கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: December 2014

37 கதைகள் கிடைத்துள்ளன.

உறவுகள் தொடர்கதை

 

 அம்மா தனித்துப் போயிருந்தாள். இடம் பெயர்ந்தபோது பக்கத்து வீட்டு பரிமளம் அன்ரியுடன்தான் அம்மாவும் சென்றதாகச் சொன்னார்கள். பரிமளம் அன்ரிக்கு அம்மா மீது ஒரு வகை பாசம் இருந்தது. அவர்கள் கடைசியாகச் சாவகச்சேரியில் தங்கியிருந்ததாக எனக்குத் தகவல் கிடைத்தது. அப்படி என்றால் சாவகச்சேரி வரைக்கும் அம்மா நடந்துதான் போயிருப்பாளா? விமானக் குண்டு வீச்சுஇ ஷெல் தாக்குதல் என்று தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்த போது தான் அம்மா காணாமல் போயிருந்தாள். உறவுகளைப் பிரிந்து திக்குத் திக்காய் எல்லோரும் ஓடிப்போயிருந்தனர். தெரிந்த


சுட்டவடை

 

 வாங்கியபிறகுதான்தெரிந்தது,இவன்கடந்த ஓரிருகடைகளில் வடைஇருந்தது என/இதற்காய்புது பஸ்டாண்ட வரை போயிருக்க வேண்டாம். சிவகாசி ரோட்டின் நீட்சியில் பாலம் கடந்து அமைந்திருக்கிற புது பஸ்டாண்டிற்கு எதிர்தாற் போல் இருக்கிற கடையில்தான் வடை வாங்கினான். இப்படிஒருகடைஇங்கு இருப்பதாய் இத்தனை நாட்களாய்தெரியாது இவனுக் கு, நண்பர்மூலமாகத்தான் அறிமுகம்,என்றோ எப்பொழுதோ அந்தப் பக்கமாய் போய் வந்த பொழுது என்பதாய்நினைவு.இருசக்கரவாகனத்தில் போய்வந்தது மூளை அலுப்பும் உடல் அலுப்புமாய் ஒன்று சேர்ந்து கொள்ள ஒருஇளம் டீ சாப்பிட்டால்நன்றாகஇருக்கும்,கூடவேவடை,பிஸ்கட் அல்லதுவாழைப் பழம் என ஏதாவது சாப்பிட்டால் இன்னும் கொஞ்சம்நன்றாக


ஊழி

 

 கி.பி.2040. உலகளவில் உள்ள சுற்றுச் சூழல் விஞ்ஞானிகளும்,உலகின் எல்லா நாட்டு பிரதிநிதிகளும் அந்த அரங்கத்தில் நிறைந்திருந்தனர். இதுஅக்டோபர் மாதக் கடைசி. அடைமழையில் எங்கும் சேறும்சகதியுமாய் இருக்கவேண்டிய மாதம்., ஆனால் இந்தமாலைப் பொழுதில் கூட வெப்பம் மனிதர்களை வறுத்தெடுக்கிறது.. நகரத்தைத் தாண்டி புற நகர் பகுதியில் கூட எங்கெங்கும்பொட்டல் வெளிகள். தென்னை பனை ,பாக்கு போன்ற சல்லிவேர் மரங்கள்உலர்ந்து பாடம் பண்ணிய சவம் போல அசையாமல் நிற்கின்றன.. இந்த மாலை நேரத்திலும் வெப்பம்—120 டிகிரிF என்றால்,.நடுப்பகல் வேதனையைப்பற்றி சொல்ல


யோர்லாண்ட்

 

 யோர்லாண்ட் கடலும் காடும் கொண்ட தீவு. சுற்றி உள்ள சிறு தீவுகளை காட்டிலும் யோர்லாண்ட்டின் நில பரப்பு சற்று அதிகம் எனவே இது மக்கள் வசிக்கும் பகுதியாக அமைந்து, நாகரிக வளர்ச்சியில் பேச்சுமுறை அமைந்த கட்டத்திற்கு வந்திருந்தது. உணவிற்கு நெருப்பை பயன்படுத்தி கொண்டனர். பெண்களும் ஆண்களும் தனி தனி நிலபரப்பில் மரத்தில் ஆன கூடாரம் அமைத்தும், வேட்டையாடிய விலங்குகளின் பெரும்பான்மை குரங்குகளின் தோலில் ஆடை தைத்தும் வாழ்ந்து வந்த நேரத்தில் இப்போது பவிங்க்ஸ், மீனை உண்ண யோர்லாண்டின்


இளையராஜா vs ஏ.ஆர். ரஹ்மான்

 

 இன்று அவர் கூறினார். “சார்…. இளையராஜா ஐயா மாதிரியான இசை மேதைகள் இசையை உருவாக்‍குறாங்களே அதுல சந்தோஷம் அதிகமாக…. இல்லை அதை உருகி உருகி என்னை மாதிரி ஆட்கள் ரசிச்சு கேட்கிறாங்களே அதுல சந்தோஷம் அதிகமா??… எனக்‍கு பகீர் என்றது. “உங்களுக்‍கு ஏழரை சனி பார்த்து நடந்து கொள்ளுங்கள்” என்று கூறிய ஜோசியக்‍காரனை இழிவாக பேசி காசு கொடுக்‍காமல் வந்தது திடீரென எனக்‍கு நியாபகத்திற்கு வந்தது. அவர் மீண்டும் அதே கேள்வியை முகத்தில் ரசனை மாறாமல் கேட்டார்…

Sirukathaigal

FREE
VIEW