கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: March 4, 2015

9 கதைகள் கிடைத்துள்ளன.

அவளுக்கு ஒரு கடிதம்

 

 அன்று காதலர் தினம். காலேஜ் இளசுகள் மனதிலே இருக்கும் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் நன்நாள். சுரேஷ_ம் இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தான். எப்படியாவது அவளிடம் அந்த வேலன்டைன் கார்ட்டைக் கொடுத்து விடவேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான். அவனது நண்பர்கள் நேற்று அவனிடம் வேடிக்கையாகச் சொன்னது ஞாபகம் வந்தது. ‘மச்சி…….இலவு காத்த கிளி ஆகிவிடாதே!……..நீ தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் வேறு யாராவது கொத்திக் கொண்டு போகத் தயாரா இருப்பாங்க…..நாளைக்குக் காதலர் தினம். சந்தர்ப்பத்தை நழுவவிடாதே! மனதைத் திறந்து அவளிடம் பயப்படாமல்


தாயை போல பிள்ள‌ை‌

 

 நம் அனைவருக்கும் ப‌ழயை நினனவுகள் எப்‌போதாவது வந்து கொண்டுதானிருக்கும். ‌ஆனால் எனக்‌‌கோ ஒவ்வொரு நாளும் வருகிறது ‌அதற்கு காரணம் எனது ‌அருமை மகள் ரித்திவிகா. என் பள்ளிப்பருவத்தில் நடந்த ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிரும்புகி‌றேன். ‌‌வேறு வழி ஆரம்பித்துவிட்டேன் தொடரத்தான் வேண்டும். நான் மூன்றாம் வகுப்புப்படிக்கும் போதே எப்படி‌யோ பார்பி பொம்மைப்பற்றி அறிந்துகொண்டேன்!!!சத்தியமாக நம்புங்கள். எப்படி தெரியும் என்பதை ‌வேறு கதையாக சொல்கிறேன். என் அப்பாவிடம் பார்பி பொம்மை கேட்டு அடம்பிடித்தேன், நாங்க எல்லாம் அப்பவே அப்பிடி.


நியாயம்!

 

 படிக்காதவங்க கூட இப்ப ஏ.டி.எம். மிஷினைப் பயன் படுத்தறாங்க! உள்ளே போன ஆசாமி வெளியே வர ரொம்ப நேரமாச்சு! வெளியே காத்திருந்தேன். சிறிது நேரத்தில் அந்த ஆசாமி தேள் கொட்டியது போல் பரபரப்பாக வெளியே வந்தார். “என்னாச்சு?…எதற்கு இந்தப் பதட்டம்?” என்று கேட்டேன். “சார்!…என் கார்டை உள்ளே செருகினேன்…அது உள்ளே போய் விட்டது! காத்திருந்து பார்த்தேன்…கார்டு வெளியே வரலை!….” “நீங்க பணம் எடுத்துக் கொண்டீர்களா?…” “இல்லே சார்!…கார்டே இன்னும் வெளியே வரலை….அப்புறம் எப்படி சார் பணம் எடுப்பது?..”


55 வார்த்தைகள் கொண்ட சிறுகதை பயணம்

 

 குழதைகளின் அறிவுரை அது ஒரு மழைக்காலம். ஜொவென மழை, தெருவோரப் பிள்ளைகளின் குதுக்குலம் ஆடையில்லாமல்.. குடைப் பிடித்துப் போன பெரியவர் சொன்னார். “ஏய் பசங்களா… மழையில் நனையாதிங்க சளிப்பிடிக்க போகுது” “ம்ம்…பிடிக்கட்டும். இந்த மழை இப்ப போனா வராது. உங்க குடையில் பெரிய ஓட்டை இருக்கு அதைப்பார்த்துப் பிடிங்க” என்றதுங்க வாண்டுகள். பெரியவர், குழந்தைகளின் பேச்சை ரசித்து, யோசித்தார். இப்போது மழையின் வேகம் அதிகமானது. குடை முன்பைவிட அதிகமாகவே ஒழிகியது. குடையை விலக்கிய பெரியவர், குழந்தைகளுடன் சேர்ந்துக்


கடைசி இரவு

 

 கூர்மையான விசில் சப்தம் மீண்டும் காதுகளை மோதியது. அதிர்ந்து விழிக்கச் செய்த ஒலி திடுக்கிட்டு எழசெய்து சினத்தைக் கிளறிக்கொடிருந்தது. அண்டை வீட்டு படுக்கையறை வெளிச்சம் கண்ணாடி சன்னலையும் , திரையின் சிறிய திறப்பையும் தேடி ஊடுருவி உள்ளே நுழைந்திருந்தது. கண்கள் மீண்டும் மூடித், துயிலுக்குள் ஒன்றிணைவதென்பது சிரமமான காரியம். தூக்கத்தைக் கலைத்து, மூளையின் இயக்கத்தை முடுக்கிவிட்ட சப்தம், இமைகளை மூட வெகு நேரத்தை எடுத்துக்கொள்ளும். பக்கவாட்டிலும் அந்நாந்தும், குப்புறப் புரண்டும் , தலையணையை புரட்டியும், மடித்தும் தலையைப்


