கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 24, 2015

10 கதைகள் கிடைத்துள்ளன.

ஜல்லிக்கட்டு

 

 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு இன்னமும் பத்து தினங்களே இருந்தன. மதுரையைச் சுற்றியிருந்த கிராம மக்கள் தங்கள் வீட்டுக் காளைகளுக்கு பிரத்தியேக உபசரிப்புடன் ஜல்லிக்கட்டிற்காக கொம்பு சீவி விட்டுக் கொண்டிருந்தார்கள். உசிலம்பட்டியில், ஜல்லி ராமசாமித்தேவர் கடந்த ஆறு மாதங்களாகவே தனது காளை மூக்கனை ஜல்லிக்கட்டுக்காக தனிப்பட்ட கவனத்துடன் தயார் செய்து கொண்டிருந்தார். இது அவர்கள் குடும்பத்தில் பரம்பரை பரம்பரையாக செய்து வருகின்ற காரியம்தான் என்றாலும், ராமசாமித் தேவரின் காளையை கடந்த ஐந்து வருடங்களாக எவரும் அடக்க முடியவில்லை. அதனால்


ஸிஸ்டம் ஃபெயிலியர்!!!!!

 

 பாகம் – 1 எமலோகம். சித்ரகுப்தன் தலையைக் குனிந்துகொண்டு மிகவும் சோகமாக உட்கார்ந்து கொண்டிருந்தார். எமதர்மன் அதைப் பார்த்துவிட்டு, “என்ன, சித்ரகுப்தா, ஏன் இப்படி உட்கார்ந்திருக்கிறாய்? ஆபீஸ் நேரத்தில் இப்படி வேலை செய்யாமல் உட்கார்ந்திருக்கிறாய். இன்றையக் கணக்கெல்லாம் எழுதி முடித்துவிட்டாயா?” என்றார். “இல்லை, ப்ரபோ,” “ஏன்? என்னாயிற்று?” சித்ரகுப்தன் மௌனமாக தன் வலதுகைக் கட்டைவிரலைத் தூக்கிக் காட்டினார். “என்ன, கையில் கட்டு, சித்ரகுப்தா?” “நகச்சுற்று, ப்ரபோ” “நமது எமலோக வைத்தியரிடம் காட்டினாயா” “என்ன சொன்னார்?” “அவர் தன்வந்திரியிடம்


முன்னால் கைதியின் வாதமும் முன்னால் நீதிபதியின் தீர்ப்பும்

 

 நாய் குரைக்கும் சத்தம் கேட்டவுடன் வெளி வாசலை பார்த்தார் ரிட்டையர்ட் ஜட்ஜ் மகாதேவன்.பங்களா கேட் அருகில் ஒரு ஆள் நின்று கொண்டிருப்பதை பார்த்தார், தொலைவில் பார்க்கும்போது முகம் சரியாக தெரியவில்லை, ஆனால் ஆள் நல்ல கட்டு மஸ்தாக இருப்பது தெரிந்த்து. குரைக்கும் நாயை “கீப் கொயட்” என்று சப்தமிட்டு அடக்கினார்.பங்கஜம், பங்கஜம், என்று மனைவியை அழைக்க என்னங்க என்று வந்து நின்றாள் பங்கஜம். யாரோ கேட்டுகிட்ட நிக்கறாங்க, மாரியம்மாளை அனுப்பி என்ன வேனும்னு கேட்டுட்டு வரச்சொல்லு, மாரியம்மாவைய்


எஸ்.எம். எஸ்!

 

 “ஹலோ!….நான் ரமேஷ் பேசுகிறேன்!…நீங்க யார் பேசறது?…” “நான் உன் பால்ய சிநேகிதன் கேசவன் பேசுகிறேன்!….என்னைத் தெரியவில்லையா?…” அட!…..சின்ன வயசிலே கூடப் படித்த அந்தக் கேசவனா…ஐயோ! …அவனுக்குப் பொய் சொல்வது அல்வா சாப்பிடற மாதிரி! …அவனிடம் எப்படி தப்பிப்பது என்று ரமேஷின் சிந்தனை ஓடியது! …. “ ஓ!…கேசவன் நீங்களா!….. ஓய்வுக்குப் பிறகு நீங்க மதுரையில் செட்டிலாகி விட்டதாகச் சொன்னார்களே!……இங்கே கோயமுத்தூருக்கு எப்ப வந்தீங்க?….எப்படி இருக்கிறீங்க?….” “ நான் அதே மாதிரிதான் இப்பவும் இருக்கிறேன்!…” “அப்படியே தான் இன்னும்


அழுகை ஒரு வரம்

 

 மாமியை ஒரு பெண் முதலாளி, என்ற கணக்கில் மலர் நன்றாகவே அறிந்தி வைத்திருந்தாள் மாமி அவள் தகப்பனின் சொந்தச் சகோதரி தான் அப்பாவுடன் கூடிப் பிறந்த உடன் பிறப்பு என்றாலும், அவர் மாதிரி உத்தம குண இயல்புகளைக் கொண்ட, எல்லோரையும் நேசிக்கத் தெரிந்த மேலான பழுதற்ற அன்பு மனமென்பது அவளைப் பொறுத்த வரை நீரில் எழுத்துத்தான். இன்னும் சொல்லப் போனால் அப்பாவின் இரத்தமா அவளும் என்று கேட்கத் தோன்றுகிற மூர்க்கமான திரிபுபட்ட நடத்தைக் கோளாறுகளின் முழு வடிவமுமாக