Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 11, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

என் மகனும் மாப்பிள்ளையும்…!

 

 “டிங் டாங்…. டிங் டாங்…” படித்துக்கொண்டிருந்த நாளிதழை மேசை மீது வைத்துவிட்டு, வேஷ்டியை சரிசெய்துகொண்டு கதவை திறப்பதற்குள் மூன்றாவது முறை அழைப்பு மணி அடித்துவிட்டது… கதவை திறந்தேன்… கையில் கோப்புகள் சிலவற்றுடன், மூடியின்றி திறந்த பேனாவை விரல்களுக்கு நடுவில் சொருகியபடி நின்றிருந்தாள் ஒரு மத்திம வயது பெண்… என்னை பார்த்ததும் சம்பிரதாய சிரிப்பை இறைத்துவிட்டு, பேச்சை தொடங்கினாள்… “வணக்கம் சார்… நான் சென்சஸ் கணக்கு எடுக்க வந்திருக்கேன்… உங்க குடும்பத்த பத்திய டீட்டைல்ஸ் வேணும்!” அவளை உள்ளே


ராதையின் திருமணம்

 

 அன்று நிகழ்ந்த ஒரு கதை . தாமிரபரணி ஆறு எப்பொழுதும் போல தெளிவாக ஓடிக்கொண்டிருந்தது நெல்லையை நெருங்குமுன் கிராமங்களில் அவள் வரும் அமைதியும் அழகும் தனிதான் ! படித்துறையில் யாருமே இல்லை.காலை பதினோரு மணிக்குமேல் ஆட்கள் வருவது குறைவுதான். நெல்லை எக்ஸ்பிரஸ் எட்டரை மணிக்கு வந்து ஆறுமுகம் ஆட்டோவோடு காத்திருந்தால் கூட டவுன் வழியாக கிராமத்திற்குப் போகுமுன் நம்ப அண்ணாச்சி ராமசாமி கபேயில் முறுகலா இரண்டு தோசை நெய் மணக்க சட்னி சாம்பாருடன் சாப்பிட்டால்தான் ஒரு தெம்பு


நுரைகள்

 

 ஏதோ சிறைவாசம் போனமாதிரி ஜந்து வருடங்களை வெளிநாட்டில் தொலைத்துவிட்டு ஊர் வந்த என்னை அந்த சி ரி பி பஸ் விட்டு விட்டு செல்கின்றது. “எப்படியாவது நாட்டுக்குப்போகவேண்டும்”கடைசியாக விமானத்தில் ஏறி சீட்டில் அமரும் வரைஇருந்த அவா ஊரைக்கண்டதும் மேகக் கூட்டத்துள் தொலைந்த நிலவின் கதியாக… சீ ரி பி விட்ட இடத்திலிருந்து ஒரு முக்கால் மைல் சென்றால்.. கடைசியாக வீட்டில் இருந்து வந்த கடிதத்தில்…”வீட்டு வேலைகள் எல்லாம் முடிந்து விட்டது நம்மட வீட்டைப்போல ஒரு வீடு நமது


திரைகடலோடி,..

 

 மின் தூக்கியில் நான்காவது மாடிக்குப் போகும் வழியில், “நா பாஸாயிட்டேன்னு சொல்லிட்டாங்கல்ல. இன்னும் என்ன டெஸ்ட்ன்றீங்க?”, என்று தீவிர முகபாவத்துடன் கேட்ட கமலாவிடம், “இது மெடிகல் டெஸ்ட். நாளைக்கி தான் உனக்கு அப்பாயிண்ட்மெண்ட் கெடச்சிருக்கு”, என்றேன். நாங்கள் நேராக அங்கே போயிருக்க வேண்டியது. அலுவலகத்தில் உதவிக்கு ஆளில்லாமலிருக்கும் நிலையில், வேலையேனும் கொஞ்சம் ஆகட்டும் என்று அவளையும் கூட்டிக் கொண்டு வந்து விட்டேன். “இப்ப இந்த டெஸ்ட்ல பாஸாயிட்டேனில்ல, அப்ப சிங்கப்பூர்ல எந்த வேல வேணாலும் பார்க்கலாமில்ல நானு?”,


புரியாது பூசணிக்கா!

 

 அந்த ஆல்பத்தைப் புரட்டியதும் சந்தோஷம் என்னை தொட்டிலில் இட்டு ஆட்டியது போல் தோன்றியது. சில நினைவுகள் தரும் சந்தோஷத்தை எந்தப் பணத்தாலும் விலைக்கு வாங்கவே முடிவதில்லை. ஆல்பத்தை மூடியதும் ஏனோ எனக்கு இன்றைக்கு இந்திராகாந்தி ஞாபகமாகவே இருந்தது. நான் வால்பாறையில் ஏழாம் வகுப்புப் படிக்கும் போது ஸ்கூல் வானொலி பெட்டியில் இந்திராகாந்தியை சுட்டுவிட்டதாகச் சொன்னதும் பள்ளிக்கு விடுமுறை விட்டார்கள். தெருவெங்கும் அவரை எப்படி சுட்டார்கள், யார் சுட்டார்கள் என்பதை கையில் ரேடியோ பெட்டியை வைத்துக்கொண்டு அதிர்ச்சியுடன் கேட்டுக்


