Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2015

38 கதைகள் கிடைத்துள்ளன.

வயாகிராவும் – அரைக்கோவணமும்

 

 “நாலு மணிக்கு ஜெனரல் மானேஜர் மீட்டிங் வச்சிருக்கார்…..முக்கியமான சமாச்சாரமாம்….” இருக்கை இருக்கையாக வந்து சொல்லிக் கொண்டிருந்தான் சுகவனம். “என்னடா சமாச்சாரம் என்ன விஷயம் பத்தி பேசப்போறார்… உனக்கு ஒரு துப்பு கெடச்சிருக்குமே…. காலமே என்ன பேசினார்….” “அது ரொம்ப மோசமான சமாச்சாரம், அதுக்கும் மீட்டிங்குக்கும் எந்த சம்மந்தம் இருக்க முடியாது…” “பரவாயில்ல… பேசினதைச் சொல்லுடா….” “அமெரிக்கா போனதுலே இருந்து பெரிசுக்கு புத்தி சுவாதீனம் இல்ல…காலையிலே டீ ஊத்திக் கொடுத்தேன்.. டீயும் பிஸ்கட்டும் சாப்ட்டுகிட்டே பேச ஆரம்பிக்குது… இதுக்கு


வா வா என் தேவதையே!!!

 

 வானம் கார்மேகத்துடன் காட்சியளிக்க, சில்லென்று தென்றல் காற்று வீச, சிறு மழைத் துளிகள் மண்ணில் விழ, காலை பதினோரு மணிக்கு மத்திய சிறைச்சாலையின் கதவு திறக்கிறது. சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில். “ஐயா பேருந்து நிலையத்திற்கு எந்த வழியில் செல்ல வேண்டும்” எனக் கேட்டு, பதிலை பெற்றுக்கொண்டு, அங்கு சென்றார். அவர் செல்ல வேண்டிய இடமான திருப்பூர் பேருந்தில் ஏறி அமர்ந்தார். பேருந்தின் உள்ளே தொண்ணூறில் வெளியான இளையராஜாவின் பாடல்கள் ஒலிக்க, அதை கேட்ட அவன் மனம்


சரளா என்றொரு அக்கா!

 

 அலுவலக வேலையாக சென்னைக்கு போகிறேன் என்று பெரியப்பாவிடம் சொன்னது தப்பாகப் போய்விட்டது. “அப்படியே சரளாவைப் போய்ப் பார்த்துட்டு வா” என்று சொல்லி விட்டார். இன்றைக்கு நான் வளர்ந்து ஆளாகிவிட்டேன். என்றாலும், பெரியப்பாவின் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேச முடியாது. அப்பாவே இன்று வரை பேசியதில்லை. பெரியப்பா, கிராமத்துக் கூட்டுக் குடும்பத் தலைவர். அவர் என்னைப் புலிப்பால் கொண்டு வரச் சொல்லி இருக்கலாம். கடினமாக இருந்தாலும் செய்துவிடலாம். சரளாவைப் போய்ப் பார்ப்பது… மெத்தக் கடினம். மனசு கரித்தது. பஸ்ஸில் ஏறி,


அவன் அப்படித்தான்…!

 

 அலுவலகத்திற்குள் நுழையும்போதே முதல் பார்வை அங்குதான் சென்றது. அது என்னவோ தவிர்க்கவே முடியவில்லை. நான் வருவதைப் பார்க்கிறார்களா அல்லது நான் எங்கு நோக்குகிறேன் (நோங்குகிறேன்) எனப் பார்க்கிறார்களா என்று தோன்றியது. அவர்களெல்லோருமே அப்படித்தான் இருந்தார்கள்.. யாரும் விதி விலக்கல்லதான். நான் உட்பட. இதைச் சொல்லிக் கொள்வதில் எனக்கொன்றும் வெட்கமில்லைதான். நானும் மனிதன்தானே! ஆனால் வெறும் பார்வைதான் என் பார்வை. மற்றதற்கெல்லாம் பயம். அந்த அலுவலகத்தில் எல்லாருக்கும் அது ஒரு வேலை. அந்த தரிசனம் பெறவில்லையெனில் அந்த நாள்


