Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 12, 2015

10 கதைகள் கிடைத்துள்ளன.

அகதியின் பயணம்

 

 கண்வெட்டாமல் அவன் இருட்டையே பார்த்தபடி படுத்துக்கிடந்தான். நேரம் என்னவென்று கூட உத்தேசி்க்க முடியவில்லை. பக்கத்துக்குடிசையில் ஒரு குழந்தையின் அழுகுரல் ஒரு குட்டிப்பூனை கத்துவதுபோல ஈனஸ்வரமாக கேட்டது. அந்தக்குழந்தை ஏன் அழுகிறது என நினைத்தான். குழந்தை பசியில் அழலாம். அதன் தாய் பாலூட்டமுடியாமல் இருக்கலாம். காய்நத பாண்துண்டையும் சீனியில்லாத வெறுந்தேநீரையும் அந்தத்தாய் உணவாக உட்கொண்டிருக்கலாம். எப்படி அழுகின்ற குழந்தைக்கு அவள் பாலூட்ட முடியும். அவனுடைய குழந்தைகள் இரண்டும் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தன. அஅவனுடைய மனைவி ஐானகி இன்னும் இரண்டு மாதங்களில்


தாண்டுதல்

 

 “இந்த உலகத்திலே மொதல்ல மனுசங்க மட்டுந்தா இருந்திருக்காங்க” “என்ன கதையா” “சின்னக் கதையா“ “குட்டிக் கதையா“ “குட்டிகளைப் பத்தின கதையல்ல……..சொல்லட்டுமா” “சொல்லுங்க..குட்டிகளனு யாரும் வந்திடக்கூடாது” “இந்த உலகத்திலே மொதல்ல மனுசங்க மட்டுந்தா இருந்திருக்காங்க. எல்லாருக்கும் ரொம்பவும் போர் அடிச்சுப் போச்சு. மனுசங்க மூஞ்சிய மனுசங்களே எத்தனை நாளைக்குப் பார்க்கிறது? வேற வழியில்லாம கடவுளைப் பார்த்திருக்காங்க. அவர் போர் அடிச்சுட்டுனு பிராணிகள், விலங்குகள்னு படச்சிருக்கார். அப்புறம் ஏரி, குளம், அப்புறம் மரங்கள் செடி கொடின்னு அப்புறம் பூக்கள் மல்லி……”


தாய்ச்சிறகு

 

 ஆயியே சாப்! ஆயியே சாப்! அல்லாரும் ஜோரா கைதட்டுங்க சாப்! என கையில் டம்டம்முடன் குரல் கொடுத்துக் கொண்டிருந்தான் தலைப்பாய்க் காரன். நீலநிறத்தில் சட்டையும் அதே நிறத்தில் கட்டம் போட்ட லுங்கியும் அணிந்திருந்தான். அவனின் பூனைக்கண்களும் முறுக்கிய மீசையும் குழந்தைகளை அச்சுறுத்துவது போலிருந்தது. நரை முடியினைக் கொண்டும் உடல் சுருக்கத்தைக் கொண்டும் பார்ப்பதற்கு நாற்பது வயதிற்கு மேல் இருக்கும். வடநாட்டுக்காரன் என்பதால் தமிழ் தத்தளித்தது. உச்சி வெயிலில் இரண்டு பெருக்கல் குறி குச்சியின் நடுவே இரட்டைப் பின்னலுடன்


ஆய்டா 2015

 

 கோவர்தனின் டயரியாய் இருப்பதே எனக்கு பெருமை.இன்னுமொரு பெருமையும் இருக்கிறது. இந்த அறையில் இருக்கும் எத்தனையோ எண்மான (Digital) இயந்திரங்களுக்கு இடையில் நான் மட்டும்தான் காகித நூல். என் பெயர் “அய்டா 2035” என்னில் எழுத அவர் உபயோகிக்கும் எழுத்தாணிதான் என் காதலி. என்னை கீறி நினைவுகளை பதிப்பதில் ‪#‎அவள்‬ ‪#‎ஆசை‬ அளாதி. கோவர்தன் ஒரு #விஞ்ஞானி. ஆனாலும் அவரின் ஏக்கங்களை நான் மட்டுமே அறிவேன். அவரிடம் எத்தனையோ சாதனங்கள் இருந்தும், தன் எண்ணங்களை பதிக்க இன்னும் என்னைதான்


நந்தியாவட்டைப் பூக்கள்

 

 நந்தியாவட்டை பூக்கள் நதியா டீச்சருக்கு மிகவும் பிடித்தமானவை.காவியாதான் பறித்து வந்து கொடுப்பாள்.அவற்றைப் பார்த்தவுடன் நதியா டீச்சரின் முகமும் மலர்ந்துவிடும்.அப்பூக்களை நதியா டீச்சர் ஆராதிக்கும் விதமே தனி.தன் நீண்ட விரல்களில் மென்மையாய் தொட்டு,தன் கன்னத்தில் வைத்து,கண்கள் மூடி,அதன் மென்மையை உணர்வாள். நதியா டீச்சர் பட்டணத்திலேயே பிறந்து வளர்ந்த நாகரீக பெண்மணி.ஆனால் அவரது கூந்தல் மட்டும் இடையைத் தாண்டி நீண்டு வளர்ந்திருக்கும்.பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு காவியா வசித்த தோட்டப்புற பள்ளிக்கு தற்காலிக ஆசிரியையாக பணியாற்ற வந்தவர்தான் நதியா டீச்சர்.காவியாவுக்கு அப்போது


