கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: September 2015

50 கதைகள் கிடைத்துள்ளன.

மன்றம் வளர்த்த காதல்

 

 மொத்த சொந்தமும் பந்தமும் ஓர் இடத்தில் சேர்ந்து ஒருவரை ஒருவர் நையாண்டி செய்துகொண்டு இருக்க , குழந்தைகள் பட்டாளம் யார் வார்த்தைகளையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் குறுக்கே நெருக்கே ஓடி விளையாடி கொண்டு இருக்க, எந்நேரமும் அடுப்பில் ஏதோ சமையல் வேலை நடந்து கொண்டு இருக்க, வயதான தாத்தா பாட்டி தன் வாழ்க்கை நிகழ்வுகளை மற்றவர்களுடன் அசைப்போட்டு மகிழ்ந்து கொண்டு இருக்க, வீட்டின் பெண்கள் என்றைக்கும் இல்லாமல் கூடுதல் அழகோடு மின்ன, வீடே பூக்களின் வாசனையில் மிதந்து கொண்டு


பாடம்

 

 இலண்டனுக்குப் போவதற்கு முன்னால் இரண்டு காரியங்களைச் செய்து முடிக்கணும்னு மெனு மாஸ்டர் துரை முடிவு செய்திருந்தார். முதலில் தனக்கு ஆறாம் வகுப்பு ஆசிரியராக இருந்த வைத்தியநாத வாத்தியாரைப் பார்த்து வாழ்த்துகளைப் பெறுவது, அடுத்து அம்மாவையும் அப்பாவையும் நன்றாகப் பராமரிக்கிற முதியோர் விடுதியில் சேர்ப்பது. இப்போது வாத்தியார் வைத்தியநாதனைப் பார்க்கத்தான் போய் கொண்டிருக்கிறார். அவரது கார் போகும் வேகத்தினை விட அவரது நினைவு பல மடங்கு வேகத்தில் பின்னோக்கிப் பாய்ந்தது. ஆறாம் வகுப்பு படிக்கும் போது ஒரு நாள்


மடிச்சுமை

 

 “”ம்ம்ம்மா….” என்று அலறிற்று. அழுகையும் அலறலுமான அதன் குரல் எனக்குள் என்னவோ செய்ய… தொடர்ந்த சில நிமிடங்கள் நகராது தத்தளித்தன. “”என்ன பெரியக்கா… இப்படி கலங்குற… ஒன்னும் நடக்காது…” கலக்கமாகத்தான் இருந்தது. பசுமாடு வேறாகவும் கன்று வேறாகவும் போவதற்குள் அது படும் வேதனை. கொஞ்ச நேர அமைதிக்குப் பின் “அது’ நிகழ்ந்தது. கன்று, வேறாய், வைக்கோல் பொதியின் மேல் கிடக்க… பசுமாடு அதனை அரவணைத்துக் கிடந்தது. கன்றின் உடல் முழுக்க ஈரமாயிருந்தது. மெல்ல அது அசைய பயமாய்க்கூட


வேலை

 

 அலுவலகத்திலிருந்து சோர்வுடன் திரும்பிய தன் கணவனை சற்று திகைப்புடன் பார்த்தாள் மாலதி, தான் நினைத்தது நடந்து விட்டதா என்ன? “”என்னால இந்த ஆபீஸிலே வேலை செய்ய முடியாது. நேத்து வந்த பய எல்லாம் அதிகாரம் பண்றான். எனக்குக் கீழே இருந்தவன் எல்லாம் எனக்கு பாஸôம். என்னோட பழைய பாúஸôட பையன் அமெரிக்காப் போய்ப் படிச்சுட்டு வந்துட்டானாம். பெரிய கொம்பன்னு நினைப்பு, ஐஸ்கிரீம் வாங்கித் தர்றீங்களா அங்கிள்?னு கேட்டவன், இன்னிக்கு கம்பெனி ரூல்ஸ் பத்தி எங்கிட்டே லெக்சர் அடிக்கறான்.


ஆகாசத்தின் உத்தரவு

 

 சிமென்ட் மேடையில் ஒரு குதிரையின் மீது கிழக்கு பார்த்த நிலையில் முனியசாமி மாதிரி கொடூரத் தோற்றத்தில் ஒரு சாமி உட்கார்ந்து இருந்தது. சாமி சிலைக்கு முன் எந்த அவசரமும் இல்லாமல் கருத்த நிறமுடைய ஓர் ஆள் கும்பிட்டுக் கொண்டிருந்தான். நடந்து வந்த களைப்பால் வழிந்த வியர்வை யைக்கூடத் துடைக்க வில்லை. கீழே வைத்திருந்த பையில் இருந்து செய்தித்தாள் ஒன்றை எடுத்து, தரையில் விரித்துப்போட்டான். பையில் இருந்த பொரிகடலை பொட்டலத்தை எடுத்துப் பிரித்துவைத்தான். ஒரு சீப்பு வாழைப்பழத்தை எடுத்துவைத்து