கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: June 19, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

ரயிலில் வந்த மயில்

 

 தாம்பரம் ரயில் நிலையம். காலை 8 மணி. ரயிலுக்காகக் காத்துக் கொண்டிருந்தான் சந்துரு. நேற்று நடந்ததை எண்ணினான். மயிலை ரயில் நிலையத்தில் நேற்றுதான் அவளை முதன்முதல் பார்த்தான். 5 அடி 8 அங்குலம் உயரம் அவள். கடலை மாவு நிறம், சுருள் முடி, சற்றே பெரிய நெற்றி. அதில் சின்ன வட்ட பொட்டு. காதில் தவழ்ந்துகொண்டிருந்த முடியைத் தாண்டி அவள் அணிந்திருந்த தங்கத்தோடு ஜொலித்தது. புன்னகையை அணிந்திருந்தன அவள் உதடுகள். நிலவைப் போல் வட்டமாக இருந்தது அவள்


அன்பு தம்பி

 

 சிவராமன் தன்னுடைய அலுவலகப் பணியில் மூழ்கியிருந்தபோது அவனுடைய கைப்பேசியில் அழைப்பு வந்தது. “ஹலோ யாரு” என்றான். “அன்பு தம்பி இருக்காங்களா” என்றது அந்த முனையில் ஒரு அம்மாவின் தளர்ந்த குரல். அன்பு தம்பி என்றவுடன் அவனுக்கு சட்டென்று சிரிப்பு வந்தது. அதை அடக்கிக்கொண்டு “அது போல் யாரும் இல்லீங்க. ராங் நம்பர்” என்று கைப்பேசியை அனைத்தான். சில நாட்கள் கழித்து அதே அம்மாவின் அழைப்பு மீண்டும். யாரும் இல்லை என்று வைத்தான். அதே மாதத்திற்குள் இரண்டு மூன்று


தேடி வந்த தேவதை

 

 “ஏண்டி சனியனே என் பேனாவை நீ எடுத்தியா? உன்னாலதான் வீட்டில பிரச்சனையே…. எங்கடி போய்த் தொலைஞ்ச….? கத்திக்கொண்டே மகேஷ் அறையை விட்டு வெளியே வருவதற்கும், அதற்குள் அங்கே கைஅக்குள்களில் கட்டையுடன் கண்களில் நீருடன் தங்கை இளவழகி வந்து சேர்ந்தாள். “அண்ணே …..நான் எடுக்கலேண்ணே……வேணா தேடித்தரவா?” கெஞ்சினாள். *வேண்டாம்……உன்னைப்பார்க்கவே எனக்குப் பிடிக்கல…….மொதல்ல இடத்த காலிபண்ணு.. அமிலம் கொட்டியது வார்த்ததைகளில். அண்ணனின் கோபம் அவளுக்குப் புதிதல்ல. அவளுக்கு ஒன்றரை வயதில் இளம்பிள்ளைவாதம் வந்ததால் கால்கள் இரண்டும் செயலிழந்து போயின. அதனால்தானோ


கரையைத் தொடாத ஓடங்கள்…

 

 பல்கலைக்கழகத்தில் நுழைந்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்தக் காலத்தில் நான் புதிதாக என்ன சாதித்து விட்டேன். உடலால்… உள்ளத்தால்… அறிவால் வளர்ந்திருக்கிறேனா? எனக்குத் தெரியாது. பரீட்சைகளில் சித்தியடைவதால் நாம் வளர்கின்றோம் என்ற பொய்யான பிரமையில்… போலியான கருதுகோளில்… ஏமாந்து பெருமிதம் கொண்டவர்களில் நானும் ஒருவன். நான் பல்கலைக்கழக நுழைவுப் பரீட்சையில் சித்தியடைந்தது… பெர்ஸ்ட்போம் வந்தது… பின் செகண்ட்போம் வந்தது… பல்கலைக்கழகத்தில் நுழைந்தது எல்லாமே ஒரு எக்சீடன்டுதான். ஏனென்றால் நான் பரீட்சை பாஸ் பண்ணுவேன், பல்கலைக்கழகத்துக்குப் போவேன், பட்டதாரியாவேன்


நூலிழை இறகுகள்

 

 ”பிரியாணி மட்டுந்தான் இருக்கு சார். வான் கோழி, பிஷ்ஷு, மட்டனு,காடை”சர்வர் சொன்னதும் சரவணன் காளீஸ்வரன் சித்தப்பா முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்து “ரெண்டு சிக்கன் கொண்டு வாங்க என்றான். சித்தப்பாவுடன் ஊரில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பிரியாணி சாப்பிட்ட ஞாபகம் வந்தது.. அப்போது தாஜ் ஹோட்டல் பிரியாணி தான் ஊரில் பிரபலம். ஒவ்வொரு சனிக்கிழமை மத்தியானமும் சரவணனை கேரியரில் இரண்டு பக்கமும் கால் போட்டு உட்காருகிற மாதிரி உட்கார வைத்து விட்டு ”உள்ள விட்டுறாதடா” என்று ஒவ்வொரு மிதிக்கும் சொல்லுவார்.