கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2015

38 கதைகள் கிடைத்துள்ளன.

காக்கை சாம்பலில் ஒரு சிகப்பு கண்

 

 காக்கையை உயிரோடு பிடிப்பது பற்றி பல வகைகளில் நாங்கள் யோசனை செய்தோம்.கவண்கற்களை எடுத்து கொண்டு நாண் வைத்து அடித்து பார்க்கலாமா இல்லை வலை விரித்து பிடிக்கலாமா இப்படி பல விதங்களில் யோசனை செய்து முயற்சி செய்தோம் .பிறகு ஒரு குறவனை தேடி கண்டு பிடித்து உயிரோடு ஒரு காக்கை வேண்டும் எவ்வளவு ரூபாய் ஆனாலும் பரவாயில்லை என்று கூறிய பிறகும் காக்கை உயிரோடு கிடைக்கவில்லை. காக்கையை ஏன் உயிரோடு கைவசப்படுத்த வேண்டும் என்பதை முதலில் நீங்கள் தெரிந்து


கிஷோர் சிதம்பரம்

 

 சிதம்பரம் இவர் கோயம்புததூரை சேர்ந்தவர் .கல்லூரியில் இவருடன் படித்த நஜிம என்ற முஸ்லிம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். பெற்றோர்களின் எதிர்ப்பால் இருவரும் விட்டை விட்டு வெளியேறுகின்றனர் .கல்லூரியில் இவர் படிக்கும் போதே மென்பொருள் ஒன்றை உருவாக்கி தங்க பதக்கம் வென்றவர். அதனால் இவருக்கு தான் படித்த படிப்பு உறுதுணையாக இருந்தது. தன் கல்லூரி தோழி கோகிலாவின் தந்தையின் உதவியுடன் லண்டன் செல்கின்றனர். அங்கு இவரின் மென்பொருள் அந்நாட்டு அரங்கம் அங்கீகரித்தது பல்லாயிரம் கோடிக்கு லண்டன்


துன்பம் கொஞ்ச காலம்தான்

 

 ‘ஏய்” மூதேவி எங்கே போய் தொலைஞ்சே ! கர்ண கடூர குரல் அங்கு வா¢சையாய் அமைக்கப்பட்டுள்ள அனைத்து வீடுகளுக்குள்ளும் கேட்டது. பக்கத்து வீட்டு ஜெயா தன் கணவனிடம் போச்சு காலையிலேயே ஆரம்பிச்சாச்சு இவரோட அட்டகாசத்தை, பாவம் அந்தக்கா என்னதான் பண்ணும் இவர் பண்ற தொல்லையை எப்படித்தான் சகிச்சுட்டு இருக்கோ! இதற்கு ஜெயாவின் கணவன் பாலாஜி ஒன்றும் சொல்லவில்லை, ஆனால் பெரூமூச்சு விட்டான், அவர்கள் வாழ்ந்த வாழ்வு என்ன? இன்றைய நிலைமை எப்படி மனிதவாழ்க்கையை தலைகீழாய் புரட்டி போட்டுவிடுகிறது.


ஆரம்பம்!

 

 அன்று ஞாயிற்றுக்கிழமை. ராகவனும், பிருந்தாவும் ஹாலில் ஓய்வாக உட்கார்ந்திருந்தார்கள். ராகவனின் வயசான அப்பா சுந்தரம் அன்றைய தினசரி பத்திரிகையில் வந்த பரபரப்பான ஊழல் வழக்கு தொடர்பான செய்திகளில் மூழ்கியிருந்தார். பேரன் செல்வம் அந்த நேரம் ஏதோ வேலையாக ஹாலுக்கு வந்தான். பிருந்தா மகனை கூப்பிட்டுக் கேட்டாள். “ஏண்டா செல்வம்!…இந்த செமஸ்டரில் கணக்கிலே ஏன் உன் மார்க் குறைந்து போச்சு?….” “ அம்மா!..அது தான் எனக்கே தெரியலே!..நல்லாத்தான் செய்திருந்தேன்!….எப்படி குறைந்ததுனே தெரியலை…” “ சரி……போகட்டும்!…..அடுத்த செமஸ்டரிலாவது நீ “மேத்ஸிலே


நான்காம் உலகம்

 

 விடிந்துவிட்டது. எனது மகன்கள் தங்கள் பாடசாலைகளுக்குச் செல்ல ஆயத்தமாகிறார்கள். இன்று நான் காணப்போகும் மீனா என்ற இந்தியப் பெண்மாதிரி,தன்னைச் சுற்றிய உலகைக்;கண்டு பயப்பட்டு அடைந்து கிடக்கும் வயதோ அல்லது பயமோ அவர்களுக்குத் தெரியாது. நான் படுக்கையை விட்டெழும்பாமல்,ஜன்னலால் உலகத்தைப் பார்க்கிறேன். எனது படுக்கையறையை அண்டினாற்போல் ஒரு பிரமாண்டமான மரமிருக்கிறது;ஆங்கில நாட்டு மரங்கள்,செடிகள் பலவற்றிற்கு எனக்குப் பெயர் தெரியாது.இந்தமரத்தின் இலைகள் ஊரிலுள்ள பூவரசு மரஇலைமாதிரியிருக்கின்றன. அந்த மரத்தின் ஒரு கிளையில் ஒரு பெரிய அணில் ஊர்ந்து கொண்டிருக்கிறது. அதைப்