கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: July 2015

20 கதைகள் கிடைத்துள்ளன.

இவனும் ஒரு போராளி

 

 “படக்”கென சத்தம் கேட்டு கீழே குனிந்து பார்த்த பாலு, சே என்று அறுந்து போன செருப்பை உதறினான்.இன்னும் ஒரு மாதம் தாக்கு பிடிக்கும் என நினைத்து இருந்த செருப்பு தன் ஆயுளை முடித்திருந்தது, இன்னொரு காலில் இருந்த செருப்பையும் கழட்டி புதரில் எறிந்தான்.இனி ஒரு கிலோ மீட்டர் நடந்து அன்னுர் பேருந்து நிலையத்தை அடைய வேண்டும். நடக்க ஆரம்பித்தான். வெறும் காலில் நடப்பது ஆரம்பத்தில் மிகுந்த வேதனை கொடுத்தாலும்  நடக்க நடக்க பழக்கமானது.இவன் பேருந்து நிலையம் அருகில்


தோற்றுப் போகக்‍ கற்றுக்‍ கொள்வோம்

 

 வாரத்திற்கு 10 நாட்கள் சண்டையிட்டு நிம்மதியை கெடுக்‍க வேண்டும் என்பதுதான் அவளின் எண்ணம், லட்சியம், கொள்கை, கோட்பாடு, நியாயம், தர்மம், நீதிநெறி, நம்பிக்‍கை, எல்லாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக வாரத்திற்கு 7 நாட்கள் மட்டுமே நிர்ணயிக்‍கப்பட்டு விட்டது. சண்டை என்று வந்துவிட்டால் “சிவகங்கைச் சீமையிலே படத்தில் வரும் எஸ்.எஸ்.ஆரைப் போல் பொங்கி குமுறுகிறாள். சுமார் 40 பக்‍க வசனங்களை மனப்பாடம் செய்யாமல் முன் தயாரிப்பின்றி, தங்குதடையின்றி சரளமாக மடைதிறந்த வெள்ளம்போல் கொட்டித் தீர்க்‍கின்றாள். அவள் ஆவேசமாக சண்டையிடுகையில் அவளது


ஊற்று

 

 “தாத்தா, நான் இங்க நட்டிருந்த செடிய எங்க தாத்தா?– பேரன் விதுரின் பதட்டமான சத்தம் கேட்டு அதிர்ந்தார் நாகசுந்தரம். எதைப் பார்த்துவிடக் கூடாது என்று மனதில் நினைத்திருந்தாரோ அதை அவன் பார்த்து, கேட்டும் விட்டான். மறக்காமல் அங்கே போய் நின்றிருக்கிறானே? அதையே நினைத்துக் கொண்டு வந்திருக்குமோ பிள்ளை? அடப் பாவமே…! மனசு பதறியது இவருக்கு. தாத்தா…தாத்தா…நில்லாத குரலுக்குச் சொந்தக்காரராய், கொல்லைப் புறம் பார்த்து ஓட்டமெடுத்தார் நாகு. “இதோ வந்துட்டேன்டா குழந்தே…..” பார்த்துப் போங்கோ…வழுக்கிடப் போறது….என்றாள் மீனாட்சி. எந்தப்


சக்சஸ்

 

 கோவை ரயில்வே ஜங்ஷனுக்கு எதிரில் சாந்தி தியேட்டருக்கு பக்கத்து சந்து தான் கோபாலபுரம். அங்கு இருக்கும் இரண்டு தெருக்கள் முழுவதும் திரைப் பட விநியோகஸ்தர்கள் தான்! அன்று காலை ஒன்பது மணிக்கு ‘ஆத்தா கிரியேஷன்’ அலுவலகத்தில் ஒரே சத்தம்! மானேஜர் தன் உதவியாளரை திட்டிக் கொண்டிருந்தார். “உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? இங்கே ராத்திரி நீ இருந்து என்ன கிழிக்கிறே?…..வால் போஸ்ட் ஒட்டற பசங்களுக்கு என்ன தெரியும்?……நீ சொன்ன கட்டை எடுத்திட்டுப் போய் விடிய விடிய ஒட்டிட்டு


வாட்ஸ் அப்பில் (லாக் அப்பில்) ராஜாராமன்

 

 ராஜாராமன் அம்மாஞ்சி என்று நினைத்தால் அது உங்கள் தப்பு. டிரைவிங் லைசென்ஸ் வாங்க எட்டு போட வேண்டும் என்று பாழாய்ப்போன அந்த RTO சொல்ல ஆரம்பித்தது வினை… “எட்டு தலை கீழாய்ப்போடுவேன்..”. என்றான். நம்ம ஆள் “எட்டை எப்படிப் போட்டாலும் எனக்கு ஒன்று தான்” என்று RTO சொல்லி விட்டான். பிடித்தது சனியன்… எட்டு எப்படி ஒன்றாகும் என்பது ராஜாராமன் கேள்வி. சரி அடுத்து ஒற்றைச் சக்கரத்தில் இவன் எட்டு போட அது எட்டு இல்லை… நாலு