கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: June 2014

105 கதைகள் கிடைத்துள்ளன.

தீதும் நன்றும்…

 

 “அம்மா, என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கம்மா” அம்மாவின் காலில் விழுந்தேன். “எழுந்திருப்பா. இதே மாதிரி இன்னும் நிறைய பிறந்த நாள் உனக்கு வரணும். சந்தோஷமா, நிம்மதியா இருக்கணும்” என் தோளை தொட்டு தூக்கினார். எழுந்து பார்த்தபோது அம்மாவின் கண்களில் அன்பு, பாசம் வழிந்து கொண்டிருந்தது. “என்னம்மா, பிறந்த நாள் கிஃப்ட் எதுவும் இல்லையா?” கண்ணடித்தேன். “இருப்பா வர்றேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார். சில நொடிகளில் ஒரு ரூபாய் நோட்டினை எடுத்து வந்து என் கையில் அழுத்திவிட்டு, தலையில்


உயிரின் மதிப்பு

 

 ராம் அவசரமாக வேலைக்கு கிளம்பிக்கொண்டிருந்தான்.மனைவியிடம் “சாதம் கட்டிட்டியா” என்றான். உள்ளிருந்து “ரெடி” என்றாள் அவன் மனைவி. உடனே தன்னுடைய மதிய உணவுப் பையை எடுத்துக்கொண்டு மனைவியிடம் விடை பெற்று கிளம்பினான். மக்களோடு மக்களாக பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தான். அப்பொழுது எதிர்புறத்தில் ஒரு வாலிபன் பார்ப்பதற்கு கல்லூரி செல்லும் மாணவன் போல் இருந்தான்.கைப்பேசியை காதில் வைத்து ஒரு பக்கம் தலை சாய்த்து சிரித்து பேசிக்கொண்டிருந்தான்.இரு பக்கமும் பாராமல் சட்டென்று கைப்பேசியில் பேசிக்கொண்டே அந்த சாலையை கடக்க ஆரம்பித்தான்.


தாவணிக்கனவுகள்

 

 அவள் எப்போதும் தாவணி தான் அணிவாள் 12ம் வகுப்பு படிக்கும் அவள் பள்ளியின் உடையான அந்த பச்சைகலர் தாவணியும் வெள்ளை கலர் ரவிக்கையும் இன்றும் கண்ணை விட்டு அகலவில்லை. நெற்றியில் ஒரு மெல்லிய கோடாக திருநீறும் அதன் கீழ் குங்குமம் ஒரு கோடு போலவும் இரட்டை சடை பின்னி அதில் ஒரு நாள் கனகாம்பரமும், ஒரு நாள் செம்பருத்தியும் அணிந்து வரும் அவள் அழகை காண கோடிக்கண் வேண்டும்.. வெள்ளிக்கிழமைகளில் தலைக்கு குளித்து மல்லிகை பூவும் உடன்


அத்தையின் கதைகள்..!

 

 “ஏய்..,சரசு..மின்னல் வெட்டறாப்புலே இருக்குது..கொடியிலே காயப்போட்ட துணியெல்லாத்தையும் எடு..” சிவகாமிதான் இரைந்தாள்.அவளது கனத்த சரீரம் போலவே சாரீரமும் சற்று கனம்தான். ‘விலுக்’கென்று,அதிர்ந்து நிமிர்ந்த சரசு,கதை கேட்பதற்காக அவளது மடியில் சாய்ந்திருந்த எங்களை, “தள்ளுங்க..தள்ளுங்க..கொஞ்சம் வழி விடுங்க..” என்றபடி,அவசரமாய் கைகளால் விலக்கிவிட்டு,சிறு பெண்போல எழுந்தோடினாள். சரசு அத்தை எங்கள் வீட்டிற்கு வந்தபிறகு,அந்த ஊரிலேயே,எங்கள் வீட்டில் மட்டுமே இருந்த ரேடியோப் பெட்டி மீது எனக்கிருந்த கவர்ச்சி குறைந்துபோனது. காரணம்,அத்தை சொல்லும் கதைகளைப் போல,ரேடியோவில் வரும் நிகழ்ச்சிகளோ,பாட்டுகளோ எனக்குப் பிடிக்கவில்லை. அவ்வப்போது அம்மா


பயம் X 4

 

 “ராதிக்குட்டியை இன்னிக்கு டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போகணும்!” என்றாள் அன்னம், முணுமுணுப்பாக. “இப்பத்தானே போனே?” அலுப்பும் எரிச்சலுமாக வந்தது கேள்வி. பத்தாண்டு மண வாழ்க்கைக்குப் பிறகு தவமிருந்து பெற்ற பெண்! பிறவியிலேயே ஏதோ ரத்தக்கோளாறுடன் பிறந்துவிட்டதே என்ற ஆதங்கம் கருணாகரனுக்கு. ஆனால், சிரிப்பும் விளையாட்டுமாக இருந்த மகளின் துறுதுறுப்பில் எல்லா வருத்தமும் மறைந்து விட்டிருந்தது பெற்றவளிடம். அந்த நிம்மதியைக்கூட நிலைக்கவிடாது, ராதிகாவிடம் பல உபாதைகள் தோன்றியிருந்தன, சமீபத்தில். “ஒடம்பு சுடுதே! இன்னிக்கு வீட்டிலேயே இரு!” என்ற அன்னத்திடம் ராதிகா