Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 25, 2015

10 கதைகள் கிடைத்துள்ளன.

முள்ளும் செருப்பும்

 

 “சில மனிதர்களும் சில நிகழ்வுகளுமே போதும் ஒரு மனிதனின் பாதையை மாற்றவும் தொடங்கவும்” அப்பா அப்பா, என்னடா, லேய்ஷ்பா. வெளிய வந்தா இத வாங்கி கொடு அத வாங்கி கொடுனு கேட்கக் கூடாதுனு சொல்லிருக்கன்ல, ஏய் அவன ஏண்டி திட்ர. என் மகன் மகனதிகாரத்தில் கேட்க நான் அவளின் கண்டிப்பையும் மீறி, அண்ணே ஒரு லேய்ஸ் தாங்க ,10 ரூவா சார், 5 ரூவாதான்பா, 10 ரூவா சார் வேணுமா வேணாமா. ஷ்டேசன்லயும் எல்லாமே டபுள்தானா தியேட்டர்


குடைக்குள் மழை

 

 மீனலோட்சனி………………….. இந்த பெயரை உச்சரிக்க நினைக்கும் போதே, குடை தாண்டி ஒரு மழை என்னை நனைக்கத் தொடங்குகிறது.. மீனா………. மீனா என்று அழைத்தால் அவளுக்கு பிடிக்காது….. மீனலோட்சனி என்று முழு பெயர் சொல்லியே அழைக்க வேண்டும் என்பது அவளின் மழையின் ஆளுமை…. கடற்கரையில் மழையோடு நிற்பதென்பது அலையோடு துளியாவது. பட்டுத் தெறிக்கும் மழையெல்லாம், கண்ணுக்கெட்டும் தூரம் வரை வெள்ளிக் கம்பிகளின் குட்டித் தம்பியென, ஒரு சாயலில் தலை சாய்க்கும், வித்தை விதைக்கிறது. பூத்தூவும் மழையில் நானும், ஆர்ப்பரிக்கும்


அவன் அவள்…

 

 [ஓர் இளம் தம்பதியினரின் மென்மையான உணர்வுகளை--ஊடல்களை சித்தரிக்கும் இனிமையான சிறுகதை.] (’மனைமாட்சி’ என்று நான் தலைப்பிட்டிருந்த இந்தக்கதை, ’அவன் அவள்…’ என்ற தலைப்பில், கொஞ்சம் எடிட் செய்யப்பட்டு சி.க. இதழில் பிரசுரமாகியது; அட்டைப்படக்கதையாக என்று ஞாபகம். இங்கு நான் பதிவது எடிட் செய்யப்படாத முழுக்கதை.–ரமணி) ஹைதராபாத் நாம்பள்ளி ஸ்டேஷனில் அவளை நிம்மதியாக வழியனுப்பிவிட்டு அவன் வெளியில் வந்தபோது மழை மெலிதாகத் தூறிக்கொண்டிருந்தது… என்ன கீத், என்ன தேடறே? துணியெல்லாம் இறைஞ்சு கிடக்கு? ஒண்ணும் தேடல. நான் ஊருக்குக்


மீண்டும் தொடங்கும் மிடுக்கு

 

 கீதாவுக்கு அழுகை அழுகையாக வந்தது.அடக்க முயன்றால்.முடியவில்லை.கலங்கிய கண்களுடன்,வேலை செய்வதை விட்டு,எழும்பி நின்று பயிர்களைப் பார்த்தாள்.பச்சை விரித்தாற் போல்,பரந்து கிடந்தது.பூக்கிறதுக்கு காலம் இருக்கிறது.மற்ற தோழிகளிற்கு,பெரிய விவசாய அறிவில்லாவிட்டாலும்,பயிரின் கீழேயுள்ள மண்ணை சிறிது கொத்தி தூர்த்தும்,ஏதாவது விருந்தாளியான களைப் பூண்டின் பகுதி தெரிந்தால் வேருடன் பிடுங்கி,இடுப்பில் செருகியுள்ள சொப்பிங் பையில் போட்டுக் கொண்டுமிருந்தார்கள்.அவள் இடுப்பிலும் ஒரு பை தொங்கிறது . அவளைப் போன்ற சோகம் அவர்களுக்கில்லை.இருந்தாலும்,அவளுடன் அனுதாபத்துடனே பழகிறார்கள்.அவளால் தான் ‘தனித்த’ நிலையிலிருந்து விடுபட முடியவிலை. வீடும்,அவளைப் போலவே கிடக்கிறது.’உற்சாகமாகவிருக்க


அங்கையற்கன்னியின் திருமணமும் ஐந்தாண்டு திட்டங்களும்

 

 23 வயது முதல் 28 வயது வரை அங்கயற்கன்னிதான் குடும்பத்தில் மூத்தப் பெண். வயது இருபத்து மூன்றாகிவிட்டது. இருபத்தைந்து வயதில்தான் அவளுக்குத் திருமணம் செய்து வைப்பதென பழனிவேலும் மண்டோதரியும் திட்டமிட்டிருந்தார்கள். அங்கயற்கன்னிக்கு அடுத்து வரிசையில் நிற்பவள் பூங்குழலி. ஆனால் அவளுக்கு இப்போதுதான் பத்தொன்பது. அவசரமேதும் இல்லை என்ற சாவகாசத்தில் காலாட்டிக்கொண்டு அங்கையற்கன்னிக்கு மாப்பிள்ளை தேடினார்கள் இருவரும். ஆனால், சில நிபந்தனைகள். எந்த மாப்பிளையாக இருந்தாலும் சரி. நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளுக்கு உடையவனாயிருந்தாலொழிய அங்கையற்கன்னி அவனுக்கு எட்டாக்கனி. பழனிவேலுக்கும் மண்டோதரிக்கும்


நீ எங்கே?