காகிதகாதல்

 

 சென்னை பல முகங்கள் கொண்ட ஒரு மாநகரம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஓன்றே…..அழகும் அசிங்கமும் நிறைந்த ஒரு இடமும் சென்னைதான்….பகல் முழுக்க கல் சுமந்து ….இரவில் கஞ்சி குடித்து …தெருவில் உறங்கும் மனிதர்கள் மட்டுமல்ல …..பகல் முழுக்க கம்பூயூட்டர் தட்டி இரவில் போதையில் மிதக்கும் மனிதர்களும் இங்கேதான்….. சமூக அவலங்களை பேசும் அளவிற்கு நான் ஒன்றும் பெரிய மனிதன் அல்ல….நான் மட்டும் பார்த்த ஒரு அழகிய காதலை உங்களுக்கும் காட்ட விரும்புகிறேன்….. ரமேஷ் ..சுருட்டை என்று இவனை


இருள் புன்னகை

 

 அவன் தளத்துக்கு அடுத்த அரங்கு வாசலிலும், தம்பி தளத்துக் கதவின் பின்னாலும் நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். மாமா கூடை நாற்காலியில் அமர்ந்திருந்தார். அத்தைக்கு அவருக்குப் பக்கத்திலேயே பாய் விரிக்கப்பட்டிருந்தது. வளவு இருட்டாக இருந்தது.தளத்துக்குள் குண்டு பல்பிலிருந்து மெலிதாக வெளிச்சம். பங்களூரிலிருந்து மாமாவும் அத்தையும் வந்துவிட்டதாக மூன்று நாட்களுக்கு முன்பே தகவல் வந்து விட்டது. மாமா பங்களூரில் எதோ தொழில் செய்து நிறைய சம்பாதிப்பவர்.வருடத்திற்க்கு ஒருமுறை வந்து சம்பிரதாயமாக எல்லோரையும் பார்த்துவிட்டுப் போவார். அதில் அவருக்கு அப்படியொரு மகிழ்ச்சி.பாதிநாள்


அபேதம்

 

 எனக்கு எப்போதாவது என் நாளாந்தக் கிரியைகளிலிருந்து ஒரு மாற்றமோ அல்லது சிறுகளிப்போ வேண்டும்போலிருந்தால் தமிழில் தொடர்பாடல் வசதியுள்ள (சாட்) ஏதாவது வலைப்பக்கத்துக்குப்போய் எவரையாவது வம்புக்கிழுப்பேன். நிஜப்பெயரில் நுழைந்து மணிக்கணக்கில் காத்திருந்தாலும் எவருமே கண்டு கொள்ளமாட்டார்கள். சும்மா ஒரு ’ஹை’யோடு சரி. ஒரு அனுஷாவோ ஆஷாவோ என்று பெயரை வைத்துக்கொண்டால் காத்துக் கிடந்ததுபோல் ஒரு பத்துப்பேராவது ஒரே சமயத்தில் குதித்து வந்து குசலம் விசாரித்துச் செல்லம்பொழிய ஆரம்பித்துவிடுவார்கள். வயதுபேதமின்றி அனைத்து ஆடவர்களுக்கும் ஸ்திரீகளுடன் வார்த்தைச் சல்லாபஞ்செய்வதில் அத்தனை ஆனந்தம்.


தமிழ் மொழிநண்பர்கள்

 

 மருதமலை! கற்பூர ஆரத்தி முருகனுக்கு காட்டப்பட்டது, முருகன் முகம் என்னை பார்த்து புன்புறுவல் காட்டுவது போல் எனக்கு தோன்றியது, கண் மூடி ஒரு நிமிடம் அமைதியாக நின்றேன், பக்கத்திலிருந்த என் மனைவி கற்பூர ஆரத்தியை எடுக்க என்னை தட்டியவுடன் நான் கண்விழித்து கற்பூர ஆரத்தியை எடுத்து கண்ணில் ஒற்றினேன். அரசியலையும் விட்டாயிற்று அடுத்து என்ன வேலை கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறாய் இறைவா? மனதுக்குள் வேண்டிக்கொண்டு மனைவியுடன் வெளியே வந்தேன். செல்போன் கிண்கிணித்தது, பேசியவள் என் மகள்