முதலில் ஒரு ஏஜன்ஸி ஆரம்பித்தான், அது ஆறு மாதம் கூட நடக்கவில்லை,


பாணோடு போன மனம்

 

 பாணுக்கும் மனதிற்கும் என்ன சம்பந்தம்? கேவலம் வயிற்றுப் பசி அடங்க அது ஒரு வேளை உணவு மட்டுமே. ஆனால் ஓர் ஏழையைப் பொறுத்த வரை, அதைப் பெறுவதில் கூட நிறையச் சவால்கள். .அதை எதிர் கொண்டு அனுபவபூர்வமாக உணரும் போது, வாழ்க்கையே அர்த்தமிழந்த வெற்றுச் சங்கதியாய் நிழல் தட்டிப் போகும். உயிரோடு வாழும் போதே தீக்குளித்து எரிந்து போகிற நிலைமை தான். அப்படி எரிந்து கருகிப் போனால் , பற்றி எரிகிறது உடலல்ல மனமே மிஞ்சாது ஒழிந்து


ட்ரிசோ எனப்படும் திரீவீலர்

 

 பேருந்தில் ஏறுவதற்கு வீட்டை விட்டு வெளியில் வந்த என்னை ஒரு பெண் அழைத்தாள்.. நேரம் காலை 4.30 இந்த நேரத்தில் யாரிந்த பெண். ‘ஹாய்… குட் மோர்னிங்’ – (நான்) ‘குட் மோர்னிங்.. நீங்க பேஸ்புக்ல இருக்கீங்கதானே? – (அவள்) யார்தான் பேஸ்புக்கில் இல்லை ‘ஆமா… நீங்க எனக்கு ப்ரெண்டா இருக்கிறீங்கதானே… நான் போட்டோ பார்த்திருக்கேன்’ – (நான்….) ‘ம்….’ ‘ இந்த ரைம்ல….?’ ‘ஃபோர்ற்க்கு போகனும், யாராவது வருவாங்களானு பார்த்தேன்… நீங்களே வந்துடீங்க…’ ‘ஓகே.. நானும்


நண்பன்

 

 1996ஆம் ஆண்டு கோடை விடுமுறை தொடங்கிய நேரம்: திருவாரூர் அய்யனார் கோவில் தெருவில் இருந்த முடிதிருத்தகத்தின் வாசலில் போடப்பட்டிருந்த பெஞ்ச்சில் இரண்டு சிறுவர்களின் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்கள். “டேய்…வர்ற 9ஆம் தேதி இந்தியன் படம் ரிலீசாகுதுடா…¬ஷங்கர் டைரக்சன். படம் சூப்பரா இருக்கும். கமல் ஹீரோ.கேட்கவா வேணும்…தைலம்மை தியேட்டர்ல வரப்போகுது. நான் முதல்நாளே போய்டுவேம்பா…” என்றான் வடிவேல். “ச்சே…நம்ம ஊர்ல ஏ/சி தியேட்டர் இல்லடா. இருக்குற தியேட்டர்லயும் ஏசி மிசின் ரிப்பேராயிடுச்சாம். இங்க பாரேன். தஞ்சாவூர் விஜயா ஏ/சி,


நீக்கு!

 

 “அருமை நாயகம் சாரா…பேசறது?….” அவர் முன் பின் கேட்டறியாத குரல்! மிகவும் பதட்டமாக இருந்தது! “ஆமாம்!….நான் அருமை நாயகம் தான் பேசறேன்!….நீங்க யார் பேசறது?….”அவருக்கும் அந்தப் பதட்டம் தொற்றிக்கொண்டது! “சார்!…..நா துடியலூரிலிருந்து பேசறேன்!……இங்கு நாற்சந்தியில் பத்து நிமிடத்திற்கு முன்பு, ஒரு ‘ஹீரோ ஹோண்டா’ பைக் மீது ஒரு லாரி மோதி விட்டது! பைக்கில் வந்தவர் ஆபத்தான நிலையில் மயக்கமாக கிடக்கிறார். அவர் செல்போன் பக்கத்தில் கிடந்தது…அதில் உங்கள் நெம்பர் முதலில் பதிவு செய்திருக்கார்… உங்களுக்கு வேண்டியவராக இருக்கலாம்


புத்திர சோகம்

 

