கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: June 2014

105 கதைகள் கிடைத்துள்ளன.

ஓங்கிய கை

 

 இடி இடித்தது. இடையறாது பொழிந்தது. சமையல் அறையிலிருந்துதான். தினசரியை முகத்திற்கு நேரே பிடித்துக் கொண்டிருந்தவன், கண்கள் வேலை செய்யும்போது இந்தக் காதுகள் சற்று ஓய்வெடுத்துக்கொண்டால் என்ன என்று யோசித்தான். ஆயிற்று, கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாக இந்த மாதிரி ஏதேதோ பயனற்ற யோசனைகள். ஆனால், தனது பிரச்னைக்கு உருப்படியாக ஒரு தீர்வுகாணத் தெரியவில்லை! `பொண்ணு நம்ப கைலாசத்தைவிட பத்து வயசு பெரியவளா இருக்காளே!” என்று அம்மா முதலில் தயங்கியது இப்போது நினைவுக்கு வந்தது. ஒரு முறை பார்த்தவுடனேயே, வேறு


நந்தாதேவி

 

 என் பெயர் முத்துகிருஷ்ணன். இரு உலகப்போர்களுக்கு இடையே 1925 இல் நான் பிறந்த சமயத்தில் ஸ்ரீமுஷ்ணத்தில் போர் பற்றி யாருக்கும் பெரிய அக்கறை இருக்கவில்லை. பிரிட்டிஷருக்காகப் போரிட ஒவ்வொரு மாதமும் நம்மூர் சிப்பாய்கள் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து பெருங்குழுவாகக் கப்பலேறினர். ஸ்ரீமுஷ்ணத்தைப் பொருத்தவரை போர் என்றால் இதுதான். இதனால் ஐந்து வருடங்களுக்கு முன் நான் மெட்ராஸ் பட்டாலியனில் ரேடியோ ஆப்பரேட்டர் வேலைக்குச் சேர்ந்தபோது, அந்தச் செய்தி ஸ்ரீமுஷ்ணத்தில் எனக்கு ராஜ மரியாதையைத் தந்துவிட்டது. என் ஐந்து வருடப் பயிற்சியில்


முரண்பாடுகளின் அறுவடை

 

 படித்துவிட்டுப் பாதங்கள் தேய்ந்து கொண்டிருந்த, சோம்பலின் முழுச்சுகத்தையும் அனுபவித்துக் கொண்டிருந்த காலமது. வேலை கிடைத்தது. ஒதுக்குப் புறமான சிங்களக் கிராமம் ஒன்று. வெளிச்சத்திலிருந்து இருளிற்குள் போகின்ற பயணம். பயம் கலந்த பயணம். அசைவில்லை. பேச்சில்லை. உணவில்லை. நீரில்லை. செத்த பிணத்தை இருத்திக் கொண்டு போவது போலப் பிரயாணம் இருந்தது. இரவு. நண்பனின் அறையில் – வெறும்தரையில் படுக்கை. சிவா ‘எம்பிலிப்பிட்டியா ‘வில் இருந்தான். ‘சிவா! எவ்வளவு காலம் இஞ்சை வேலை செய்கிறாய் ? நல்ல அறை இல்லை


இது தாண்டா ஆஃபீஸ்!

 

 அந்த மைய அரசு அலுவலகத்துள் வீணா காலடி எடுத்து வைத்த போது சரியாக மணி 8.50. மின் தடங்கலால் மின் தூக்கி (lift) வேலை செய்யவில்லை. எனவே, கால்கள் வலிக்க வலிக்க, அவள் படிகளில் ஏறி இரண்டாம் தளத்தில் இருந்த தனது பிரிவுக்குள் பெருமூச்சுடன் நுழைந்த போது அங்கிருந்த கெடியாரம் 8.54 என்றது. ‘அப்பாடா! என்ன வெய்யில்!’ என்றவாறு அவள் பொத்தென்று தனது இருக்கையில் அமர்ந்து கழுத்தையும் முகத்தையும் துடைத்துக்கொண்ட கணத்தில் ஜெயராமன் பிரிவுக்குள் நுழைந்தான். வீணா


எல்லைச்சாமி

 

 விசுவிசுத்த வேப்ப மரக்காற்று உடம்பை ரம்மியமாய்த் தாலாட்டியது. இருமருங்கிலும் வேப்ப மரங்களும் அதற்கு வாத்திச்சி போல் நடுநாயகமாய் ஆலமரமும், அதன் அடியில் இடுப்பு பெருத்த திடலுமாய், அந்த இடமே அழகாய், களையாய் வரித்திருந்தது. விசுவிசுத்த வேப்ப மரக்காற்று உடம்பை ரம்மியமாய்த் தாலாட்டியது. இருமருங்கிலும் வேப்ப மரங்களும் அதற்கு வாத்திச்சி போல் நடுநாயகமாய் ஆலமரமும், அதன் அடியில் இடுப்பு பெருத்த திடலுமாய், அந்த இடமே அழகாய், களையாய் வரித்திருந்தது. ஆலமரத்து அத்தாச்சியின் சடையைப் பற்றிக் கொண்டு பொடிசுகள் ஊஞ்சலாட,