கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: June 2014

103 கதைகள் கிடைத்துள்ளன.

உறவு சொல்ல வேண்டும்

 

 வாசல் வரை வந்து வழியனுப்பினாள். “பார்த்து நடந்துக்குங்க! கோபப்பட்டுராதீங்க!” எனக்குள் சுள்ளென்றது. “எனக்குத் தெரியாதா?” என்றேன் எரிச்சலுடன். கையில் கனத்துக் கொண்டிருந்த பை உள்ளே எவர்சில்வர் சம்படத்தில் இனிப்பும், முறுக்கும். அவ்வளவும் சித்தப்பா வீட்டுக்கு. மூன்று நான்கு வருடங்களாய்ப் பேச்சு வார்த்தை அற்றுப் போன குடும்பங்கள். என்னவோ திடீர் ஞானோதயம்! போன ஞாயிறு பகல், சாப்பாடு ஆனதும் பேசிக் கொண்டிருந்தபோது தோன்றியது. “ஏம்மா! நம்ம சித்தப்பாவோட போக்குவரத்தே நின்னு போச்சே?” டி.வி சீரியலில் ஏதோ பழைய படக்


அந்தக் கிழவனைக் காணவில்லை

 

 நாங்கள் இருக்கும் குடியிருப்பிற்கு சற்றுத் தொலைவில் ஓர் ஆறு ஓடிக்கொண்டிருக்கின்றது. அது தன்னுடைய ரகசியங்களைப் பொத்திக் கொண்டே ஓடிக் கொண்டிருக்கின்றது. ஒரு மாலை நேரச் சூரியனும் ஆறும். ஒரு கிறோந்தல் பட்சியும் ஆறும். ஆறும் கிழவனுமாக பல நாட்கள் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். எந்த ஓசையும் எழுப்பாமல் ஓடும் மாயத்தை அவர் அறியாதவராக இருந்து பார்த்துக்கொண்டே இருப்பார். அணைகளில் மோதி எழுப்பும் சிற்றலைகளில் அவரது மனது அலைந்து கொண்டிருக்கும். ‘நையின்ரி தேடப் படுகின்றார்” என பல குரல்கள் கட்டடத் தொகுதியில்


விலங்குடைப்போம்

 

 சங்கவி மெலிதாக திரைச்சீலையை விலக்கிப் பார்த்தாள். ஓ… கண்ணுக்குத் தெரிந்த தூரம் வரை நிலம், மரங்கள், வீட்டுக் கூரைகள்… என்று எல்லாவற்றையும் வெண்பஞ்சு போன்ற வெள்ளைப் பனி போர்த்தியிருந்தது. ஆர்ப்பரிக்கும் கடல் அலையின் மெலிதான ஓசை, ஆலும் அரசுமாய் குடை விரித்திருக்க, அலரிகளால் எல்லை போட்டு அழகாய் அமைந்திருக்கும் ஆத்தியடிப் பிள்ளையார் கோவில்… என்று எமது மண்ணுக்குரிய வாசனைகளும், அழகுகளும் ஒரு புறமும், கடந்த சில வருடங்களாக இராணுவமும், ஷெல்களும், கிபீர்களும் அக்கிரமங்களும், தமிழர்கள் மீது பொழியப்படும்