கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 20, 2015

10 கதைகள் கிடைத்துள்ளன.

யார் உலகம்?

 

 பத்திரிகை ஆசிரியர் கூப்பிட்டனுப்பினார். “நீங்கதான் பேசணும்னு வருந்தி வருந்தி அழைச்சிருக்காங்க, சிங்கப்பூரிலேருந்து!” மல்லிகாவால் அவருடைய உற்சாகத்தில் பங்குகொள்ள முடியவில்லை. “இங்க வேலை தலைக்குமேல கிடக்கே, ஸார்,” என்று தப்பிக்கப் பார்த்தாள். “என்னிக்குமா நமக்கு வேலை இல்ல? அதை யாராவது பாத்துப்பாங்க. நீங்க போறீங்க!” உரிமையாக மிரட்டினார். “ஒங்களுக்குக் கைவந்த தலைப்பு — இது ஆண்களின் உலகம்!” ஆசிரியர் சிரித்தார். “வீட்டில..,” “அட! நீங்க மத்த பொண்ணுங்க மாதிரியா? டாக்டர் வாசன் ரொம்ப நல்ல மனுசரில்ல! ஒங்களைப்பத்தி எவ்வளவு


கர்மயோகி

 

 முனைவர் ராகவன் ஒரு நிர்வாக இயல் கல்லூரியில் பேராசியராகப் பணி புரிகிறார். ஆசிரியப் பணியை விருப்பத்துடன் எடுத்துக் கொண்டவர். ஆகவே உற்சாகத்துடன் பாடங்கள் நடத்துவார். ஒவ்வொரு பாடம் துவங்கும் போதும் அதன் பின்னணிக்கு ஒரு கதையோ அல்லது வரலாற்றுத் துணுக்கோ, ஆச்சரியப் படவைக்கும் புள்ளி விவரங்களைச் சொல்லியோ அல்லது யோசிக்க வைக்கும் கேள்வியைக் கேட்டோ தான் பாடத்தை ஆரம்பிப்பார். பாடங்களில் வரும் விஷயங்களை விளக்கும்போது ஆன்மிகத்திலிருந்தும், அரசியலிலிருந்தும் மேற்கோள்கள் காட்டி விளக்குவார்.. எம்பிஏ படிப்புக்கு ஆங்கிலத்தில் வகுப்பெடுத்தாலும்,


இழப்பு!

 

 பத்து வருடங்களாக தமிழ் திரையுலகில் கொடி கட்டிப் பறக்கும் நட்சத்திரம் ஸ்வர்ணலதா. தமிழ் நாட்டில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்தாகி விட்டது! முதலில் தன் கவர்ச்சியால் திரை உலகைக் கட்டிப் போட்ட ஸ்வர்ணலதா, இப்பொழுது நடிப்பில் சாவித்திரிக்கு ஈடாகப் பேசப் படுகிறார். பாசமுள்ள குடும்ப பாங்கான வேடத்திற்கு ஸ்வர்ணலதாவை விட்டால் இன்று ஆள் இல்லை! இரவு பகலாக கால்ஷீட் கொடுத்தும் அவளால் சமாளிக்க முடியவில்லை. அவளுடைய இரண்டு வயசு குழந்தை சிநேகா மேல்


அவளுக்கென்று காத்திருக்கும் குடும்பம்

 

 டாக்டர் ரேவதி! யெஸ், என்று நிமிர்ந்தவளிடம். எதிரில் நின்ற இருவரில் ஒருவர் கார்டு ஒன்றை நீட்டி பத்திரிக்கையில் இருந்து வர்றோம், இன்னக்கு ஒன்பது மணிக்கு எங்களுக்கு இணடர்வியூ கொடுக்கறீங்கன்னு சொல்லியிருக்கிறீங்க, யெஸ்,யெஸ்,உட்காருங்க இப்பவே ஆரம்பிச்சுக்கலாமா? ஒரு ஐஞ்சு நிமிசம் உங்களை போட்டோ எடுத்துக்கறோம், என்று பல்வேறு கோணங்களில் படம் எடுத்துக்கொண்டனர்.பின் எதிரில் உட்கார்ந்து கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர். கேள்விகள் முடிந்த பின் மேடம், இப்ப உங்களை பத்தி கொஞ்சம் சொல்லுங்க எதற்கு என்று ரேவதி புருவத்தை உயர்த்த


தாக்கம்

 

 சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் சிங்கப்பூர்-சென்னை விமானம் புறப்படத் தயாரானது. ஏர்ஹோஸ்டஸ் பக்கத்துக்கு ஒருவராக நின்று கொண்டு ஆக்ஸிஜனுக்கு அழகாக அபிநயிக்க, விமானம் ரன்வேயில் மெல்ல ஊர்ந்தது. ரகுராமன் சற்றுத் தளர்வாக அமர்ந்து கொண்டான். சென்னையை அடைந்தவுடன் அவன் நெல்லை எக்ஸ்பிரஸில் திருநெல்வேலி செல்ல வேண்டும். பெற்றோர்களையும், சகோதர, சகோதரியையும் பிரிந்து கடந்த நான்கு வருடங்களாக அமெரிக்காவில் வேலை செய்கிறவன் தற்போது மிகுந்த சந்தோஷத்துடன் ஒரு மாத விடுப்பில் தன் வீட்டிற்குச் செல்கிறான். ஆனால், ஒரு வாரத்திலேயே தான் அமொ¢க்கா