Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 4, 2015

10 கதைகள் கிடைத்துள்ளன.

மஞ்சுளா

 

 “மத்தளங்கள் கொட்டுங்கள், மந்திரங்கள் சொல்லுங்கள். பெட்டை மாட்டைக் கொண்டுவந்து தாலி ஒன்று கட்டுங்கள்.” அவளின் சிரிப்பு குழந்தைத்தனமாக தெரிந்தாலும், முகத்தில் ஒன்றும் குழந்தைத்தனம் தெரியவில்லை. ஆழம் காணமுடியாத சோகம் நிழலாடியது. மாமியார் தர்ம சங்கடத்துடன் அவளைப் பார்த்தாள். மாமிக்கு வயது எழுபது ஆகப்போகிறது. அவளுக்கு, அதுதான் கிழவியின் மருமகளுக்கு முப்பத்தைந்து வயதிருக்கலாம். மாமிக்குப் பெயர் திருமதி திருச்சிற்றம்பலம். அவளுக்கு என்று ஒரு பெயர் எப்போதோ இருந்திருக்கலாம். ஆனால் ஊருக்கும் உலகத்துக்கும் அந்தக் கிழவி திருமதி திருச்சிற்றம்பலம்தான். மருமகளுக்கும்


வன்மச் சுவடுகள்

 

 வெவ்வேறு சமுகத்தால் ஒதுக்கப்பட்டு, வெவ்வேறு சமுகத்தைச் சேர்ந்த காதல் இணையர் (ஜோடி). காதலை வென்று வாழ்க்கையை வெல்லப் போராடிக் கொண்டிருந்தவர்களுக்கு தடைக்கல்லாய் இருந்தவர்கள் இவ்விருவரின் சாதிச் சமுகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பல இன்னல்கள் தரவே, ஊரின் எல்லையில் தங்கி வாழ்வை துவங்கினர். நண்பர்களின் உதவியால் பக்கத்து நகரத்தில் முத்துவிற்கு வேலை கிடைத்தது. மணிமேகலையும் அவருக்கு பல விதத்தில் உதவியாக இருந்தாள். ஊரை விட்டு அவர்களை ஒதுக்கி வைத்ததால் உறவினர்களின் நல்லது கெட்டதுகளில் கூட கலந்து கொள்ள முடியாத


வேள்வி

 

 அம்மன் கோவில் திருவிழாவில் பொலிஸ், பாதுகாப்பிற்கு அழைக்கப்பட்டிருந்தது.விதியின் விளையாட்டு போல..சிங்களவர்கள் இருவரையும் பணிக்கு அமர்த்தியிருந்தார்கள். பெண்கள், அரைச்சாரியில், மல்லிகைப் பூச்சரம் சூடி,அவர்களே தேடித் தேடி அறிந்திருந்தவைகளை பூசியும்,செருகியும் அலங்காரப் படுத்திக் கொண்டு..தேவதைகளாக வந்திருந்தார்கள்.சமவயது ஆண்களை விட, பெண்கள் அழகில் தூக்கலாக இருப்பார்கள். சந்திரன், பாபு,செல்வன்,ராமன்..சிற்பம் செய்வதற்காக வந்திருந்த கற்களில் இருந்து,கடலையை கொறித்தபடி,கிறங்கிப் போய்..ரசித்துக் கொண்டிருந்தார்கள்.சிங்கள பொலிஸ்காரர்கள்,ஒரு பெண்ணை நிறுத்தி..எதையோ கேட்டார்கள்.அவளோட தோழிகள் பயந்தபடி ஒதுங்கி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.அவ்விருவரையும்,பெடியள் பல இடங்களில் இளம் பெட்டைகளைக் கண்டால்,விசர் விசாரணை நடத்துவதைக்


நஷ்ட ஈடு

 

 ‘வாழாவெட்டி ‘ என்று சமூகத்தால் விழிக்கப்படும் தாயினால் வளர்க்கப்பட்டவன் நான். இரண்டு அறைகளைக் கொண்ட மண்ணாலான கொட்டில் வீட்டின் முன்னே, உச்சி வெய்யில் நேராய் இறங்க, தன்னை ஒடுக்கி கந்தல் சேலையால் தலையை மூடிக் குந்தியிருந்து, கிடுகு பின்னி பாரமாய் சுமந்து சென்று விற்றும், பால் அப்பம், முட்டை அப்பம் என்று வட்ட வட்டமாய் வாயில் நீரூறும் சுவையுடன் அப்பங்களைச் சுட்டு விற்றும், பிள்ளைகளை வளர்த்தவள் என் அம்மா. ‘அம்மா ‘ என்றால் பல காலமாய் என்


கங்கை இன்னும் வற்றி விடவில்லை

 

 இராஜலெட்சுமி தியேட்டர் முன்புறம் உள்ள சாலையில், கூட்டம் கூடியிருந்தது. அங்கு பாம்பாட்டி ஏதும் வித்தை, ஏதும் காட்டிக் கொண்டிருக்கிறானா? என்று விக்னேஷ் அருகில் சென்று கூட்டத்தை விலக்கிக்கொண்டு பார்த்தான். ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண் அங்கு மயங்கிக் கிடந்தாள். கிழிந்த சேலையுடன் எண்ணெய் பசை காணாத தலைமுடி தோற்றம் அவளை ஏழைப்பெண் என காட்டிக் கொண்டிருந்தது.. சுற்றிலும் இருந்தவர்கள் வேடிக்கையில் மூழ்கியிருந்தார்கள். ஒருத்தராவது இடத்தை விட்டு நகரவில்லை. “ ஐயோ பாவம்! யார் பெத்த பெண்ணோ ரோட்டில்