Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2015

38 கதைகள் கிடைத்துள்ளன.

இயேசுவுக்கு போலிஸ் காவல்

 

 வானத்திற்கும் பூமிக்கும் என்ன சண்டையாம்? விடிந்த நேரத்திலிருந்து பூமித்தாயை நனைத்துக்கொட்டும் வருணபகவானுக்குத் துணைசெய்ய வாயுபகவானும் இணைந்து விட்டார். பெரும்காற்றடித்து,அடைமழைபெய்து லண்டன் தெருக்கள் இயற்கையின் தாண்டவத்தில் அல்லோல கல்லோப்பட்டுக்கொண்டிருந்தது. நடந்துசெல்வோர் பிடித்திருக்கும் குடையைச் சட்டை செய்யாமல் மழை அவர்களை நனைத்துத் தளளுவதையும் பொறுத்துக்கொண்டு அவர்கள் தங்கள் விடயங்களைப் பார்க்க விரைந்து கொண்டிருந்தார்கள். அதையும் தாண்டிய விதத்தில்,காரிற் செல்பவர்கள், நடந்துகொண்டிருப்பவர்களைத் தங்கள் காரின் வேகத்தில் தெப்பமாக்கிவிட்டுப் பறந்து கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் ஒரு இரட்டைத்தட்டு லண்டன் பஸ் நிறைமாதக் கற்பவதிபோல,


த்ரில்…!

 

 “தயவுசெய்து என்னைச் சுதந்திரமாக இருக்க விடுங்கள்…” மடக்கிப் போட்ட இரண்டு வரி விளம்பரத்தை தினசரிகளுக்கு வழங்கியிருந்தான் அச்சுதன். கீழே பெயரோடு சரி. முகவரி கொடுக்கவில்லை. அட்ரஸ் இல்லாம எப்டி சார்? என்றார்கள் பத்திரிகை ஆபீஸில். என் முகவரியை தர்றேன்ல அத்தோட விடுங்க…என்றான். எதற்காக இப்படிச் செய்தோம் என்று மனது அரித்துக் கொண்டேதான் இருந்தது. யார் தன்னுடைய சுதந்திரத்தைக் கெடுத்தார்கள் என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டான். விளம்பரம் தேவையானவர்களின் கண்ணில் பட்டிருக்குமா என்று யோசிக்கலானான். சுதந்திரமாக இருக்க விடுங்கள்


கண்ணோட்டம்

 

 சிவநேசன் ஒரு நிமிடம் அதிர்ந்து போய்விட்டார், உடனிருந்த நண்பரும் ஆண்டவன் உன்னோட இருக்கான்ப்பா என்று நடுங்கிய குரலில் சொல்லிக்கொண்டே சிவநேசனை அங்கிருந்து அழைத்து சென்றுவிட்டார். சிவநேசன் வீட்டுக்கு சென்றபின்னரும் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. மனைவியும், குழந்தைகளும் ஊருக்கு சென்றிருந்தனர், தனியாக இருப்பது மேலும் மனதை உலுக்கியது. இரவு உறக்கம் வராமல் தவித்து பின் எப்போது துாங்கினாரோ, அவருக்கே தெரியாது. காலையில் கண்விழிக்கும் போது மணி ஓன்பதை நெருங்கி கொண்டிருந்தது, அலுவலகத்திற்கு கைபேசியில் அழைத்து விடுப்பு தெரிவித்துவிட்டு, காப்பி


நிர்வாண நகரத்தில் கோவணம்!

 

 குளியலறைக்கு வெளியே போடப்பட்டிருந்த மேட் வழுக்கி, தடுமாறி கீழே விழப்போய், ஒருவாறு சுதாரித்து அருகிலிருந்த ஜன்னலை பிடித்துக்கொண்டு நின்று பெருமூச்சுவிட்டுக்கொண்ட மறுநொடியே என் கண்கள் வலதுபுறம்தான் திரும்பியது… “பார்த்து போங்க பெரியவரே!” கணினியின் திரையை விட்டே கண்களை விலக்காமல் சொல்கிறான் ஜெகா.. இடறியதை பார்த்திருக்க மாட்டானென்று நினைத்தேன், ஓரக்கண்ணால் பார்த்திருக்கக்கூடும்.. அவன் சொல்வதை காதில் வாங்கிக்கொள்ளாததைப்போல துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு, குளியலறைக்குள் நுழைந்துவிட்டேன்… ஜெகா சொன்ன ‘பெரியவரே’ என்னை எரிச்சலூட்டியது, அதை அவனுமே அறிவான்… அறிந்ததனால்தான்


ஹர்ஷிதா எனும் அழகி

 

 இரவு எட்டு மணி. பாம்பே ரயில்வே ஸ்டேஷன். அகமதாபாத் செல்ல வேண்டிய குஜராத் மெயில் முதல் பிளாட்பரத்தில் வந்து நிற்பதற்கு இன்னமும் இரண்டு மணி நேரங்கள் இருந்தன. அகமதாபாத் செல்வதற்காக அன்று மதியம்தான் தாதர் எக்ஸ்பிரஸில் சென்னையிலிருந்து பம்பாய் வந்திருந்தான் பாலாஜி. சென்னையில் ஒரு இண்டர்வியூவிற்கு சென்றவன் கையோடு வேலைக்கான ஆர்டரையும் வாங்கிய உற்சாகத்தில் மிதந்து கொண்டிருந்தான். ‘நாளை முதல் காரியமாக இந்த அகமதாபாத் வேலையை ராஜினாமா செய்து விட்டு ஒரு மாத நோட்டீஸ் பிரியடில் குஜராத்