கனவு மெய்பட வேண்டும்

 

 மனதினுள் அடங்கி அதுவே தானாய் ஒருமுகப்பட்டு உறங்கும் நிலையில், அவர் இருந்த போது தான், எதிர்பாராத விதமாக அந்த விபரீத நிகழ்ச்சி நடந்தேறியது. அதன் முதற் தொடக்கமாக அழுகை குமுறி உச்ச கதி பிராணாவஸ்தையுடன் நிலை குலைந்து தன்வசமிழந்து சாரதா அவரை அழைக்கும் குரல், காற்றலைகளோடு கலந்து வந்து அவர் காதில் விழுந்த நிலையிலும் அவருக்கு விழிப்புத் தட்டவிலை.. அது அவரின் இயல்பு. வாழும் மனிதர்களிடையே, சலனப் பொறி கொண்டு அலைகிற துரும்பு மனமும் அதன் துருப்பிடித்த்ச்


ஓரு கணிப்பொறியாளனின் நினைவுப் பாதை

 

 அன்புள்ள வாசகர்களுக்கு, என் பெயர் இளங்கோ முத்துசாமி; என்னை சுருக்கமாக இளங்கோ என்று தான் எல்லோரும் கூப்பிடுவார்கள். எனக்கு உங்களிடம் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன; நான் இந்த விஷயங்களை எழுதி கிழித்துப்போடவேண்டும் என்று தான் முதலில் எண்ணியிருந்தேன், ஆனால், உண்மையில் எழுதக்கூடாத எழுதப்படாத விஷயங்களை எழுதி தீர்த்துக்கொள்வது என்ற முடிவோடு, எனது கடந்த காலத்தில் என்னை வாட்டி வதைத்து, நெகிழ்ந்த நினைவுகளை முடிந்தவரை எனது ஞாபக அடுக்குகளிருந்து அசைப்போட்டு பார்த்து உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


அழகான மண்குதிரை

 

 நந்தினி கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டாள். ஆயிற்று. இன்னும் கால்மணிக்குள் அவள் இறங்குமிடம் வந்துவிடும். அவள்மட்டும் தனியாகப் போய் நின்றால், அம்மா என்ன சொல்வாள்? அவர்தான் ஆகட்டும், தலைதீபாவளியும் அதுவுமாய், இப்படியா தன்னை விட்டுக்கொடுப்பது! ஒரு மரியாதைக்காவது.. ‘நீ கணவருக்கு மரியாதை கொடுத்தது என்ன தட்டுக்கெட்டுப் போயிற்று, அவரிடம் அதை எதிர்பார்க்க?’ அந்தராத்மா இடித்துரைத்தது. பழகின தெருக்களிடையே பஸ் நுழைந்து சென்றபோது, இனம்புரியாத மகிழ்ச்சி தோன்றியது. இன்னும் ஐந்து நிமிடம்தான். கண் அனிச்சையாகக் கடிகாரத்தில் பதிய, அடிவாயில் கசந்தது. ‘முதலில்


உதவி செய்ய போய்…

 

 “பீஹார்” மாநில செய்திகளில் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் தொடர் கொள்ளைதான், சட்ட மன்றத்தில் முதலமைச்சர் இதைக்கண்டு பிடிக்க “தனிப்படை” அமைக்கப்படும் என்று அறிவித்த பின்னர்தான் எதிர்க்கட்சிகளின் கேள்விக்கணைகள் குறைந்தன. இதற்கு காரணம் கடந்த இரு மாதத்தில் சாதிக்பூர்,பிஸ்ராம்பூர்,பாகூர்,ஜல்பாகுரி போன்ற நகரங்களில் நடைபெற்ற வங்கிகளின் தொடர்கொள்ளைதான். போலீஸ் இனிமேலும் இதை தொடர அனுமதிக்ககூடாது என்ற முடிவுடன் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வங்கிகளுக்கு காவலை பலப்படுத்தி உள்ளன. முதலமைச்சா¢ன் அறிவிப்பால் இதை எப்படியும் கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல்