கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: June 2014

105 கதைகள் கிடைத்துள்ளன.

கோயில் பொம்மைக்கு ஒரு மொழம் பூ

 

 வைப்பாரறும் கிருஷ்ணாறும் ஒண்ணா சேர்ந்து ஓடுற ஆத்துக்கு நடுவுல உள்ளது தான் இருக்கன்குடி மாரியம்மன் கோவில். மேற்க மேற்கு தொடர்ச்ச்சி மலைப் பக்கம் நல்ல மழை பெஞ்சா மட்டும் தான் இங்க ஆத்துல கொஞ்சமாவது தண்ணிய பாக்கலாம்.இப்போ ஆத்துல துளியும் தண்ணி இல்ல ஆத்துல அங்கங்க உள்ள ஆள்துழ கிணத்துல வர்ற பம்புசெட்டு தண்ணியிலதான் அந்த ஊர் சனமும் கோவிலுக்கு வர்றவங்கலும் குத்தால அருவியில குளிக்கிறது போல குளிச்சிக்கிட்டு வர்றாங்க. கோவிலோட பரப்பளவு ரொம்ப விரிஞ்சி கெடக்கும்.


முகநூல் மாப்பிள்ளை…

வணக்கம் நான் நந்தினி நான் பொறியியல் பட்டதாரி எனக்கு பொழுது போக்கு எல்லோரையும் போல மூஞ்சிபுத்தகம் தான், வேற என்ன, எனக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்க பட் யாரையும் நான் நேரில் பார்த்ததில்லை எனது போட்டோவையும் அனுப்பமாட்டேன் பசங்ககிட்ட நைசா பேசி என் கண்ணின் போட்டோவை மட்டும் கொடுத்து, அவுங்க போட்டோவை வாங்கிடுவேன் எப்பூடி?? பேஸ்புக்கில் எனக்கு இன்னொரு பெயர் உண்டு அது தாங்க பேக் ஐடி அதன் பேர் சிந்து. சரிங்க போர் அடிக்குது நான்


தித்திப்பாய் ஒரு விபத்து

 

 (நவம்பர் 1981-ல் நடந்தது) ‘தற்கொலை செய்து கொள்ள வேண்டியதுதான் என்று முடி-வெடுத்தாயிற்று. சரி, எங்கே, எப்படி செய்து கொள்வது? விஷம் எங்கே கிடைக்கும்? மூட்டைப் பூச்சி மருந்து? அது எங்கு வேண்டுமானாலும் கிடைக்குமே. எது வேகம், எது வேதனை குறைவு? தண்டவாளத்தில் தலை கொடுத்தால்? ஏதோ சயனைடாமே, அது அதிவேகம் என்கிறார்களே, அது கிடைக்குமா? சரி, வேண்டாம், கயிறு? முழி பிதுங்கி, நாக்கு வெளியே தள்ளி.. கோரமாய் இருக்குமோ? கணவனின் முகம் பார்த்து கதறி அழ முடியாமல்


இனம்

 

 “டீச்சர் என்ன இனம்?” தமிழிரசி அயர்ந்து போனாள செல்வம் கொழிக்கும் மலேசிய நாட்டில், பள்ளிக்கூடங்களில் எல்லா முக்கியமான பாடங்களும் மலாய் மொழியில் இருந்ததால், `நீங்கள் எங்கள் மொழியைத்தான் பேச வேண்டியிருக்கிறது!` என்று அலட்டிக் கொள்வதுபோல் சில மாணவர்கள் நடந்து கொண்டார்கள். சீன, இந்திய இன ஆசிரியர்களின் பாடுதான் திண்டாட்டமாக இருந்தது. நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்களிடையே மொழி, மதம் மற்றும் பழக்கவழக்கங்களில் பல்வித வேறுபாடுகள் இருந்தாலும், மேலோட்டமாக ஒற்றுமையும் இருந்தது. பண்டிகை காலங்களில், பிற இன நண்பர்கள் வீட்டுக்குப்


தொடு திரை

 

  அன்றைய தினம் பணி முடிந்து பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலுள்ள ஓர் உணவகத்திற்குள் நுழைந்தேன் . ஒருவர் என் பின்னால் நின்றபடி எனது தோளை இறுகப்பற்றினார்.நான் யாரென்று திரும்பிப்பார்த்தேன்.அவர் முத்தலீப் பாய். ஆறடி உயரத்தில் வெளீர் ஆடையில் நின்றுக்கொண்டிருந்தார். “ பாய் …………… ” என்றவாறு விளித்தேன். என்னை அவருக்கே உரித்தான கரிசனத்தோடு பார்த்தார். அதற்கு பிறகு கொஞ்ச நேரம் நலம் விசாரிப்புகள், குடும்ப நிலவரங்கள் என சம்பிரதாய இத்யாதிகளுக்குள் சென்றோம். அவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்