 

 அறைக்கதவைத் திறந்து நான் உள்ளே சென்றதுதான் தாமதம். பச்சக் என்று ஈரமாக எனது வலது கன்னத்தில் வந்து அப்பியது அது. ‘ஓ! யே.. ஏஏ…!’ எதிர்பாராத அந்த தாக்குதலால் நான் பயத்திலே அலறிச் சரிந்து கட்டிலருகே விழுந்து விட்டேன். என் கையிலிருந்த பைல் பேப்பர்கள் சிதறி அறைமுழுவதும் இறைந்ததும் மேசை மீதிருந்த குவளைத்தண்ணீர் சரிந்து தரைமுழுவதும் பரவியது. மூன்று நாட்களாக நான் மாய்ந்து மாய்ந்து எழுதிய அத்தனை நோட்ஸும் என்கண்முன்னே நனைந்து பாழாகியது. ஆனால் இதற்கும் தனக்கும்


தாய்வாசம்

 

 மூணு வயசுக் குழந்தைகிட்டே உங்களுக்கு ஏன் இவ்வளவு வன்மம் மன்னி?” – பாரதி, ஆச்சரியத்துடன் கேட்டாள். ”ஆமாண்டியம்மா… ஷைலு எனக்குச் சக்களத்தி. அவ மேலே எனக்குப் பொறாமை. போடி… வேலையப் பார்த்துக்கிட்டு. உனக்கு ரெஸ்ட் கொடுக்காம எப்போ பார்த்தாலும் ‘பாரதிம்மா… பாரதிம்மா…’னு ஓடிவந்து மடியிலே படுத்துக்கிட்டுத் தொல்லை கொடுக்குறாளேனு உன் மேல கரிசனப்பட்டா… வன்மமாம், வன்மம்!” – அலுத்துக்கொண்டே சொன்னாள் புஷ்பவல்லி. டி.வி. சீரியல்களில் வரும் பெண்கள் மாதிரி புஷ்பவல்லி அப்படியொன்றும் கொடுமைக்காரி கிடையாது. அவளுடைய நாத்தனார்


வரம்

 

 இந்த உலகத்தில் யாருக்குத்தான் கவலையில்லை. கவலைகளின் தன்மைதான் வேறுபடுமே ஒழிய, கவலையே இல்லாத மனித உயிர் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். இதில் தீர்க்கக் கூடிய கவலைகளின் அவஸ்தையை விட தீர்க்கவே முடியாத கவலைகளின் வலி கரையானைப் போல் தினமும் அரித்துக் கொண்டே இருக்கும். சமயத்தில் தன்னைப் படைத்த கடவுளையே சபிக்க வேண்டியிருக்கும். என்னுடைய அக்காவின் கவலை யாராலும் என்றென்றைக்கும் தீர்க்கவே முடியாத கவலை. என் அக்காளுக்கு என்ன குறை? சொந்த தாய் மாமனுக்கு மனைவியானவள், மாமா அரசில்


மழை

 

 அன்று காலை முதலே ரவியின் மனம் உற்சாகத்தில் துள்ளிக் கொண்டிருந்தது. அடுத்த வாரம் அவனது அருமை தங்கை ராமலெட்சுமிக்கு கல்யாணம். தங்கைக்கு கல்யாணம் என்பது மட்டும் அவனது சந்தோஷத்திற்கு காரணமில்லை. இப்ப அவனை அப்பாவென்று கூப்பிட அவனுக்கும் ஒரு வாரிசு பொறந்திருக்கு… அவனையும் பார்க்க வேண்டும் என மனம் துடித்துக் கொண்டு இருந்தது. காலையில சம்பளம் வாங்கின கையோடு ஊருக்கு கிளம்பவேண்டும் என்று நினைத்துதான் சைட்டுக்கு வந்தான். ஆனால் இன்று கூலியாட்களுக்குச் சம்பளம் கொடுக்க வேண்டிய சூப்பர்வைசர்


காதல் கண்மணிக்குக் கல்யாணம்

 

 வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்து பூட்டில் சாவியை நுழைக்கச் சிரமப்பட்டுத் துழாவிக் கொண்டிருந்த போது, அரவம் கேட்டு பக்கத்து வீட்டிலிருந்து வெளி விளக்கைப் போட்டார்கள். அந்த வீட்டுப் பெண் வெளியே வந்து, “”உங்களுக்கு ரெஜிஸ்டர் தபால் வந்துருக்காம். நாளைக்கு போஸ்ட் ஆபீஸýல போயி வாங்கிக்கணுமாம்…” என்று அரையும் குறையுமாகவும் அவசரமாகவும் சொல்லி முடித்ததும் உள்ளே போய் கதவைப் பூட்டி, வெளி விளக்கையும் அணைத்து விட்டாள். இது நடந்தது இப்போதல்ல தொண்ணூறுகளின் தொடக்கத்தில் …. அப்போதெல்லாம் தகவல்