‘பாதாள’ மோகினி

 

 கலைஞன் சிவகுமார் ஒரு சித்திரம் வரைந்தான். அற்புதமான ஓவியம். ஒளியையும் நிழலையும் சேர்த்து, வர்ணத்தையும் வடிவையும் சேர்த்து எழுதிய செளந்தர்யப் பிழம்பான அந்த அழகு ஜோதியிலே தன்னை மறந்து வீற்றிருந்தான் அவன். சிவப்பு ரோஜாவையும் செந்தாமரையயும் மேகப் புரவி மீது பவனிவரும் முழுநிலவையும் அழகின் எல்லை என்று கவிஞர்கள் பாடினார்கள். அவற்றின் மோகனத் தோற்றத்திலே வாழ்வின் திருப்தியைக் கண்டார்கள். சாந்தி எய்தினார்கள்.கலைஞன் சிவகுமார் இதற்கு மாறானவன். கருங்கற் பாறை பிழந்து, வெள்ளியை உருக்கி வார்த்தார்களோ என்னும்படி பாய்ந்துவரும்


அழகிய ஊர் எங்கே?

 

 அன்று மும்பையில் கன மழை. மாலை 6மணி. அலுவலக விஷயமாக மும்பை சென்ற நானும் எனது அலுவலக சீனியர் நண்பரும், இரவு 9:40 க்கு சென்னை செல்லும் விமானத்தை பிடிப்பதற்காக மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்திற்கு டாக்சியில் போய் கொண்டிருந்தோம். பொதுவாக உள்நாட்டு விமான பயணத்திற்கு, ஒரு மணி நேரம் முன்பாக செக்கின் (CHECK-IN) செய்தால் போதுமானதாக இருக்கும். அன்றைக்கு நாள் முழுதும் மழை இருந்ததனால், மும்பை ட்ராஃபிக்கில் மாட்டி, நேரமாகி விடும் என்று சீக்கிரமே


கழுதை சாய்ந்திருக்கும் வீடு

 

 இது ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி. அப்போது எனக்கு 6 அல்லது 7 வயது இருக்கும். மெட்ராஸிலிருந்து 25 மைல் தொலைவிலிருக்கும் திருவள்ளூர் என் தந்தை பிறந்து வளர்ந்த ஊர். அங்கு நடக்கும் ‘குரு பூஜை’யில் கலந்து கொள்ள அம்மாவையும், 2 வயது தம்பியுடன் என்னையும் அப்பா இரயிலில் அழைத்துச் சென்றார். நான் குழந்தையாக இருந்தபோது ஊருக்குக் கூட்டிக்கொண்டு போனார்களாம். எனக்கு அது நினைவில்லை. காலை 7 மணிக்கு இரயில் கிளம்பியது. என் நினைவிற்குத் தெரிந்து


சிதம்பர ரகசியம்

 

 தனக்கும் பிள்ளை, குட்டி என்றிருந்தால், தான் இப்படி ஓயாது மனைவியிடம் `பாட்டு’ கேட்க வேண்டியிருக்காதே என்று ஆயிரத்தோராவது முறையாக சிதம்பரம் தன்னைத்தானே நொந்து கொண்டார். `புத்தகத்தை எடுத்து வெச்சுக்கிட்டு படிங்களேண்டா! எப்போ பாத்தாலும், என்ன விளையாட்டு வேண்டிக்கிடக்கு?’ என்று, எல்லா அம்மாக்களும் தொணதொணப்பதுபோல, தான் பெற்ற செல்வங்களை விரட்டியபடி இருந்திருப்பாள் சிவகாமி. இந்தப் பெண்களுக்கு பொழுது போகத்தான் ஆண்டவன் பிள்ளைகளைக் கொடுக்கிறானோ என்று ஒரு கேள்வி அவர் மனதில் உதித்தது. இதையே கருவாக வைத்து ஒரு கதை


ஒரு முகம், ஒரு பெயர் மற்றும் செல்வி என்றொரு சிநேகிதி..

 

 வெய்யில் ஒன்றும் பெரிதாக இல்லை. ஆனால் இந்த பாழாய்ப்போன புழுக்கம்தான் இது சென்னை என்பதை நினைவுபடுத்திகொண்டே இருக்கிறது.. எதிரில் இருந்த அபார்ட்மெண்ட்டைப் பார்த்தான். விற்பனைக்கு என்பது மாதிரியான போர்டு எதுவும் இல்லை. சொல்லப் போனால் அந்தத் தெருவிலேயே for sale போர்டுபோட்ட அபார்ட்மெண்டுகள் எதுவும் இல்லை. ஆனால் புரோக்கர் இந்த தெருவுக்குதான் வரச்சொல்லியிருந்தான். அழகான தெருவாகத்தான் இருக்கிறது. முக்கு திரும்பும்போது எதிர்த்தாற்போல ஒரு சர்ச் இருக்கிறது. அதிசயமாக தெருவுக்குள் ஒரு முதியோர் இல்லம் தென்பட்டது. தெருவில் இருந்து