உன்னை காக்கும் நான்

 

 “இவ்வளவு ஏன் அவசரம்! காலையில கொஞ்சம் நேரமாதான் எழுந்திருக்கிறது. சரியா சாப்பிடக்கூட நேரம் இல்ல உங்களுக்கு” என்று சமையல் அறைக்குள் இருந்து சத்தம் போட்டுக்கொண்டு இருந்தாள் ராணி. அதை கேட்டும் கேட்காமல் வேக வேகமாக புறப்பிட்டுக் கொண்டிருந்தான் வசந்த். “அப்பா, இன்னைக்கு நான் ஸ்கூல் பஸ்ல போகல. உங்க கார்ல கொண்டு போய் விடுங்கப்பா” என்றான் சரண். “இல்லப்பா எனக்கு மீட்டிங் இருக்கு. பத்து மணிக்கு ஆபீஸ் போகணும். இன்னைக்கு ஸ்கூல் பஸ்ல போ. நாளைக்கு கார்ல


உழைத்த பணம்

 

 வீட்டில் மளிகை தீர்ந்து விட்டது என்பதை முருகன் மனைவி குழ்ந்தைகள் முன்னால் சப்தமிட்டு கூறிய போது இவனுக்கு என்றும் வரும் கோபம் அன்று அதிசயமாய் வராமல் ‘பார்க்கலாம்’ என்று சொன்னதை அவன் மனைவி அதிசயமாய் பார்த்தாள். ‘பார்க்கலாம்’ என்று சொல்லிவிட்டானே தவிர அண்ணாச்சி கடை முன்னால் தலையை சொறிந்து அவநம்பிக்கையுடந்தான் நின்றான். அண்ணாச்சி.. என்று இழுத்தான், என்ன பம்புக்காரரே பாக்கி இந்த மாசம் அப்படியே நிக்கே! என்று முன்னெச்சரிக்கையாய் இழுக்க இந்த மாசம் மழை நிறைய பேஞ்சுருச்சு


பெரிய வாத்தியார்

 

 “இந்த அநியாயத்தைக் கேட்டீங்களா?” என்று ஆரம்பித்தார் சாம்பசிவம். இப்படி ஆரம்பித்தாரானால், உலகின் எந்த மூலையிலோ நடந்திருக்கும் செய்தியைப் பற்றியதாக இருக்கும். இதைப் பழக்க தோஷத்தில் அறிந்திருந்த தண்பர் நாதன், “காலம் கெட்டுப் போச்சு!” என்று சொல்லிவைத்தார், பட்டுக்கொள்ளாமல். முன்பு ஒருமுறை, ‘எதைச் சொல்றீங்க?’ என்று தெரியாத்தனமாய் கேட்கப்போய், ‘ஏன்யா? நீங்க தினசரி பேப்பரே படிக்கிறதில்லையா? இல்ல, டி.வி.யிலேயாவது பாத்துத் தெரிஞ்சுக்கிறது! இப்படி ஒங்களைமாதிரி, ‘நாட்டை ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன, இல்ல, அந்தக் கொரங்கே


மாலா நான் சொல்வதை கவனமாய்க் கேள்

 

 பகல் இரண்டு மணியளவில் கதவு தடதடவெனத் தட்டப்படும் சத்தம் கேட்டு, அரைத் தூக்கத்தில் இருந்த மாலதி எழுந்து சென்று கதவைத் திறக்க, அவளது கணவன் சந்தானம் அவளைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்து கதவை அவசரமாகத் தாழிட்டான். “என்னங்க? எங்கே உங்களுடைய சூட்கேஸ்? எப்ப வந்தீங்க பம்பாயிலிருந்து?” என்று பதறிப் போனாள். “உஸ்” என்று எச்சரித்தான் சந்தானம். “இத பாரு மாலா, நான் சொல்றத இப்ப ரொம்ப கவனமா கேட்டு நீ நடந்தா, இன்னும் ஒரு மாசத்தில் நம்


வித்தியாவின் குழந்தை

 

 ‘வயிற்று வலியென்று இரண்டு மூன்று நாளாக வித்தியா அவதிப் படுகிறாள்’. அந்தத்தாய், வயிற்று வலியால்அவதிப்படும் தன் மகளின் வயிற்றைத் தடவியபடி டாக்டருக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள். அவசரசிகிச்சைப் பகுதி பல ரகப்பட்ட நோயாளிகளால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.லண்டனிலுள்ள பல கசுவல்ட்டி டிப்பார்ட்மென்டுகள்,இரவு ஏழுமணிக்குப் பின் இப்படித்தான் அல்லோலகல்லோலமாகவிருக்கும். ஆம்புலன்சிலிருந்து இறக்கப்பட்ட,இரத்தம் கசியும், மூச்செடுக்கக்; கஷ்டப்படும் நோயாளிகளைக் கவனிக்க தாதிமார்களும்; டாக்டர்களும் அவசரப்பட்டுக் கொண்டிருப்பார்கள். அந்த டிப்பார்ட்மென்டில் போட்டிருந்த பல பெஞ்சுகளில் எத்தனையோபேர் பொறுமையுடன் காத்துக்கொண்டிருந்தார்கள். ஓருசிலரின் முனகல்கள்,வலி தாங்காத