கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: June 2014

105 கதைகள் கிடைத்துள்ளன.

எலி ஜோசியம்

 

 சாலையில் பிரதானமான இடம் அது. அவ்விடம், அந்த பூங்கா ஓட்டிய இருந்தது. நடைபாதை நடைப் பயில்வோர்கள், அந்த இடம் தாண்டியே பூங்காவிற்குள் செல்லவார்கள். வாகன போக்குவரத்தும், மக்கள் நெரிசலும் அங்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அந்த பூங்காவின் மதில் சுவர் ஓட்டி, ஒரு பெரிய மரம். அந்த மரத்தில் ஒரு விளம்பர பலகையில், “இங்கு எலி ஜோசியம் பார்க்கப்படும் உங்கள் எதிர்காலம் சிறந்த முறையில் கனித்து சொல்லப்படும்” என்று தொங்கவிடப்பட்டு, காற்றில் பலமாக ஆடிக்கொண்டிருந்தது. அது ஆடிமாதக்


ஐஸ்க்குச்சி…

 

 கருத்து நீண்டு கிடக்கிறது சாலை,எட்டிப்பிடிக்கநினைத்தயாரோ முடியாமல் போனதனால் அப்படியே விட்டுவிட்டதைப்போல/ கண்ணுக் கெட்டிய தூரம் வரையாய் நீண்டுவளைந்து நெளிந்திரு ந்த கறுப்பு பார்ப்பதற்குஅழகாகவே இருந்தது.ஒருமுனையை பிடித்துத்தூக்கினால் மறு முனை எழுந்து நிற்கும் போலானதொரு தோற்றம். எதுநன்றாக இருக்கிறதோ அது நன்றாகவே இருக்கட்டும்,எது நன்றாக இல்லையோ அது நன்றாகஇல்லாமல்போய் விடட்டும்.எ ன்னகெட்டுப்போனது இப்பொழுது?யாரோஒருவர் சொன்னஅசரீரி காற்றுவாக்கில் வந்து காதில் விழுந்ததாக/ ஏற்கனவே இருந்த கறுப்பு வர்ணத்தின் மேல் கொட்டப்பட்ட கறுப் புப்பெயிண்ட்காய்ந்துஅழகுகாட்டியதுபோலவும்நீண்டிருந்தகருங்கூந்த லாயும் சாலை/ சற்றைக்கு முன்தான் பெய்திருந்த


அழகாய் பூக்குதே! சுகமாய் தாக்குதே!

 

 ” ஹாய் கீதா என்னோட மாமா அதான் உன்னோட அப்பா என்ன சொல்றார்? ” ” குத்துக்கல்லுக்கு கல்யாணம் செஞ்சு வெச்சாலும் வைப்பாரம், உங்களுக்கு என்னைத் தர மாட்டாராம்! ” “ஏன் நான் உன்ன வெச்சு காப்பாத்த மாட்டேனாமா, இல்ல கல்யாணம் செஞ்சுட்டு கழட்டி விட்டுடுவேனாமா? ” ” இந்த லொள்ளுதானே வேண்டாங்கறது, அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சீங்களா? ” ” எங்கம்மாகிட்டே பேசினேன் , அவங்க அண்ணணை அதான் உங்கப்பனை எதிர்த்து ஒண்ணும் செய்ய மாட்டாங்களாம்.


ஆசிர்வாதம்!!!

 

 “அம்மா… நாளைக்கு திங்க கிழம ஃபைனல் செமஸ்டர் எக்ஸாம். ஒரு வாரத்துக்கு, நடுவ லீவே இல்லாம. எப்படியாவது பேயா படிக்கணும்” “பரிட்சை முடிஞ்சதும்… நீ வீட்டுக்கு வந்துட்டு போனா நல்லாருக்கும். ஆனா உன்னை தான் உடனே வேலைக்கு சேரச் சொல்ராங்களே”?” “ம்..இங்கிருந்து நேரா நான் வேலைக்கு ஜாய்ன் பண்ணனும். அப்பாவ வர்ற மூனாம் தேதி இங்கே வரச்சொல்லு!” “தாத்தா தான் நீ எப்ப வருவே நீ எப்ப வருவேன்னு நாளைக்கி ரெண்டு தரம் கேக்குரவோ. உனக்கு படிக்கும்


மிச்சம்!

 

 காலை நேரம்.‘டவுன் பஸ்’லிருந்து இறங்கி வந்த குமாரைப் பார்த்த நண்பன் முத்துசாமி “ என்ன குமாரு உன் டூ வீலர் என்னாச்சு?….டவுன் பஸ்ஸில் வருகிறாய்?..” “ தினசரி பெட்ரோல் விலை ஏறிட்டே போகுது!….டூ வீலரில் வந்தா குறைந்தது ஐம்பது ரூபா ஆகுது!….’டவுன் பஸ்’னா பத்து ரூபாயோடு போயிடும்!….” “ அடேயப்பா!….நிறைய மிச்சம் பிடிச்சு பழகிட்டே!…” என்று நண்பர் முத்துசாமி சிரித்துக் கொண்டே போய் விட்டார். ஆபிஸில் தன் செக்சனில் நுழைந்த குமாரைப் பார்த்து, “என்னடா…குமார்!…..உன்னோட பேண்ட் சர்ட்