கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: June 2014

105 கதைகள் கிடைத்துள்ளன.

வேலைக்காரி!

 

 என் தோழிக்கு மூணு வேளை சாப்பாடும், போட்டுக்கத் துணியும் கொடுத்தா வீட்டிலேயே தங்கி, கூப்பிட்ட நேரத்திற்கு ஆஜராகி இரவு பகல் எந்த நேரத்திலும் வேலை செய்ய ஒரு வேலைக்காரி தேடிக் கொண்டிருந்தாள்! இந்தக் காலத்தில் நடக்கிற காரியமா இது? எனக்கு நம்பிக்கை இல்லை! ஆனால் இந்த முறை அவள் வீட்டிற்குப் போன பொழுது தான் பார்த்தேன்! அவள் நினைச்சதை சாதித்து விட்டாள்! அவள் வீட்டுச் சமையறையில் ஒரு வயசான அம்மா சமையல் வேலையில் தீவிரமாக ஈடு பட்டிருந்தார்கள்.


இன்னொரு ரகசியம்

 

 அவளது பெயர் எனக்கு முதலிற் தெரிந்திருக்கவில்லை. பின்னர் அது தெரியவரும் என்றும் நினைத்திருக்கவில்லை. நூற்றுக்கணக்கான பெண்கள் மத்தியில் அவள் மட்டுமே சற்று வித்தியாசமாக என் கண்களிற் பட்டது உண்மைதான். எனினும் பெயரைத் தெரிந்துகொள்ள வேண்டுமென நான் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. எங்களது பல்கலைக்கழகம் விடுமுறை விட்டிருந்த நேரம். அப்போது பாடசாலைகளில் ஏ.எல். பரீட்சைகளும் ஆரம்பித்திருந்தன. எனது மாமனார் ஒரு சிறந்த ஆசிரியர். பரீட்சைகளை ஒழுங்காக நடத்தி முடிப்பதில் அனுபவம் பெற்றவர். பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவனான நான்


2042

 

 அன்று காலை வெகு சீக்கிரமே எழுந்து புறப்பட வேண்டியிருந்த்து. என் கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். அதில் நேரம் காலை 8:40 எனவும், நாள் 14/06/2042 எனவும் காட்டிக்கொண்டிருந்தது. 10மணிக்கு, மருத்துவரிடம் எனக்கு அப்பாயின்மெண்ட். அந்த க்ளீனிக்கிற்குப் பயணம் செய்ய 32வது மாடியிலிருந்த என் வீட்டிலிருந்து லிஃப்டில் கீழே இறங்கி, சாலையை அடைந்தேன். “இந்த 2042 ஆம் ஆண்டு ஆரம்பித்த நாளிலிருந்தே, நமக்கு ஒரே அலைச்சல் தான், வெயில் வேறு கொல்லுகிறது” என்று புலம்பிக்கொண்டே பேருந்து நிறுத்ததிற்கு வந்தேன். நகரத்தில்


காலத்தால் அழியாத கல்யாணம்

 

 இரண்டு மணித்தியாலங்களாய் துலா மிதித்துக் கொண்டிருந்தார் சுந்தரம். இவ்வளவு நேரமும் அவர் வாய் திறந்து ஒரு வார்த்தையும் பேசவில்லை.. பட்டையால் தண்ணீர் அள்ளி இறைத்துக் கொண்டிருந்த, பரமானந்தத்திற்கு ஆச்சரியமாக இருந்தது. “என்ன மச்சான் சுந்தரம்? மற்ற நாளிலையெண்டால் இத்தறுதிக்கு, துலா மிதிச்சபடி எத்தினை பாட்டுப் பாடுவியள்.. எத்தினை புதினம் சொல்லுவியள். இண்டைக்கென்ன மெளன விரதமே? “இறைப்பு முடியட்டும் துலாவிலையிருந்து, இறங்கி வந்து சொல்லுறன்”. சுந்தரம் சொல்லி முடித்த போது கடைசிப் பாத்திக்குத் தண்ணீரைத் திருப்பி விட்டு இவர்களை


காற்று வெளியல்ல, கால் விலங்குதான்

 

 சூரியக் கதிர்களை வாரி இறைத்த மாதிரி,, மேனி முழுக்கவல்ல, பருவத்துக்கு வராத மனசெங்கும் ஒரு பொன்னான உணர்ச்சிகளில் சூடேறித் தளும்பாத பட்டுச் சிறகுகளைக் கொண்ட மிக மென்மையான மனம் அப்போது அவளுக்கு. வயது ஒன்பதாகி விட்ட நேரம் அவளுக்கு முன்னால் காற்று வெளிச் சஞ்சாரமாக ஒளி வானமே தரைக்கு இறங்கின மாதிரி அவளுடைய அந்தச் சின்னஞ்சிறு கிராமம். யாழ்ப்பாண நகரை ஒட்டியல்ல அதற்கப்பால் வெகு தொலைவில் எட்டு மைல் கல் தூரத்தில் அவள் பிறந்து வளர்ந்து விளையாடித்