 “வேணு சாலை விபத்தில் இறந்து விட்டார். இன்று மாலை தகனம். உடனே கிளம்பவும் – சந்துரு.” காலை பத்தரை மணிக்கு அலுவலகத்தில் இந்த டெலிகிராம் என் கையில் கிடைத்தது. உடனே பதட்டமடைந்தாலும் சிறிது நிதானித்துக் கொண்டேன். வேணு, என் மனைவி சரஸ்வதியின் மூத்த அண்ணன். அவளுக்கும் கடந்த ஒரு மாதத்தில் இது இரண்டாவது பெரிய துக்கம். இந்த நிலையில், வேணுவின் இழப்பை அவள் நிச்சயம் தாங்க மாட்டாள். எனவே வேணுவின் இறப்பை அவளிடமிருந்து தற்சமயத்துக்கு மறைக்க எண்ணி,


அவன் ஒரு இனவாதி ?

 

 ‘பாவம் செந்தூரன்’ மைதிலி; பஸ்சுக்கு ஓடிக்கொண்டிருக்கும்போது,பத்து வயதான அவளின் கடைசி; மகனைப் பற்றி நினைத்துக்கொண்டாள். அதிகம் ஓடியதால் அவளுக்கு மூச்சு வாங்கியது. செந்தூரனுக்கு கடந்த சில நாட்களாகத் தடிமலும் காய்ச்சலும். லண்டன் சுவாத்தியத்தில்; எப்போது தடிமல்,காய்ச்சல்வரும் என்று சொல்ல தெரியாது. வீட்டுக்கு வரும் அழையாத விருந்தாளிகளாகத் தடிமலும் இருமலும் லண்டனில் வரும் வியாதிகளாகும். செந்தூரன் மூச்செடுக்கவும் சிலவேளைகளிற் கஷ்டப்படுகிறான். உலகத்திலுள்ள பல வசதியான தாய்கள் மாதிரி,முழு நேரமும் வீட்டிலிருந்துகொண்டு தன்குழந்தைகளைப் பராமரிக்க முடியாமல் விடிந்தால் வேலையென்றோடும் தன்


ஜெயலலிதா

 

 (1) ஜெயலலிதாவுக்கு பூஞ்சையான அனீமியாத்தேகம். இடை வயிறு பிருஷ்டம் எல்லாம் ஏகத்துக்குப் பேதமின்றி சுள்ளல் வாழை போலிருக்கும் குடிசை வாசி. கண்கள் அலைந்துகொண்டிருக்கும், ஆனாலும் அவளுக்குத் தென்னகத்து ஜெயலலிதாவின் ஐஸ்வரியங்களைக் கனவுகாணக் கூடத் தெரியாது. என்ன போகிற போகிற இடங்களில் ஏதாவது அவளுக்கு சுவாரஸிமானதாய் பட்டுவிட்டால் போதும் மணிக்கணக்கில் அதையே விடுப்புப் பார்த்துக்கொண்டு நிற்பாள். அவளுக்கு சுவாரஸியம் தரும் விஷயம் இன்னதுதான் என்றில்லை. அது நடுங்கல் சின்னவிக்கிழவனின் தலையோடு சேர்ந்து குலுங்குகிற குருவிக்குடுமியாயிருக்கலாம், தெள்ளு உதறத் துள்ளும்


இரண்டு பெண்களும் இன்னொருத்தியும்

 

 அந்தப் பகுதியில் எல்லாமே பிஸ்கோத்துகளை அடுக்கி வைத்ததுபோல, ஒரே மாதிரியான சிறிய வீடுகள், ஒன்றுடன் ஒன்று ஒட்டியபடி. இரு தெருக்களின் இடையே ஒரு சிறு சந்து. அதன் நடுவில் கோணல் மாணலாக சதுர வடிவிலான பாறாங்கற்கள், `எங்கள்மேல் காலை வைத்தால், பதம் பார்த்துவிடுவோம்` என்று மிரட்டுவதுபோல். இரு புறமும் புதர்கள், சிறு குன்றுகளைப்போல். வெவ்வேறு தெருக்களில் இருந்தாலும், பின்வீட்டிலிருந்து ஒரு ஆண் இரையும் சத்தமும், அதற்குப் பதிலாக ஒரு பெண் அழுகைக் குரலில் ஏதோ பதிலளிப்பதும், அவ்வப்போது