கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: September 2015

50 கதைகள் கிடைத்துள்ளன.

மலைக்காட்டு மர்மம்

 

 இயற்கை வளம் சூழ்ந்த மலைப்பாங்கான இடம். உயர்ந்த மலைகளைப் பற்றிப் படர்ந்த பசுமையான காடு, காட்டை நிறைத்திருந்தன பல நூறு வருடங்களைத் தாண்டிய பல பெரிய பெரிய இராட்சத மரங்கள். இருகைகளால் இணைத்துப் பிடிக்க முடியாத அகன்ற தண்டுகளுடன், அதன் கிளைகளோ பாசிபடிந்து ஒட்டுன்னிக‌ளின் உறைவிடமாய் பூமியை தொட்டுக் கொன்டிருந்தன. அந்த மலைக்காட்டில் அமைந்திருந்தது இயற்கையின் எழில் நடனமாய் காணும் போதே குளிர்ச்சியூட்டும் ஓர் அழகான நீர்வீழ்ச்சி..! உயர்ந்த மலையிலிருந்து பொங்கிப் பெருகி நுரைகள் பளீரிட பாலைப்போல


ஆட்டோகிராப்

 

 நடிகை மோனாலிசா அந்தப் பிரபல நகைக் கடையின் நங்கநல்லூர் கிளையை மாலை திறந்து வைக்கப் போவதாக, அன்றைய தினசரியில் ஒரு பக்க விளம்பரம் வந்திருந்தது. விளம்பரத்தைப் படித்த குணசேகர் , எப்படியாவது அன்று மோனாலிசாவிடம் ஆட்டோகிராப் வாங்கிவிட வேண்டுமென்று முடிவெடுத்தான். குணசேகரிடம் ஒரு பழக்கம் என்னவென்றால், பிரபலங்களிடமிருந்து அவர்களின் ஆட்டோகிராப் வாங்கி, பத்திரப் படுத்திவைத்து அதை தன் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் காண்பித்து பெருமைப் பட்டுக் கொள்வான். அதில் அவனுக்கு ஒரு அலாதியான இன்பம். அரசியல் தலைவர்கள், விளையாட்டு


மருமகளின் பாசம்

 

 அம்மா இறந்து போன செய்தி கேட்டதும் மீனா துடித்து தான் போய்விட்டாள் இருக்காத பின்ன அன்றாடம் என் அம்மாவோட மணிகணக்கா பேசுவதும் ஊருக்கு போனால் அம்மாவுக்கு அது பிடிக்கும் இது பிடிக்கும் என்று பார்த்து பார்த்து வாங்கிகொண்டு போவதுமாய் இருந்தவளுக்கு திடிர்னு அம்மா இறந்த செய்தி இடி விழுந்தது போலத்தான் இருந்தது நான் செய்தி சொன்னதும் அவள் ஊருக்கு போக துடித்த துடிப்பு இருக்கே அப்பப்பா சொந்த பொண்ணுக்கு கூட இருக்காது மெட்ராசிலிருந்து ஊருக்கு போவதற்குள் என்னை


போதிமரம்

 

 பொங்கி வந்த அழுகையை மிகுந்த சிரமப்பட்டு அடக்கியவாறே , ஆட்டோவில் பயணித்து கொண்டிருந்தாள் ஷைலஜா ..சரியாக இருபது நிமிட பயணத்துக்கு பின் வீடு வந்து சேர்ந்தவள் ..ஹாலிலிருந்த சோபாவில் ‘ ‘ தொப்பென்று ‘ அமர்ந்தாள் : ஆயாசத்துடன் சாய்ந்து கொண்டவளின் மனக்கண் முன்னே , சற்று முன்பு நடந்த அந்த சம்பவம் , நிழல் படம் போல தோன்றி மறைந்து கொண்டிருந்தது ….. கணவன் ராமை ஆபீசுக்கு அனுப்பிய கையுடன் நகரின் ஒதுக்குப்புறமாய் இருந்த அந்த


காஞ்சனாவின் தவிப்பு

 

 இன்று எப்படியும் சேகரிடம் பேசிவிட வேண்டும் என்று நினைப்பாள் காஞ்சனா, இது போல் தினமும் நினைத்து நினைத்து பாழும் வெட்கம் வந்து அவளை தடுத்து விடுகிறது, அவளும்தான் என்ன செய்வாள்? மனதில் சலனங்கள் இல்லாதவரை பெண்ணும் ஆணும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் காஞ்சனாவுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நமக்கு வரும் மாப்பிள்ளை எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என நினைப்பது இயல்புதானே ! இது பெண்ணுக்கும் ஆணுக்கும் ஒரே மாதிரிதான், அப்படி