Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 21, 2015

10 கதைகள் கிடைத்துள்ளன.

என் பொண்டாட்டி ரொம்ம்ம்ம்ப நல்லவ!

 

 மிகச் சாதாரணமான விஷயம் தான். அது இவ்வளவு பெரிய சண்டையாக மாறி எனக்கும் என் மனைவிக்கும் மத்தியில் இடைவெளி ஏற்படுத்தும் என்று நினைக்கவில்லை. எங்களுக்குக் கல்யாணமாகி மூன்று மாதங்கள் ஆகிறது. டிகிரி படித்து முடித்த ப்ரியா, கல்யாணம் முடிந்த கையோடு, அண்ணாநகரில் நான் புதிதாக வாங்கியிருந்த பிளாட்டுக்கு எங்களுடன் வந்து விட்டாள். பெற்றோர் பார்த்து நடத்தி வைத்த கல்யாணம் தான். வெளியில் வேலைக்குப் போக விருப்பமில்லாததால் வீட்டு வேலைகளை எல்லாம் தானே எடுத்துப் போட்டுக்கொண்டு செய்தாள். வந்த


இடை

 

 அது பெர்லினில் இருபத்துநான்கு மணிநேரமும் திறந்திருக்கும் ஒரு றெஸ்ரோறன்ட். கோப்பியில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட வகைகள். நம் தேர்வுப்படி நொடியில் அரைத்து கமகமக்கப்போட்டுத் தருவார்கள். வீதியில் ஐநூறு மீட்டருக்கு மிதந்துவரும் கோப்பியின் மணம் ஷேர்ட்டில் பிடித்து ஆளைஉள்ளே இழுக்கும். அது இருக்கும் வழியாக நானும் வரவேண்டியிருக்கவே மேலே கடந்து போகமுடியாதுள்ளே இழுபட நேர்ந்தது. கிறில் பண்ணிய ~றிப்பும், தொட்டுக்கொள்ளக் காரமான பாபெகியூ ஸாசும், கோப்பியும் வாங்கிக்கொண்டு ஒரு மூலையில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். நாலு இளம்பெண்கள் ஏதோ இடையைக்காட்டுவதற்கான


முன்னேற்றம்

 

 அது ஒரு அரசு பள்ளி. மாணவர்களின் படிப்பு சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. அந்த பகுதியை சுற்றியுள்ள பல ஊர் மாணவர்களுக்கு அது தான் ஒரே பள்ளி. பெருமாளும், முருகனும் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர் . அவர்களுக்கு அன்று அது கடைசி வகுப்பு. விளையாட்டு வகுப்பு. இருவர் மட்டும் தனியாக விளையாடி கொண்டிருந்தனர். மற்ற மாணவர்கள் அனைவரும் கை பந்து விளையாடி கொண்டிருந்தனர். முருகன் சற்று உயரம் குறைவு. பெருமாள் நல்ல உயரம். கைபந்து விளையாட இரு அணியாக பிரித்தபோது பெருமாளை


தேன் மொழி அல்லது இளம் பரிதி

 

 இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் இளம் பரிதியும் தேன் மொழியும் செங்கந்தன் கந்தையின் (செங்கடகல) அடுத்தடுத்த வீடுகளில் வாழ்ந்து வந்தனர். இவர்கள் அடுத்தடுத்த வீடுகளில் வாழ்ந்து வந்தாலும் இரண்டு வீடுகளும் உயர்ந்த கெட்டியான செங்கற் சுவர்களால் சுற்றுச் சுவர் கட்டி பிரிக்கப்பட்டிருந்தன. இளம்பரிதி உலகெங்கும் வியக்கும் கட்டிளங்காளையாவான். தேன் மொழி அழகுக்கே அரசியான யுவதியாவாள். அவர்கள் இருவரும் அயல் அயல் வீடுகளில் வசித்த படியால் ஒருவரை ஒருவர் நன்கு தெரிந்து கொண்டிருந்தனர். எனவே விரைவிலேயே காதல் வசப்பட்டு


ஸ்டீவன் & சமந்தா

 

 பார்ட்டி டவுன் அங்கு கிடைக்காத மதுவே இல்லை, உலக நாடுகளின் அனைத்து வகையினரையும் அங்கு பார்க்க முடியும். அது மட்டுமின்றி விலைமாதுக்களும், கஞ்சாக்களும் எழிமையாக கிடைக்கும். அந்த டவுன் காதலர்களின் நகரமாகவும் அழைக்கபடுகிறது. நகரத்தில் இருக்கும் பெரும்பாலான மோட்டல்களிலும், பார்களிலும் ஒரு பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும். காதலர்களின் நகரம் என்று அழைக்கப்படுவதற்கு இந்த பாடலை பாடிய காதலர்களும் ஒரு முக்கிய காரணம். அவர்கள் பாடல் அந்த நகரத்தில் இருந்த அனைவருக்கும் காதல் தாக்கத்தை எற்படுத்தியது அளவற்றது. அதைகேட்கும்போதல்லாம்


வேழம்

 