காக்கை சாம்பலில் ஒரு சிகப்பு கண்

 

 காக்கையை உயிரோடு பிடிப்பது பற்றி பல வகைகளில் நாங்கள் யோசனை செய்தோம்.கவண்கற்களை எடுத்து கொண்டு நாண் வைத்து அடித்து பார்க்கலாமா இல்லை வலை விரித்து பிடிக்கலாமா இப்படி பல விதங்களில் யோசனை செய்து முயற்சி செய்தோம் .பிறகு ஒரு குறவனை தேடி கண்டு பிடித்து உயிரோடு ஒரு காக்கை வேண்டும் எவ்வளவு ரூபாய் ஆனாலும் பரவாயில்லை என்று கூறிய பிறகும் காக்கை உயிரோடு கிடைக்கவில்லை. காக்கையை ஏன் உயிரோடு கைவசப்படுத்த வேண்டும் என்பதை முதலில் நீங்கள் தெரிந்து


கிஷோர் சிதம்பரம்

 

 சிதம்பரம் இவர் கோயம்புததூரை சேர்ந்தவர் .கல்லூரியில் இவருடன் படித்த நஜிம என்ற முஸ்லிம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். பெற்றோர்களின் எதிர்ப்பால் இருவரும் விட்டை விட்டு வெளியேறுகின்றனர் .கல்லூரியில் இவர் படிக்கும் போதே மென்பொருள் ஒன்றை உருவாக்கி தங்க பதக்கம் வென்றவர். அதனால் இவருக்கு தான் படித்த படிப்பு உறுதுணையாக இருந்தது. தன் கல்லூரி தோழி கோகிலாவின் தந்தையின் உதவியுடன் லண்டன் செல்கின்றனர். அங்கு இவரின் மென்பொருள் அந்நாட்டு அரங்கம் அங்கீகரித்தது பல்லாயிரம் கோடிக்கு லண்டன்


துன்பம் கொஞ்ச காலம்தான்

 

 ‘ஏய்” மூதேவி எங்கே போய் தொலைஞ்சே ! கர்ண கடூர குரல் அங்கு வா¢சையாய் அமைக்கப்பட்டுள்ள அனைத்து வீடுகளுக்குள்ளும் கேட்டது. பக்கத்து வீட்டு ஜெயா தன் கணவனிடம் போச்சு காலையிலேயே ஆரம்பிச்சாச்சு இவரோட அட்டகாசத்தை, பாவம் அந்தக்கா என்னதான் பண்ணும் இவர் பண்ற தொல்லையை எப்படித்தான் சகிச்சுட்டு இருக்கோ! இதற்கு ஜெயாவின் கணவன் பாலாஜி ஒன்றும் சொல்லவில்லை, ஆனால் பெரூமூச்சு விட்டான், அவர்கள் வாழ்ந்த வாழ்வு என்ன? இன்றைய நிலைமை எப்படி மனிதவாழ்க்கையை தலைகீழாய் புரட்டி போட்டுவிடுகிறது.


ஆரம்பம்!

 

 அன்று ஞாயிற்றுக்கிழமை. ராகவனும், பிருந்தாவும் ஹாலில் ஓய்வாக உட்கார்ந்திருந்தார்கள். ராகவனின் வயசான அப்பா சுந்தரம் அன்றைய தினசரி பத்திரிகையில் வந்த பரபரப்பான ஊழல் வழக்கு தொடர்பான செய்திகளில் மூழ்கியிருந்தார். பேரன் செல்வம் அந்த நேரம் ஏதோ வேலையாக ஹாலுக்கு வந்தான். பிருந்தா மகனை கூப்பிட்டுக் கேட்டாள். “ஏண்டா செல்வம்!…இந்த செமஸ்டரில் கணக்கிலே ஏன் உன் மார்க் குறைந்து போச்சு?….” “ அம்மா!..அது தான் எனக்கே தெரியலே!..நல்லாத்தான் செய்திருந்தேன்!….எப்படி குறைந்ததுனே தெரியலை…” “ சரி……போகட்டும்!…..அடுத்த செமஸ்டரிலாவது நீ “மேத்ஸிலே


நான்காம் உலகம்

 

 விடிந்துவிட்டது. எனது மகன்கள் தங்கள் பாடசாலைகளுக்குச் செல்ல ஆயத்தமாகிறார்கள். இன்று நான் காணப்போகும் மீனா என்ற இந்தியப் பெண்மாதிரி,தன்னைச் சுற்றிய உலகைக்;கண்டு பயப்பட்டு அடைந்து கிடக்கும் வயதோ அல்லது பயமோ அவர்களுக்குத் தெரியாது. நான் படுக்கையை விட்டெழும்பாமல்,ஜன்னலால் உலகத்தைப் பார்க்கிறேன். எனது படுக்கையறையை அண்டினாற்போல் ஒரு பிரமாண்டமான மரமிருக்கிறது;ஆங்கில நாட்டு மரங்கள்,செடிகள் பலவற்றிற்கு எனக்குப் பெயர் தெரியாது.இந்தமரத்தின் இலைகள் ஊரிலுள்ள பூவரசு மரஇலைமாதிரியிருக்கின்றன. அந்த மரத்தின் ஒரு கிளையில் ஒரு பெரிய அணில் ஊர்ந்து கொண்டிருக்கிறது. அதைப்