கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: December 21, 2014

7 கதைகள் கிடைத்துள்ளன.

வலியில்லாத காதல் இல்லை!

 

 இன்றைய அலுவலக வேலைகள் மூன்று மணிக்கே முடிந்துவிட்டது… வழக்கமாக ஆறை தாண்டியும் ஜவ்வாக இழுக்கும் பணிகள், இவ்வளவு விரைவாக முடிவது எப்போதாவது நிகழும் ‘மெடிக்கல் மிராக்கில்’கள்தான்… பசி வயிற்றை பிடுங்கினாலும், கேண்டின் பக்கம் செல்ல பிடிக்கவில்லை… ஈக்கள் குடித்து மீந்துபோன காபியை பேதம் பார்க்காமல் குடிக்க மனம் ஒப்பவில்லை… எப்படியும் நான்கு மணிக்கு வீட்டிற்கு சென்றுவிடலாம், அம்மா கையால் காபியை ஹாயாக சோபாவில் அமர்ந்தபடி ரசித்துக்குடிக்கலாம்… 3.10க்கு வாகன நிறுத்துமிடத்தை அடைந்துவிட்டேன்… எப்போதும் பாரதிராஜா படத்து நாயகியைப்போல


மனித நேயம்

 

 வேதனையாக இருந்தது எனக்கு சவாரியும் ஒன்றும் கிடைக்கவில்லை. கதை புத்தகங்கள் ஆட்டோவிலேய வைத்திருப்பேன், அதை படிக்க கூட மனம் வரவில்லை, பயம்தான் அதிகமாக இருந்தது. இந்த பிரச்சனை எனக்கு தேவையில்லாதது. ஆனால் நியாயம் என்று ஒன்று இருக்கிறதே, இருந்தாலும் நான் அதிகமாக பேசிவிட்டேனோ என்று தோன்றுகிறது. அந்த இடத்தில் வேறு யாராக இருந்தாலும் அப்படித்தான் பேசியிருப்பார்கள். மேலும் என்னுடைய ஆட்டோவிற்குத்தான் சேதம் அதிகம். எப்படியும் தொட்டால் செலவு 1000 ரூபாயுக்கு மேல் ஆகும், மாத கடைசி வேறு,


நசீர் அண்ணன்

 

 ‘கும்கி’ படம் பார்த்தபோது எனக்கு நசீர் அண்ணன் நினைவுதான் வந்தது. ‘கும்கி’ என்று இல்லை, பொதுவாகவே யானைகளைப் பற்றிப் பேச்சு வரும்போதும் யானைகளைப் பார்க்கின்றபோதும் நசீர் அண்ணனின் உருவம்தான் மனச் சித்திரமாக வந்துபோகும். அண்ணனுக்கும் யானையைப் போலவே சின்னக் கண்கள். சென்ற வாரம் அம்மாவிடம் பேசும்போது நசீர் அண்ணன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். ரொம்ப நேரம் மனசு அடைத்துக்கிடந்தது. யானை ஒன்று இறந்து வீழ்ந்துகிடப்பதான மனச் சித்திரம் அப்போது வந்துபோனது. யானை இறந்து கிடப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அது


துணை

 

 ”நீ கவிதை எழுதுவியா?” – கேள்வியில் கோபம் அதிகமாக இருந்தது. பத்ரியின் கண்கள் சிவந்திருந்தன. அவனைத் தயக்கத்தோடு பார்த்தாள் புவனா. எழுதுவேன் என்று சொன்னால், அடுத்த விநாடி கன்னத்தில் அறை விழலாம். எழுதத் தெரியாது என்றாலும் அடிக்கலாம். அவனுக்குத் தேவை அடிப்பதற்கான ஒரு பதில். ”தெரியாது.” ”அப்புறம் எப்பிடிடீ அவனோட கவிதையை திருத்திக்குடுத்த?”- பேச்சின் நடுவிலேயே கன்னத்தில் ஓங்கி அறைந்தான். ”கவிதையைத் திருத்துற அளவுக்குப் பெரிய கவிதாயினியா நீ?” – இந்த முறை இடுப்பில் உதைத்தான். ”நான்


தாகம்

 

 கட்டிலிலிருந்து சிரமப்பட்டு எழுந்த தாரிணிக்கு தலை கிறு கிறுவென்று சுழன்றது. அப்படியும் தடுமாறிக்கொண்டு எழுந்து நின்றவளால் நிற்க முடியவில்லை. தேகம் முழுவதும் கிடு கிடுவென்று ஆடத்தொடங்கிவிட்டது. அடிவயிற்றில் ஆயிரம் குத்தூசிகளால் துளைப்பது போன்ற வேதனை. தொடைகளிரண்டும் இரும்புக்கம்பியால் சூடிழுத்தாற்போன்று எரி உபாதையில் கனன்று கொண்டிருந்தது. முட்டிக்கால்களிலும் முணுமுணுவென்று இனம் புரியாத ஒருவித வலியென்றால், மார்பகங்களிலும் கூட நெறிகட்டிக்கொண்டாற் போல் வலியில் விம்மியது. தலைவலியும் கட்டியங்கம் கூறுகிறாற்போல் விண் விண்ணென்று தெறிக்கத்தொடங்கியது.. கண்களை அசக்கினாலும் தீப்பறந்தது. உடம்பு முழுவதும்