 காலை என்பது மலைகளுக்கே உரியது.கோடையிலும் மெல்லிய குளிர் பரவுகிறது.நேற்றிரவு பெய்த கோடை மழை புற்கள் செடிகள் முட்கள் என எல்லாவற்றிலும் பனித்துளிகள் போல ஒளிர்கிறது. ரோஜாவும்,செவ்வந்தியும், யானைக்காது போன்ற சேம்பிலைகளும் நீர்த்துளிகளுடன் காலை சூரியனில் மின்னுகின்றன. கையில் தேநீருடன் நின்றேன்.அவள் வருமுன்னே என்னால் உணரமுடிகிறது.பூவும்,பௌடரும் கலந்த மணம்.கணேஷ்ஷ்ஷ் மெல்லிய சீறலாய் அழைக்கிறாள்.நான் திரும்பாமலே ம்ம்.. என்கிறேன்.நீ ஸ்கூலுக்கு போறதுக்கு முன்ன எனக்கு புக் தந்துட்டு போ. ,…. நைட் ரொம்ப நேரம் லைட் எரிஞ்சிச்சு தூக்கம் வர்லயா


அழிக்கமுடியாதவன்

 

 இரவு எட்டு மணி, கூட்ட நெரிசல்மிக்க மதுரை போத்திஸ் கடையில் இருந்து வெளியே வருகிறான் கார்த்திக்(இவன் ஹீரோ இல்லீங்க). மூத்த மகள் ரம்யாவுக்கு கார் வடிவில் ஆன உண்டியலை இலவசமாக வாங்குவதற்காகவே ரெண்டாயிரம் ரூபாய்க்கு சுடிதார் எடுத்திருந்தான். அந்த உண்டியலை வெளியே தனியாக வாங்கிருந்தால் கூட ஐம்பது ரூபாயில் முடிந்திருக்கும். இலவசம் என்ற சொல்லை கேட்டாலே இங்கு சிலர் மனதில் சந்தோஷம் வந்துவிடும். இளைய மகள் நித்யாவுக்கு தனக்கு உண்டியல் கிடைக்காத வருத்தம் இருந்தாலும், புது சுடிதார்


மாற்ற முடியாதவை

 

 “நீங்க ஏன் கல்யாணமே பண்ணிக்கலே?” கேள்வி அந்தரங்கமானதாக இருந்தாலும், கேட்டவன் ஓரளவு தனக்குப் பரிச்சயமானவனாக இருந்ததால், பாமா அதை தப்பாக எடுத்துக் கொள்ளவில்லை. அதோடு, அவள் இன்னும் சின்னப்பெண் அல்லவே, கல்யாணப் பேச்சை எடுத்ததும் நாணிக் கோண! தலை நரையை மறைக்க சாயம் பூச ஆரம்பித்து நாலைந்து வருடங்கள் இருக்காது? “என்னமோ, எங்கப்பாவுக்குத் தன் பெண்ணை கல்யாணம் செய்து குடுக்கணும்னு தோணல!” என்றாள், பட்டும் படாததுமாக. பத்மநாதனுக்குப் பரிதாபமாக இருந்தது. ஏதேனும் வரதட்சணைப் பிரச்னையாக இருக்கலாம். பெண்ணாகப்


உண்மை சுடும்

 

 மஞ்சுவோடு பல காலமாக மிகவும் உறவு நெருக்கத்துடன் மனம் திறந்து பேசிப் பழகியிருப்பது போல், அவள் சிறிதும் எதிர்பாராத விதமாகத் தொலைபேசியில், தனபாலன் சரளமாகக் குரலை உயர்த்திப் பேசுவதைக் கேட்டவாறே அவள் ஒன்றும் பேசத் தோன்றாமல் வாய் அடைத்துப் போய் மெளனமாக நின்றிருந்தாள். அவர் முகம் கூடச் சரியாக அவளுக்கு ஞாபகமில்லை. .நெருங்கிய உறவாக இருந்தாலும் அவள் மீது உண்டான புரிந்துணர்வற்ற பேதமைப் போக்கினால், அவர் மட்டுமல்ல அவள் கணவன் சார்பான எல்லா உறவுகளுமே இருள் கவிந்து


அப்பத்தா

 

 டெல்லி மத்திய அலுவலகம், தன் தந்தை அனுப்பிய மின்னஞ்சலை பார்த்துக்கொண்டிருந்தான்.பாலு என்கிற பாலசுப்ரமணியன், தன் தந்தை அனுப்பிய எழுத்து நடை அழகான ஆங்கிலத்தில் இருந்தது.ஆனால் தகவல் தன் மனதை பாதிக்கக்கூடியதாக இருந்தது. மனம் நிலைகொள்ளாமல் தவித்தது.அவரை பெற்றவளை நல்ல வசதியான காப்பகத்தில் சேர்த்திருப்பதாக பெருமையுடன் எழுதியிருந்தார். அப்பா உங்களுக்கு தெரியுமா? நான் உங்களிடம் வளர்ந்ததை விட உங்களை பெற்ற அப்பாருவிடமும் அப்பத்தாவிடமும் தான் வளர்ந்தேன், அவர்களின் அரவணைப்பும்,ஆசியும்,நான் பத்தாவது ப்டிக்கும் வரை கிடைத்துக்கொண்டே இருந்தது. என்னுடைய முரட்டுத்தனத்துக்கு,தன்